Home
Mobile

புகழ் பெற்ற 2 ஸ்மார்ட்போன்களின் ஓப்பீடு!

By Super

புகழ் பெற்ற 2 ஸ்மார்ட்போன்களின் ஓப்பீடு!
மக்களிடையே அதிக வரவேற்பு பெற்ற ஸ்மார்ட்போன்கள் ஐபோன் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்-2. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் ஒப்பீட்டையும் இங்கே பார்க்கலாம்.

ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போன் 3.5 இஞ்ச் அகன்ற தொடுதிரை வசதியை வழங்கும். ஆனால் திரையை பொருத்த வரையில் சாம்சங் கேலக்ஸி எஸ்-2 ஸ்மார்ட்போன், ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போனையும் விட பெரிய பிரம்மாண்ட திரையை கொண்டது.

கேலக்ஸி எஸ்-2 ஸ்மார்ட்போன் 4.3 இஞ்ச் அகன்ற தொடுதிரையினை வழங்கும். சாம்சங் கேலக்ஸி எஸ்-2 ஸ்மார்ட்போனின் திரை 480 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும். ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போன் 640 X 960 பிக்ஸல் திரை பிக்ஸல் திரை துல்லியத்தினையும் இந்த ஸ்மார்ட்போன் வழங்கும்.

ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போன் 140 கிராம் எடையையும், கேலக்ஸி எஸ்-2 ஸ்மார்ட்போன் 116 கிராம் எடையையும் கொண்டது. இதனால் சுலபமாக கையாளலாம்.

ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்போனான ஐபோன் 4-எஸ் ஐஓஎஸ்-5 ஆப்பரேட்டிங் இயங்குதளத்தில் இயங்கும். சாம்சங் கேலக்ஸி எஸ்-2 ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 2.3.4 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டது. இந்த ஸ்மார்ட்போன் ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்டேஷனையும் வழங்கும்.

ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போன் 8 மெகா பிக்ஸல் கேமராவினையும், விஜிஏ முகப்பு கேமராவினையும் கொண்டது. சாம்சங் கேலக்ஸி எஸ்-2 ஸ்மார்ட்போன் 8 மெகா பிக்ஸல் கேமராவினையும், 2 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் வழங்கும். இதன் மூலம் சிறப்பான புகைப்படங்களையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் எளிதாக பெற முடியும்.

கேலக்ஸி எஸ்-2 ஸ்மார்ட்போனில் 16 மற்றும் 32 ஜிபி மெமரி வசதியினை பயன்படுத்த முடியும். ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போனில் 16 ஜிபி, 32 ஜிபி, 64 ஜிபி என்று மூன்று விதமான ஜிபி வசதிகளை பெற்று பயனடைய முடியும். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க் தொழில் நுட்பத்திற்கு எளிதாக சப்போர்ட் செய்யும்.

ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போனில் உள்ள 1,432 எம்ஏஎச் பேட்டரியின் மூலம் நீடித்து உழைக்கும் பேட்டரிக்கு சப்போர்ட் செய்யும். சாம்சங் கேலக்ஸி எஸ்-2 ஸ்மார்ட்போன் 1,650 எம்ஏஎச் பேட்டரியும் உயர்ந்த தொழில் நுட்பத்தினை பயன்படுத்த சிறப்பாக உதவும்.

சாம்சங் கேலக்ஸி எஸ்-2 ஸ்மார்ட்போன் ரூ,.30,000 விலையை கொண்டது. ஆப்பிள் ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போன் ரூ.35,000 விலையில் இருந்து 64,000 விலை வரையில் கிடைக்கும். ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போனின் விலை அதன் மெமரி ஜிபி அளவை பொருத்து உள்ளது.

ஆனால் இந்த 2 ஸ்மார்ட்போன்களுமே சிறப்பான தொழில் நுட்பத்தினை வழங்கும் என்று தாராளமாக கூறலாம். ஏனெனில் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே மக்கள் மத்தியில் சிறப்பான செல்வாக்கை பெற்றது. உயர்ந்த தொழில் நுட்பம் இல்லை என்றால் மக்கிளிடையே சிறப்பான வரவேற்பை பெற முடியாது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X