Home
Mobile

ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் அறிமுகம்.. ஒஎல்இடி டிஸ்பிளே.. 48எம்பி கேமரா.. iOS 27.. என்ன விலை?

மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஆப்பிள் நிறுவனத்தின் சர்ப்ரைஸ் அண்ட் ஷைன் நிகழ்வில் புதிய ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் ( iPhone 18 Pro Max) மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஐபோன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளியாகி உள்ளது. இப்போது ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை மற்றும் அம்சஙகளை இங்கே பார்க்கலாம்.

ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள் (iPhone 18 Pro Max Specifications): 6.3-இன்ச் ஒஎல்இடி சூப்பர் ரெட்டினா XDR டிஸ்பிளே உடன் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120Hz ப்ரோமோஷன் (120Hz ProMotion), 3000 நிட்ஸ் பிரைட்னஸ், எச்டிஆர், ஆல்வேஸ்-ஆன் டிஸ்ப்ளே, செராமிக் ஷீல்ட் 2 புரொடெக்சன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் அறிமுகம்.. ஒஎல்இடி டிஸ்பிளே..என்ன விலை?

ஆப்பிளின் A20 ப்ரோ சிப் உடன் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் 2என்எம்-ஜென்ரேஷன் சிப், 7-கோர் ஜிபியு ஆதரவுகளுடன் இந்த ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இதில் டூயல் 16-கோர் நியூரல் இன்ஜின் ஆதரவும் உள்ளது.

C2 மோடம் ஆதரவுடன் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஐபோன் மாடல் ஒரு சிறிய டைனமிக் ஐலேண்டுடன் வரும். அதேபோல் இது iOS 27 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த சாதனம் வெளியாகி உள்ளது. குறிப்பாக இதில் பல்வேறு புதிய அம்சங்களைப் பயன்படுத்த முடியும்.

அதேபோல் Siri AI வசதியுடன் இந்த ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Siri AI என்பது Apple Intelligence-ஆல் இயக்கப்படும் Siri-யின் முற்றிலும் புதிய பதிப்பாகும். இது மிகவும் தனிப்பட்டதாகவும், திறன் வாய்ந்ததாகவும், உரையாடல் தன்மை கொண்டதாகவும் உள்ளது. அதேபோல் இந்த Siri AI வசதி ஆனது தனியுரிமை மற்றும் பாதுகாப்பை மையமாகக் கொண்ட ஒரு அறிவார்ந்த தனிப்பட்ட மையமாக மாறுகின்றன என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடல் 48எம்பி மெயின் கேமரா + 48எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 48எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 4கே வீடியோ பதிவு செய்யும் ஆதரவு, மேம்பட்ட சினிமாட்டிக் ஷூட்டிங் ஆதரவு மற்றும் இந்த கூடுதல் எடிட்டிங் அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 18எம்பி கேமரா கொண்டுள்ளது ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடல். குறிப்பாக 256ஜிபி, 512ஜிபி, 1டிபி மற்றும் 2டிபி ஆகிய வேரியண்ட்களில் இந்த ஐபோன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஃபேஸ்ஐடி முக அங்கீகாரத்திற்கான ட்ரூடெப்த் கேமரா, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இந்த மாடலில் உள்ளன.

25W வரையிலான MagSafe மற்றும் Qi2 வயர்லெஸ் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடல். அதேபோல் இந்த சாதனம் ஒரே சார்ஜில் 45 மணி நேரம் வரை வீடியோ பிளேபேக் வழங்கும் என்று கூறப்படுகிறது. இந்த போனில் சிறந்த பேட்டரி ஆயுளை வழங்குவதாக அந்நிறுவனம் கூறுகிறது. மேலும் இது eSIM சப்போர்ட் கொண்டுள்ளது.

நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP68 ரேட்டிங்கை கொண்டுள்ளது ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடல். மேலும் இதில் 6 மீட்டர் வரை ஆழம், 30 நிமிடங்கள் வரை நீர் எதிர்ப்புத் திறன் இருக்கும் என ஆப்பிள் உறுதியளிக்கிறது. இந்த போனில் கேமரா கண்ட்ரோல் மற்றும் ஆக்சன் பட்டன்களையும் தக்கவைத்துக் கொள்கிறது ஆப்பிள் நிறுவனம். 5ஜி சப்போர்ட், வைஃபை 7, புளூடூத் 6, வைட்பேண்ட் சிப், த்ரெட் நெட்வொர்க்கிங் தொழில்நுட்பம், ரீடர் மோட், ஜிபிஎஸ் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஐபோனில் உள்ளன.

பிளாக், சில்வர்,க்ளேசியர் (Glacier), பர்கண்டி ஆகிய இந்த கலர்களில் ஐபோன் மாடல் விற்பனைக்கு வரும். மேலும் இந்த ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடலின் எடை 249 கிராம் ஆகும்.

ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் அறிமுகம்.. ஒஎல்இடி டிஸ்பிளே..என்ன விலை?

ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் விலை

256ஜிபி மெமரி கொண்ட ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை ரூ.1,79,900-ஆக உள்ளது.
512ஜிபி மெமரி கொண்ட ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை ரூ.2,04,900-ஆக உள்ளது.
1டிபி மெமரி கொண்ட ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை ரூ.2,54,900-ஆக உள்ளது.
2டிபி மெமரி கொண்ட ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை ரூ.3,29,900-ஆக உள்ளது.

இந்த போனின் முன்பதிவு செப்டம்பர் 12-ம் தேதி தொடங்கும். வரும் செப்டம்பர் 18-ம் தேதி ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடலின் விற்பனை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
iPhone 18 Pro Max Launched in India: Price, Specifications and Key Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X