Home
Mobile

ஐபோன் 4-எஸ் vs மோட்டோரோலா டிராய்டு பயோனிக்: ஒப்பீடு

By Shajahan
ஐபோன் 4-எஸ் vs மோட்டோரோலா டிராய்டு பயோனிக்: ஒப்பீடு

வாடிக்கையாளர்களை போட்டி போட்டுக் கொண்டு வாங்கச் செய்யும் பல மொபைல்கள் உருவாகிக் கொண்டு தான் இருக்கிறது. அதற்கு உதாரணமாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 4எஸ் மொபைலையும், மோட்டோரோலாவின் டிராய்டு பையோனிக் மொபைலையும் சொல்லலாம்.

மக்களின் மனதில் பெரிய அளவில் இடம் பிடித்த மொபைல்கள் இது என்று கூறலாம். இந்த இரண்டு மொபைல்களுமே எல்சிடி தொழில் நுட்பம் கொண்ட மொபைல்கள் என்று கூறலாம். மோட்டோரோலா டிராய்டு 4.3 இஞ்ச் திரை வசதியையும், 960 X 540 திரை துல்லியத்தையும் கொண்டது.

ஆப்பிள் ஐபோன் 4எஸ் 3.5 இஞ்ச் திரையையும், 960 X 640 திரை துல்லியத்தை கொடுக்கிறது.ஆப்பிள் ஐபோன் 4-எஸ் மொபைல் தன்னுடைய சொந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே இயங்குகிறது. மோட்டோரோலா டிராய்டு பையோனிக் மொபைல் ஆன்ட்ராய்டு 2.3.4 ஜின்ஜர்பிரீட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது.

இந்த இரண்டு மொபைல்களைமே 8 மெகா பிக்ஸல் கேமராவினைகொண்டுள்ளது. இதனால் மிக சிறந்த துல்லியம் கொண்ட புகைப்படத்தையும், வீடியோவினையும் பெற முடியும். மேலும், இரண்டிலும் வீடியோ காலிங் வசதிக்காக விஜிஏ முகப்பு கேமராவும் உண்டு.

ஆப்பிள் ஐபோன் 4எஸ் மொபைல் 3ஜி தொழில் நுட்பத்தை கொண்டுள்ளது. ஆனால் மோட்டோ மொபைல் இதில் கொஞ்சம் கூடுதலான அம்சத்தைக் கொண்டுள்ளது. மோட்டோ டிராய்டு பையோனிக் மொபைல் 4ஜி தொழில் நுட்பத்தையும் கொடுக்கிறது. இந்த தொழில் நுட்பத்தின் மூலம் அதி வேகத்தில் அப்லோட் மற்றும் டவுன்லோட் வசதியினை பெற முடியும்.

ஆப்பிள் டிராய்டு பையோனிக் மொபைல் 1,420 எம்ஏஎச் பேட்டரியையும், மோட்டோரோலா டிராய்டு பையோனிக் 1,735 எம்ஏஎச் பேட்டரியினையும் வழங்குகின்றது.

ஆப்பிள் மொபைலை விடவும், டிராய்டு பையோனிக் மொபைல் நீடித்து உழைக்கும் பேட்டரியினை கொடுக்கின்றது. மோட்டோ டிராய்டு பையோனிக் மொபைல் 10 மணி நேரமும் 30 நிமிடம் டாக் டைடையும், ஆப்பிள் ஐபோன்-4எஸ் மொபைல் 8 மணி நேரம் டாக் டைம் வசதியினையும் கொடுக்கிறது.

மோட்டோரோலா டிராய்டு பையோனிக் மொபைல் ரூ.30,000 ஒட்டிய விலையில் கிடைக்கும். ஆப்பிள் ஐபோன் 4-எஸ் மொபைல் ரூ.35,000 விலையில் இருந்து 40,000 விலை வரையில் கிடைக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X