Home
Mobile

அறிமுகமானது புதிய ஐபோன் 18 ப்ரோ.. 48எம்பி கேமரா.. 2டிபி மெமரி.. IP68 ரேட்டிங்.. என்ன விலை?

ஆப்பிள் நிறுவனத்தின் பிரம்மாண்ட சர்ப்ரைஸ் அண்ட் ஷைன் நிகழ்வில் புதிய ஐபோன் 18 ப்ரோ (iPhone 18 Pro) மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஐபோன் அட்டகாசமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளியாகி உள்ளது. இப்போது ஐபோன் 18 ப்ரோ மாடலின் விலை மற்றும் அம்சஙகளை இங்கே பார்க்கலாம்.

ஐபோன் 18 ப்ரோ அம்சங்கள் (iPhone 18 Pro Specifications): 6.3-இன்ச் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்பிளே உடன் ஐபோன் 18 ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120Hz ப்ரோமோஷன் (120Hz ProMotion) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை தரும்.

அறிமுகமானது புதிய ஐபோன் 18 ப்ரோ.. 48எம்பி கேமரா.. என்ன விலை?

ஆப்பிளின் புதிய சிலிக்கான் ஆன A20 ப்ரோ சிப் உடன் ஐபோன் 18 ப்ரோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் 2என்எம்-ஜென்ரேஷன் சிப், 6-கோர் CPU மற்றும் 7-கோர் GPU ஆதரவுகளுடன் இந்த ஐபோன் 18 ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் டூயல் 16-கோர் நியூரல் இன்ஜின் ஆதரவும் உள்ளது.

C2 மோடம் ஆதரவுடன் ஐபோன் 18 ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஐபோன் மாடல் ஒரு சிறிய டைனமிக் ஐலேண்டுடன் வரும். அதேபோல் இது iOS 27 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த சாதனம் வெளியாகி உள்ளது. குறிப்பாக இதில் பல்வேறு புதிய அம்சங்களைப் பயன்படுத்த முடியும்.

Siri AI வசதியுடன் இந்த ஐபோன் 18 ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Siri AI என்பது Apple Intelligence-ஆல் இயக்கப்படும் Siri-யின் முற்றிலும் புதிய பதிப்பாகும். இது மிகவும் தனிப்பட்டதாகவும், திறன் வாய்ந்ததாகவும், உரையாடல் தன்மை கொண்டதாகவும் உள்ளது. அதேபோல் இந்த Siri AI வசதி ஆனது தனியுரிமை மற்றும் பாதுகாப்பை மையமாகக் கொண்ட ஒரு அறிவார்ந்த தனிப்பட்ட மையமாக மாறுகின்றன என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

48எம்பி மெயின் கேமரா + 48எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 48எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் இந்த ஐபோன் 18 ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 4கே வீடியோ பதிவு ஆதரவு, மேம்பட்ட சினிமாட்டிக் ஷூட்டிங் ஆதரவு மற்றும் கூடுதல் எடிட்டிங் அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 18எம்பி கேமரா கொண்டுள்ளது ஐபோன் 18 ப்ரோ மாடல். குறிப்பாக 256ஜிபி, 512ஜிபி, 1டிபி மற்றும் 2டிபி ஆகிய வேரியண்ட்களில் இந்த ஐபோன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

25W வரையிலான வரையிலான MagSafe மற்றும் Qi2 வயர்லெஸ் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது ஐபோன் 18 ப்ரோ மாடல். மேலும் ஐபோன் 18 ப்ரோ மாடலை 15 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த சாதனம் ஒரே சார்ஜில் 36 மணி நேரம் வரை வீடியோ பிளேபேக் வழங்கும் என்று கூறப்படுகிறது. இந்த போனில் சிறந்த பேட்டரி ஆயுளை வழங்குவதாக அந்நிறுவனம் கூறுகிறது. மேலும் இது eSIM சப்போர்ட் கொண்டுள்ளது.

அறிமுகமானது புதிய ஐபோன் 18 ப்ரோ.. 48எம்பி கேமரா.. என்ன விலை?

நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP68 ரேட்டிங்கை கொண்டுள்ளது ஐபோன் 18 ப்ரோ மாடல். மேலும் இதில் 6 மீட்டர் ஆழம் வரை 30 நிமிடங்கள் வரை நீர் எதிர்ப்புத் திறன் இருக்கும் என ஆப்பிள் உறுதியளிக்கிறது. மேலும் இந்த போனில் கேமரா கண்ட்ரோல் மற்றும் ஆக்சன் பட்டன்களையும் தக்கவைத்துக் கொள்கிறது ஆப்பிள் நிறுவனம்.

பிளாக், சில்வர், க்ளேசியர் (Glacier), பர்கண்டி ஆகிய கலர்களில் இந்த ஐபோன் மாடல் விற்பனைக்கு வரும். மேலும் இந்த ஐபோன் 18 ப்ரோ மாடலின் ஆரம்ப விலை 1,64,900-ஆக உள்ளது. இந்த போனின் முன்பதிவு செப்டம்பர் 12 அன்று தொடங்கி, செப்டம்பர் 18 முதல் விற்பனைக்கு வரும்.

Best Mobiles in India

English summary
iPhone 18 Pro Launched in India: Price, Specifications and Key Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X