ஐபோன் 5 கவர்: விடுமுறைப் பரிசாக அமையுமா?

Posted By: Staff

ஐபோன் 5 கவர்: விடுமுறைப் பரிசாக அமையுமா?

இன்னும் சில தினங்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புது வருடப்பிறப்பயொட்டி விடுமுறை நாட்கள் வரப்போவதால், உங்கள் நண்பர்களுக்கும், பிடித்தமானவர்களுக்கும் என்ன பரிசு தரலாமென யோசிதுக்கொண்டிருப்பவரா நீங்கள்? அப்படியென்றால் GizBot தளம் ஒரு யோசனையைத் தருகிறது.

 

உங்கள் நண்பர் அல்லது பிடித்தமானவர், புதிய தொழில்நுட்ப விரும்பியென்றால் அவர் கண்டிப்பாக அணைத்து புதிய சாதனங்களையும் தன்னகத்தே வைத்திருப்பார். அவர்களைப் போன்றவர்களுக்கு ஐபோன் 5 கவரை விடுமுறைதின பரிசாகக்கொடுத்து அசத்துங்கள்.

 

ஜப்பானைச் சேர்ந்த ஒரு இணையதள பல்பொருள் விற்பனயாளர், சுமார் ரூ.4000 மதிப்பிலான ஒரு "ரைஸ் க்ராக்கர் கேஸ்" என்ற ஐபோன் 5க்கான கவரை வடிவமைத்து விற்பனையும் செய்துவருகின்றனர்.

 

ரைஸ் க்ராக்கர் கேஸின் சிறப்பம்சம்கள்:

 

  • ஐபோன் 5க்கு மட்டும் பொருந்தக்கூடியது.

  • இது உப்பு மற்றும் காவிநிற அரிசியால் செய்யப்பட்டது.

  • மேரிகோ என்பரால் வடிவமைக்கப்பட்டது.

  • இது கீழே விழுந்தாலோ அல்லது பலமாக அழுத்தினாலோ உடையக்கூடியது என்பதை நினைவில் கொள்க.
100 சதவிகிதம் பாதுகாப்பு விரும்புபவர்கள் தயவுசெய்து இதைப்பயன்படுத்த வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது. உண்மையில் இது சிறந்த விடுமுறைப் பரிசாக அமையுமா?
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot