ஆப்பிள் ஆட்டம் ஆரம்பம்.. இன்று தொடங்குகிறது ஐபோன்களின் முன்பதிவு.. எந்த மாடல்? என்ன விலை?
சமீபத்தில் ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த போன்கள் சற்று உயர்வான விலையில் தரான அம்சங்களுடன் வெளிவந்தன. இந்நிலையில் இந்த இரண்டு ஐபோன்களின் முன்பதிவு இன்று தொடங்குகிறது.
அதாவது இந்தியாவில் ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் போன்களின் முன்பதிவு இன்று மாலை 5.30 மணி அளவில் தொடங்குகிறது. மேலும் இந்த போன்களின் விற்பனை வரும் செப்டம்பர் 18 அன்று தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் இந்தியா ஆன்லைன் ஸ்டோர், அமேசான், பிள்பகார்ட் போன்ற முக்கிய ஆன்லைன் தளங்கள் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் இந்த இரண்டு ஐபேன்களையும் முன்பதிவு செய்யலாம். அதேபோல் ஐபோன் டியோ மாடல் ஆனது அக்டோபர் மாதம் இந்தியாவில் முன்பதிவுக்குக் கிடைக்கும்.

ஐபோன் 18 ப்ரோ இந்திய விலை
256ஜிபி மெமரி கொண்ட ஐபோன் 18 ப்ரோ மாடலின் விலை ரூ.1,64,900-ஆக உள்ளது.
512ஜிபி மெமரி கொண்ட ஐபோன் 18 ப்ரோ மாடலின் விலை ரூ.1,89,900-ஆக உள்ளது.
1டிபி மெமரி கொண்ட ஐபோன் 18 ப்ரோ மாடலின் விலை ரூ.2,39,900-ஆக உள்ளது.
1டிபி மெமரி கொண்ட ஐபோன் 18 ப்ரோ மாடலின் விலை ரூ.3,14,900-ஆக உள்ளது.
ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் இந்திய விலை
256ஜிபி மெமரி கொண்ட ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை ரூ.1,79,900-ஆக உள்ளது.
512ஜிபி மெமரி கொண்ட ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை ரூ.2,04,900-ஆக உள்ளது.
1டிபி மெமரி கொண்ட ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை ரூ.2,54,900-ஆக உள்ளது.
2டிபி மெமரி கொண்ட ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை ரூ.3,29,900-ஆக உள்ளது.
தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.7000 கேஷ்பேக் பெற முடியும். இதுதவிர நோ காஸ்ட் இஎம்ஐ வசதி உட்பட பல சலுகைகள் இந்த புதிய ஐபோன்களுக்கு கிடைக்கும். குறிப்பாக இந்த புதிய ஐபோன்கள் தரமான அம்சங்களுடன் வெளியாகி உள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும். மேலும் இப்போது ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடலின் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள் (iPhone 18 Pro Max Specifications): தரமான ஆப்பிளின் A20 ப்ரோ சிப் உடன் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் 2என்எம்-ஜென்ரேஷன் சிப், 7-கோர் ஜிபியு ஆதரவுகளுடன் இந்த ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இதில் டூயல் 16-கோர் நியூரல் இன்ஜின் ஆதரவும் உள்ளது.
அதேபோல் 6.3-இன்ச் ஒஎல்இடி சூப்பர் ரெட்டினா XDR டிஸ்பிளே உடன் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120Hz ப்ரோமோஷன் (120Hz ProMotion), 3000 நிட்ஸ் பிரைட்னஸ், எச்டிஆர், ஆல்வேஸ்-ஆன் டிஸ்ப்ளே, செராமிக் ஷீல்ட் 2 புரொடெக்சன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
குறிப்பாக C2 மோடம் ஆதரவுடன் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஐபோன் மாடல் ஒரு சிறிய டைனமிக் ஐலேண்டுடன் வரும். அதேபோல் இது iOS 27 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த சாதனம் வெளியாகி உள்ளது. குறிப்பாக இதில் பல்வேறு புதிய அம்சங்களைப் பயன்படுத்த முடியும்.
Siri AI வசதியுடன் இந்த ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Siri AI என்பது Apple Intelligence-ஆல் இயக்கப்படும் Siri-யின் முற்றிலும் புதிய பதிப்பாகும். இது மிகவும் தனிப்பட்டதாகவும், திறன் வாய்ந்ததாகவும், உரையாடல் தன்மை கொண்டதாகவும் உள்ளது. அதேபோல் இந்த Siri AI வசதி ஆனது தனியுரிமை மற்றும் பாதுகாப்பை மையமாகக் கொண்ட ஒரு அறிவார்ந்த தனிப்பட்ட மையமாக மாறுகின்றன என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.
48எம்பி மெயின் கேமரா + 48எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 48எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடல். 4கே வீடியோ பதிவு செய்யும் ஆதரவு, மேம்பட்ட சினிமாட்டிக் ஷூட்டிங் ஆதரவு மற்றும் இந்த கூடுதல் எடிட்டிங் அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன.
மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 18எம்பி கேமரா கொண்டுள்ளது ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடல். குறிப்பாக 256ஜிபி, 512ஜிபி, 1டிபி மற்றும் 2டிபி ஆகிய வேரியண்ட்களில் இந்த ஐபோன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஃபேஸ்ஐடி முக அங்கீகாரத்திற்கான ட்ரூடெப்த் கேமரா, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இந்த மாடலில் உள்ளன.
அதுவும் 25W வரையிலான MagSafe மற்றும் Qi2 வயர்லெஸ் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடல். அதேபோல் இந்த சாதனம் ஒரே சார்ஜில் 45 மணி நேரம் வரை வீடியோ பிளேபேக் வழங்கும் என்று கூறப்படுகிறது. இந்த போனில் சிறந்த பேட்டரி ஆயுளை வழங்குவதாக அந்நிறுவனம் கூறுகிறது. மேலும் இது eSIM சப்போர்ட் கொண்டுள்ளது.

ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடல் நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP68 ரேட்டிங்கை கொண்டுள்ளது. மேலும் இதில் 6 மீட்டர் வரை ஆழம், 30 நிமிடங்கள் வரை நீர் எதிர்ப்புத் திறன் இருக்கும் என ஆப்பிள் உறுதியளிக்கிறது. இந்த போனில் கேமரா கண்ட்ரோல் மற்றும் ஆக்சன் பட்டன்களையும் தக்கவைத்துக் கொள்கிறது ஆப்பிள் நிறுவனம். 5ஜி சப்போர்ட், வைஃபை 7, புளூடூத் 6, வைட்பேண்ட் சிப், த்ரெட் நெட்வொர்க்கிங் தொழில்நுட்பம், ரீடர் மோட், ஜிபிஎஸ் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஐபோனில் உள்ளன.
க்ளேசியர் (Glacier), பிளாக், சில்வர், பர்கண்டி ஆகிய இந்த கலர்களில் ஐபோன் மாடல் விற்பனைக்கு வரும். மேலும் இந்த ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடலின் எடை 249 கிராம் ஆகும்.


Click it and Unblock the Notifications
