Home
Mobile

Apple ருத்ர தாண்டவம்.. OLED டிஸ்பிளே.. 48எம்பி கேமரா.. இந்த ஐபோனுக்கு தான் வெயிட்டிங்.. எந்த மாடல்?

ஆப்பிள் (Apple) நிறுவனம் வரும் செப்டம்பர் 9-ம் தேதி ஐபோன் 18 ப்ரோ, ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ், போல்டபிள் ஐபோன் (Foldable iPhone), ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் மற்றும் பல சாதனங்களை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் சாதனங்கள் இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் (iPhone 18 Pro Max) மாடலின் முக்கிய விவரக்குறிப்புகள் தற்போது ஆன்லைனில் கசிந்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இப்போது பார்க்கலாம்.

Apple ருத்ர தாண்டவம்..  இந்த ஐபோனுக்கு தான் வெயிட்டிங்.. எந்த மாடல்?

ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள் (iPhone 18 Pro Max Specifications): 6.9-இன்ச் ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே உடன் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடல் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120Hz ப்ரோமோஷன் (120Hz ProMotion) மற்றும் பல சிறப்பான வசதிகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளியாகும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சக்திவாய்ந்த ஏ20 ப்ரோ (A20 Pro) சிப் மற்றும் பில்ட் 2என்எம் பிராசஸர் இந்த ஐபோனில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஐபோன் மாடலுக்கு வழங்கப்படும் சிப் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஆப்பிள் நிறுவனம்.

12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடல் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் ஐஓஎஸ் 27 (iOS 27) மூலம் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆப்பிளின் அடுத்த தலைமுறை C2 மோடம் இந்த புதிய ஐபோனில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

48எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இந்த ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடலில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக இந்த ஐபோன் மூலம் மிகவும் துல்லியமான வீடியோக்கள் மற்றும் படங்களை எடுக்க முடியும். அதேபோல் இந்த போனில் முன்பக்கம் 24எம்பி செல்பி கேமரா வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த புதிய ஐபோனில் உள்ளன.

குறிப்பாக ஐபோன் 18 ப்ரோ மேக்ஸில் டைனமிக் ஐலேண்டும் சிறியதாக மாறக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இதன் செல்பீ கேமராவை சுற்றிய டிஸ்பிளே பிக்சல்களை பில்-ஷேப்ட் (Pill-Shaped) வடிவில் கவர் செய்திருக்கும். இந்த பில்-ஷேப்ட் டிசைன் நோட்டிபிகேஷன்களுக்கு ஏற்றவாறு அளவில் மாறிக்கொள்ளும். டீப் பர்கண்டி (deep burgundy), லைட் கிரே (light gray), பிளாக், மிஸ்டி ப்ளூ (misty blue) ஆகிய கலர்களில் இந்த புதிய ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடல் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

Apple ருத்ர தாண்டவம்..  இந்த ஐபோனுக்கு தான் வெயிட்டிங்.. எந்த மாடல்?

5200எம்ஏஎச் பேட்டரி வசதி ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடலில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த போனை வாஙகினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஐபோன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகளும் உள்ளன.

ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலின் ஆரம்ப விலை ரூ.1,49,900-ஆக உள்ளது. எனவே இந்த ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடல் சற்று உயர்வான விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்த போனின் விலை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் ரூ.1.55 லட்சம் அல்லது. ரூ.1.60 லட்சம் விலையில் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடல் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

photo credit: businesstoday, apple

Best Mobiles in India

English summary
iPhone 18 Pro Max price and specifications leaked ahead of September 9 launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X