நாடே எதிர்பார்த்த ஐபோன் நாளை வருகிறது.. 48எம்பி கேமரா.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
ஆப்பிள் (Apple) நிறுவனம் நாளை (செப்டம்பர் 9) ஐபோன் 18 ப்ரோ, ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ், போல்டபிள் ஐபோன் (Foldable iPhone), ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் மற்றும் பல சாதனங்களை அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு ஐபோன் 18 ப்ரோ போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது.
ஐபோன் 18 ப்ரோ அம்சங்கள் (iPhone 18 Pro Specifications): 6.3-இன்ச் ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே உடன் ஐபோன் 18 ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120Hz ப்ரோமோஷன் (120Hz ProMotion) மற்றும் பல சிறப்பான வசதிகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தரமான ஏ20 ப்ரோ (A20 Pro) சிப் மற்றும் பில்ட் 2என்எம் பிராசஸர் இந்த ஐபோனில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஐபோன் மாடலுக்கு வழங்கப்படும் சிப் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஆப்பிள் நிறுவனம்.
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் ஐபோன் 18 ப்ரோ மாடல் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் ஐஓஎஸ் 27 (iOS 27) மூலம் ஐபோன் 18 ப்ரோ மாடல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிளின் அடுத்த தலைமுறை C2 மோடம் இந்த புதிய ஐபோனில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
48எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இந்த ஐபோன் 18 ப்ரோ மாடலில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக இந்த ஐபோன் மூலம் மிகவும் துல்லியமான வீடியோக்கள் மற்றும் படங்களை எடுக்க முடியும். அதேபோல் இந்த போனில் முன்பக்கம் 18எம்பி செல்பி கேமரா வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த புதிய ஐபோனில் உள்ளன.
ஐபோன் 18 ப்ரோ போனில் டைனமிக் ஐலேண்டும் சிறியதாக மாறக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இதன் செல்பீ கேமராவை சுற்றிய டிஸ்பிளே பிக்சல்களை பில்-ஷேப்ட் (Pill-Shaped) வடிவில் கவர் செய்திருக்கும். இந்த பில்-ஷேப்ட் டிசைன் நோட்டிபிகேஷன்களுக்கு ஏற்றவாறு அளவில் மாறிக்கொள்ளும். டீப் பர்கண்டி (deep burgundy), லைட் கிரே (light gray), பிளாக், மிஸ்டி ப்ளூ (misty blue) ஆகிய கலர்களில் இந்த புதிய ஐபோன் 18 ப்ரோ மாடல் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த புதிய ஐபோன் மாடல் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 4288எம்ஏஎச் பேட்டரி வசதி ஐபோன் 18 ப்ரோ மாடலில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த போனை வாஙகினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஐபோன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகளும் உள்ளன.
5ஜி சப்போர்ட், ஃபேஸ் ஐடி, மேக்சேப்(MagSafe) போன்ற பல சிறப்பான வசதிகள் உடன் ஐபோன் 18 ப்ரோ மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த ஐபோன் ரூ.1,39,900 விலையில் அறிமுகமாகும் என தகவல்கள் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications
