ஐபோன் 18 ப்ரோ மற்றும் 18 ப்ரோ மேக்ஸ் மாடல்களின் இந்திய விலை VS துபாய் விலை.. எவ்வளவு வித்தியாசம்?
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் டியோ (iPhone Duo), ஐபோன் 18 ப்ரோ ( iPhone 18 Pro), ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் (Phone 18 Pro Max), ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 4, ஆப்பிள் ஏர்பாட்ஸ் 5 ஆகிய சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் இந்த சாதனங்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக ஆப்பிள் ஐபோன் டியோ (Apple iPhone Duo) என்ற அழைக்கப்படும் மடக்கும் வகையிலான ஐபோன் தரமான அம்சங்களுடன் வெளியாகி உள்ளது.
ஐபோன் டியோ, ஐபோன் 18 ப்ரோ, ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்களின் இந்தியா விலைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மற்ற நாடுகளில் இந்த ஐபோன்களின் விலை நிர்ணயம் என்ன என்கிற பார்வை இதோ.

ஐபோன் 18 ப்ரோ இந்திய விலை
256ஜிபி மெமரி கொண்ட ஐபோன் 18 ப்ரோ மாடலின் விலை ரூ.1,64,900-ஆக உள்ளது.
512ஜிபி மெமரி கொண்ட ஐபோன் 18 ப்ரோ மாடலின் விலை ரூ.1,89,900-ஆக உள்ளது.
1டிபி மெமரி கொண்ட ஐபோன் 18 ப்ரோ மாடலின் விலை ரூ.2,39,900-ஆக உள்ளது.
ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் இந்திய விலை
256ஜிபி மெமரி கொண்ட ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை ரூ.1,79,900-ஆக உள்ளது.
512ஜிபி மெமரி கொண்ட ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை ரூ.2,04,900-ஆக உள்ளது.
1டிபி மெமரி கொண்ட ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை ரூ.2,54,900-ஆக உள்ளது.
2டிபி மெமரி கொண்ட ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை ரூ.3,29,900-ஆக உள்ளது.
ஆப்பிள் ஐபோன் டியோ இந்திய விலை
256ஜிபி மெமரி கொண்ட ஆப்பிள் ஐபோன் டியோ மாடலின் விலை ரூ.2,99,900-ஆக உள்ளது.
512ஜிபி மெமரி கொண்ட ஆப்பிள் ஐபோன் டியோ மாடலின் விலை ரூ.3,24,900-ஆக உள்ளது.
1டிபி மெமரி கொண்ட ஆப்பிள் ஐபோன் டியோ மாடலின் விலை ரூ.3,74,900-ஆக உள்ளது.
2டிபி மெமரி கொண்ட ஆப்பிள் ஐபோன் டியோ மாடலின் விலை ரூ.4,49,900-ஆக உள்ளது.
அமெரிக்காவில் ஐபோன்களின் விலை
அமெரிக்காவில் ஐபோன் 18 ப்ரோ மாடலின் ஆரம்ப விலை $1,199 (இந்திய மதிப்பில் ரூ.1,14,000)-ஆக உள்ளது.
அமெரிக்காவில் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடலின் ஆரம்ப விலை $1,299 (இந்திய மதிப்பில் ரூ.1,23,600)-ஆக உள்ளது.
அமெரிக்காவில் ஆப்பிள் ஐபோன் டியோ மாடலின் ஆரம்ப விலை $1,299 (இந்திய மதிப்பில் ரூ.1,90,200)-ஆக உள்ளது.
துபாயில் ஐபோன்களின் விலை
துபாயில் ஐபோன் 18 ப்ரோ மாடலின் ஆரம்ப விலை 5.999 AED (இந்திய மதிப்பில் ரூ.1,32,000)-ஆக உள்ளது.
துபாயில் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடலின் ஆரம்ப விலை 5.499 AED (இந்திய மதிப்பில் ரூ.1,42,400)-ஆக உள்ளது.
துபாயில் ஆப்பிள் ஐபோன் டியோ மாடலின் ஆரம்ப விலை 8.499 AED (இந்திய மதிப்பில் ரூ.2,20,100)-ஆக உள்ளது.
இங்கிலாந்தில் ஐபோன்களின் விலை
இங்கிலாந்தில் ஐபோன் 18 ப்ரோ மாடலின் ஆரம்ப விலை £1,199 (இந்திய மதிப்பில் ரூ.1,53,875)-ஆக உள்ளது.
இங்கிலாந்தில் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடலின் ஆரம்ப விலை £1,299 (இந்திய மதிப்பில் ரூ.1,66,700)-ஆக உள்ளது.
இங்கிலாந்தில் ஆப்பிள் ஐபோன் டியோ மாடலின் ஆரம்ப விலை £1,999(இந்திய மதிப்பில் ரூ.2,56,540)-ஆக உள்ளது.

சிங்கப்பூரில் ஐபோன்களின் விலை
சிங்கப்பூரில் ஐபோன் 18 ப்ரோ மாடலின் ஆரம்ப விலை S$1,899 (இந்திய மதிப்பில் ரூ.1,42,850)-ஆக உள்ளது.
சிங்கப்பூரில் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடலின் ஆரம்ப S$2,099 (இந்திய மதிப்பில் ரூ.1,57,900)-ஆக உள்ளது.
சிங்கப்பூரில் ஆப்பிள் ஐபோன் டியோ மாடலின் ஆரம்ப விலை S$3,099 (இந்திய மதிப்பில் ரூ.2,33,100)-ஆக உள்ளது.
தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஆப்பிள் ஐபோன்கள் இந்தியாவில் தான் சற்று உயர்வான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில் இந்த ஐபோன்கள் சற்று குறைவான விலையில் விற்பனைக்கு வரும். அதேபோல் இந்த புதிய ஐபோன் சாதனங்களுக்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
