பொளந்து கட்டும் விற்பனை.. ரூ.7,000 ஆஃபருடன் iPhone 18 Pro சீரிஸ் வந்தாச்சு.. 6 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ!
இந்திய மார்கெட்டில் ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் (iPhone 18 Pro Series) மாடல்களின் விற்பனை தொடங்கிவிட்டது. ஆப்பிள் ஸ்டோர்களில் காலை முதலே ஐபோன் பிரியர்கள் வரிசை கட்டி வாங்க தொடங்கிவிட்டனர். ஆன்லைன் தளங்களிலும் விற்பனை தொடங்கி நடந்துவருகிறது. இந்த மாடல்களின் விலை மற்றும் தள்ளுபடி விவரங்களை பார்க்கலாம்.
ஐபோன் 18 ப்ரோ மாடலின் 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,64,900 ஆகவும், 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,89,900 ஆகவும் மற்றும் 1 டிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.2,39,900 ஆகவும் இருக்கிறது. 2 டிபி மெமரி கொண்ட டாப் எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.3,14,900ஆக இருக்கிறது.

ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடலின் 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,79,900 ஆகவும், 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.2,04,900 ஆகவும் மற்றும் 1 டிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.2,54,900 ஆகவும் இருக்கிறது. 2 டிபி மெமரி டாப் எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.3,29,900ஆக இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோரில் ரூ.7,000 பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் 6 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையுடன் விற்பனைக்கு கிடைக்கிறது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் ரூ.6,000 பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் 6 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகை கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடல்களை பிளாக் (Black), சில்வர் (Silver), கிளாசியர் (Glacier) மற்றும் மற்றும் பர்கண்டி (Burgundy) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த மாடல்களுடன் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 4 மாடல் ரூ.1,09,900 க்கும், ஆப்பிள் ஏர்பாட்ஸ் 5 மாடல் ரூ.14,900 க்கும் கிடைக்கிறது.
ஐபோன் 18 ப்ரோ அம்சங்கள் (iPhone 18 Pro Specifications): 6.3 இன்ச் (2622 x 1206 பிக்சல்கள்) ஓஎல்இடி சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்பிளே கிடைக்கிறது. 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், ட்ரூ டோன், டைனாமிக் ஐலேண்ட் பீச்சர்கள் கிடைக்கின்றன. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது. ஐஓஎஸ் 17 கொண்ட சிக்ஸ்-கோர் ஏ20 ப்ரோ 2என்எம் சிப்செட் கிடைக்கிறது.
48 எம்பி மெயின் கேமரா + 48 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 48 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. டால்பி விஷன் ரெக்கார்டிங், போட்டானிக் என்ஜின், 16x ஆப்டிகல் குவாலிட்டி ஜூம் உள்ளிட்டவை உள்ளன. 18 எம்பி செல்பீ கிடைக்கிறது. IP68 ரேட்டிங் உள்ளது. 25W சார்ஜிங் மற்றும் 34 மணி நேர வீடியோ பிளேபேக் உள்ளது.
ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள் (iPhone 18 Pro Max Specifications): 6.9 இன்ச் (2868 x 1320 பிக்சல்கள்) ஓஎல்இடி டிஸ்பிளே உள்ளது. ட்ரூ டோன், டைனாமிக் ஐலேண்ட், ப்ரோமோஷன் டெக்னாலஜி கிடைக்கிறது. செராமிக் ஷீல்டு 2 புரொடெக்சன் கிடைக்கிறது. இதிலும் ஐஓஎஸ் 27 மற்றும் சிக்ஸ்-கோர் ஏ20 ப்ரோ 2என்எம் சிப்செட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ப்ரோ மாடலை போலவே கேமரா சிஸ்டம் உள்ளது. செகண்ட்-ஜெனரேஷன் சென்சார்-ஷிப்ட் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், 2x டெலிபோட்டோ, போட்டானிக் என்ஜின், ட்ரூ டோன் ஃபிளாஷ், ஆப்டிகல் ஜூமிங், குவாலிட்டி ஜூமிங் மற்றும் டிஜிட்டல் ஜூமிங் கிடைக்கிறது. 25W சார்ஜிங் மற்றும் 43 மணி நேரங்களுக்கு வீடியோ பிளேபேக் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications
