வரலாற்றில் முதல் முறையாக.. Apple-க்கு கோடான கோடி நன்றிகள்.. 5425mAh பேட்டரி உடன் புது iPhone.. எந்த மாடல்?
ஆப்பிள் நிறுவனம் அதன் நஷ்டத்தை பற்றி கூட வெளிப்படையாக பேசிவிடும் ஆனால் அதன் ஐபோன்களில் உள்ள பேட்டரியை அளவை பற்றி வாயே திறக்காது. இது குறித்து லீக்ஸ் கூட பெரிதாக வராது. ஒவ்வொரு ஆண்டும் அறிமுகமாகும் புதிய மாடல்கள் முந்தைய மாடல்களை விட நீண்ட பேட்டரி லைஃப்பை வழங்கும் என்கிற தகவல் மட்டுமே பகிரப்படும்.
ஆனால் (எங்களுக்கு தெரிந்து) முதல் முறையாக, ஆப்பிளின் அடுத்த ஐபோன் மாடல்களில் ஒன்றான ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடலின் துல்லியமான பேட்டரி விவரங்கள் குறித்த தகவல் கிடைத்துள்ளது. மேக்வேர்ல்டு-ன் (Macworld) புதிய அறிக்கை ஒன்று, ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடலின் பேட்டரி திறன் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. இது மிகவும் ஈர்க்கக்கூடியதாக தெரிகிறது.

கிடைக்கப்பெற்ற இசிம் eSIM) ஆதரவு கொண்ட ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடலில் 5,425mAh பேட்டரி இருக்கும். இதேபோல பிசிக்கல் சிம் (Physical SIM) ஆதரவு கொண்ட ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடலில் 5,235mAh பேட்டரி இருக்கும். ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (iPhone 17 Pro Max) ஏற்கனவே சிறப்பான பேட்டரி லைஃப்பை கொண்டுள்ளது.
ஆனால், ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடல் ஆனது, இன்னும் அளவில் பெரிய பேட்டரி மற்றும் ஏ20 ப்ரோ சிப் வழங்கும் மேம்பட்ட செயல்திறன் ஆகியவற்றின் மூலம் அதைவிட சிறந்த பேட்டரி லைஃப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த தகவலின் நம்பகத்தன்மை கேள்விக்குரியதாக உள்ளது. இது வெறுமனே இவரு லீக் ஆக மட்டுமே இருக்கவும் வாய்ப்புள்ளது
ஆனாலும் இந்த பேட்டரி விவரங்கள் துல்லியமானவை என்று நம்புவதற்கு ஒரு வலுவான காரணம் உள்ளது: ஆப்பிள் நிறுவனத்தின் விநியோகஸ்தரான 'டாடா எலக்ட்ரானிக்ஸ்' (Tata Electronics) சமீபத்தில் எதிர்கொண்ட உண்மையான டேட்டா லீக் சம்பவத்தின் காலத்தோடு இது ஒத்துப்போகிறது. அந்த லீக் தொடர்பான தகவல்கள் அனைத்தும் உண்மையானவை என்பதற்கான அறிகுறிகளையே கொண்டுள்ளன.
9ஜிபி ரேம் கொண்ட புது ஐபோன் மாடல்: மிகவும் நம்பகமான மற்றும் டிஎப் இன்டர்நேஷனல் செக்யூரிட்டீஸ் (TF International Securities) சேர்ந்த ஆப்பிள் ஆய்வாளர் ஆன மிங்-சி குவோ (Ming-Chi Kuo) வழியாக, ஆப்பிளின் அடுத்த ஐபோன் அறிமுகங்களின் திட்டங்கள் குறித்தும், குறிப்பாக விலை குறைவான மாடல்களில் நாம் என்ன எதிர்பார்க்கலாம் என்பது குறித்தும் சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது.
எக்ஸ் (X) தளம் வழியாக குவோ பகிர்ந்துள்ள விவரங்களின்படி, ஸ்டாண்டர்ட் ஐபோன் 18 (iPhone 18) மற்றும் அதிகம் பேசப்படும் பட்ஜெட் விலை மாடல் ஆன ஐபோன் 18இ (iPhone 18e) ஆகிய இரண்டிலும் 9ஜிபி டிரேம் (9GB DRAM) இடம்பெறும்.
நினைவூட்டும் வண்ணம், தற்போதைய ஐபோன் 17 (iPhone 17) மாடலின் பேஸிக் வேரியண்ட்டில் உள்ள 8ஜிபி-ஐ விட இது ஒரு சிறிய அதிகரிப்பு மட்டுமே ஆகும். ஐபோன் 18 மற்றும் ஐபோன் 18இ மாடல்களின் 9ஜிபி டிரேம் உடன், ஆப்பிளின் வரவிருக்கும் ஏ20 சிப்செட்டுடன் இணைக்கப்பட்ட ஆறு 1.5ஜிபி சிப்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிகிறது.
முன்னதாக 8ஜிபி ரேம் ஆனது 12ஜிபி வரை உயர்த்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது மற்றும் சில லீக்ஸ்களும் வெளியாகி இருந்தன. 12ஜிபி ரேம் அளவிலான பெரிய அதிகரிப்பு ஆனது ஆன்-டிவைஸிலேயே (on-device) சிக்கலான ஏஐ (AI) செயல்பாடுகளை செயல்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்படும் கருதப்பட்டிருந்தது.
ஆனால், மெமரி தட்டுப்பாடு மற்றும் செலவு தொடர்பான நெருக்கடிகள் காரணமாக, ஆப்பிள் அந்த திட்டத்தை கைவிட்டு, ஸ்டெபிலிட்டிக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. எழும் இதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்தால், ஐபோன் 18 மற்றும் ஐபோன் 18இ ஆகிய மாடல்களின் விலைகளையும் (பெரிதும் அதிகரிக்காமல்) கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.


Click it and Unblock the Notifications