Home
Mobile

Apple அசத்துறீயே.. 6.1-இன்ச் டிஸ்பிளே, A19 சிப், 48MP கேமராவுடன் புதிய 2026 iPhone மாடல்.. விலை தான் ஹைலைட்!

2026 இல் புதிய ஐபோன் மாடலை வாங்க தயாராகி வரும் அனைவரின் கவனத்திற்கும் ஒரு முக்கிய அப்டேட். இன்னும் சில வாரங்களில் ஆப்பிள் நிறுவனம் ஒரு புதிய பட்ஜெட் விலை ஐபோன் மாடலை அறிமுகம் செய்யலாம். அது ஐபோன் 17இ (iPhone 17e) மாடல் ஆகும்.

நினைவூட்டும் வண்ணம் கடந்த ஆண்டு பிப்ரவரியில் அதன் புத்தம் புதிய ஐபோன் மாடல் ஆக - ஐபோன் 16இ (iPhone 16e) மாடலை அறிமுகம் செய்து இருந்தது. ஆக ஐபோன் 17இ மாடலும் கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Apple அசத்துறீயே.. 6.1-இன்ச் டிஸ்பிளே உடன் புதிய 2026 iPhone மாடல்!

இதை உறுதி செய்யும்படியாக, டிப்ஸ்டர் ஸ்மார்ட் பிகாச்சு வழியாக கிடைத்த சமீபத்திய தகவல், ஆப்பிளின் புதிய பட்ஜெட் விலை ஐபோன் ஒன்று விரைவில் வெகுஜன உற்பத்திக்கு நுழைய உள்ளது என்கிறது. ஆப்பிள் நிறுவனத்திடம் உள்ள ஒரே பட்ஜெட் விலை மாடல் ஐபோன் 16இ, ஆக வரப்போவது "பெரும்பாலும்" ஐபோன் 17இ மாடலாகத்தான் இருக்கும்.

ஐபோன் 17இ மாடலில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? டிப்ஸ்டர் ஸ்மார்ட் பிகாச்சுவின் கூற்றுப்படி, ஆப்பிள் நிறுவனம் சிஇஎஸ் 2026 நிகழ்விற்கு (CES 2026) பிறகு, கூடிய விரைவில் அதன் ஐபோன் 17இ மாடலின் வெகுஜன உற்பத்தியை தொடங்கும். நினைவூட்டும் வண்ணம் சிஇஎஸ் 2026 நிகழ்வானது ஜனவரி 9 வரை லாஸ் வேகாஸில் நடக்கும்

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை ஐபோன் 17இ மாடல் ஆனது "ஸ்லிம் ஐலேண்ட்" உடன் 6.1-இன்ச் டிஸ்பிளேவுடன் வர வாய்ப்புள்ளது. இது டைனமிக் ஐலேண்ட்-ஐ சேர்ப்பதை குறிக்கிறது. இது நாட்ச் வடிவமைப்பை கொண்ட ஐபோன் 16இ உடன் ஒப்பிடும் போது குறிப்பிடத்தக்க டிசைன் அப்கிரேட் ஆக இருக்கும். இருப்பினும் ஐபோன் 17இ ஆனது ஐபோன் 16இ மாடலில் உள்ள அதே 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் தக்கவைத்து கொள்ள வாய்ப்புள்ளது.

மேலும் டிப்ஸ்டரின் கூற்றுப்படி, ஐபோன் 17இ மாடல் ஆனது ஏ19 சிப் கொண்டு இயங்கும். இந்ததகவல் ஏற்கனவே ஆன்லைனில் வெளிவந்த லீக்ஸ் உடன் ஒற்றுப்போகிறது. இதே சிப் தான் ஐபோன் 17 மாடலிலும் உள்ளது. ஆனாலும் இது ஐபோன் 17இ என்கிற மலிவு விலை மாடலில் அண்டர்க்ளாக் செய்யப்பட்டவெர்ஷன் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக கிடைத்த தகவல்கள், ஐபோன் 17இ மாடலில் ஒரு 48-மெகாபிக்சல் ரியர் கேமரா மற்றும் 12-மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டிருக்கும் என்று பரிந்துரைக்கிறது. விலையை பொறுத்தவரை ஐபோன் 17இ மாடல் ஆனது இந்தியாவில் ரூ.65,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். இன்னும் குறிப்பிட்டு சொல்லப்போனால் ரூ.64,990 க்கு வெளியாக வாய்ப்புள்ளது.

நினைவூட்டும் வண்ணம் ஆப்பிள் கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஐபோன் 16இ மாடலின் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனை ரூ.59,900 க்கு அறிமுகம் செய்திருந்தது. முக்கிய அம்சங்களை பொறுத்தவரை ஐபோன் 16இ ஆனது ஃபேஸ் ஐடி உடனான 6.1-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ஆப்பிளின் ஏ18 சிப் மூலம் இயக்கப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை ஐபோன் 16இ ஆனது சிங்கிள் 48எம்பி ஃப்யூஷன் ரியர் கேமராவுடன் வருகிறது, இது விரிவான ஹை ரெசல்யூஷன் புகைப்படங்களைப் பிடிக்கும் திறன் கொண்டது. இதன் கேமரா செட்டப் ஆனது 2எக்ஸ் டெலிஃபோட்டோ ஜூம் விருப்பத்தை வழங்குகிறது. இயல்பாக ஐபோன் 16இ ஆனது 24எம்பி புகைப்படங்களை தான் எடுக்கும், ஆனால் அதிக தெளிவுத்திறன் கொண்ட காட்சிகளுக்கு 48எம்பி மோட்-க்கு மாறலாம்.

இதன் கேமரா செட்டப்பில் போர்ட்ரெய்ட் மோட், நைட் மோட் மற்றும் எச்டிஆர் ஆகிய அம்சங்கள் உள்ளன முன்பக்கத்தில் ஐபோன் 16இ மாடலில் ஆட்டோஃபோகஸுடன் 12எம்பி ட்ரூ டெப்த் கேமரா உள்ளது. வீடியோ ரெக்கார்டிங்கை பொறுத்தவரை, ஐபோன் 16இ மாடல் ஆனது 4கே ரெக்கார்டிங்கை வினாடிக்கு 60 பிரேம்கள் வரை ஆதரிக்கிறது.

இதிலுள்ள டால்பி விஷன் ஆனது மேம்பட்ட கலர்கள் மற்றும் காண்ட்ராஸ்ட் உடன் உயர்தர வீடியோவை ரெக்கார்ட் செய்யவும் அனுமதிக்கிறது. கடைசியாக ஐபோன் 16இ மாடல் ஆனது 26 மணிநேர வீடியோ பிளேபேக்கை வழங்கும் என்று ஆப்பிள் கூறுகிறது. இந்த மாடல் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது மற்றும் சேட்டிலைட் வழியாக மெசேஜ்கள் மற்றும் எமர்ஜென்சி எஸ்ஓஎஸ்-களை அனுப்ப உதவும் செயற்கைக்கோள் இணைப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone 17e With Dynamic Island Tipped to Launching Soon What we can expect Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X