Home
Mobile

Apple நீ அசத்து.. பட்ஜெட் விலையில் புதிய 2026 iPhone மாடல்.. A19 சிப், ஸ்லிம் பெசல், 18MP செல்பீ கேமரா!

ஆப்பிள் (Apple) நிறுவனமானது நாம் எதிர்பார்ப்பதை விட மிக விரைவில், அதன் 2026 பட்ஜெட்-விலை ஐபோன் மாடலை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது ஐபோன் 17இ (iPhone 17e) மாடல் ஆகும். ஆப்பிளின் ஐபோன் 16இ (iPhone 16e) ஆனது கிட்டத்தட்ட ஒரு வருடம் பழமையான மாடலாகி விட்டது

ஐபோன் 17இ எப்போது அறிமுகம் செய்யப்படலாம்? இது அடுத்த மாத தொடக்கத்தில் (பிப்ரவரி 2026) அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்பிள் நிறுவனமானது அதிகாரப்பூர்வமாக எதையும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், ஐபோன் 17இ மாடலின் சில முக்கிய அம்சங்கள் லீக் ஆகி அதன் அறிமுகம் - மிகவும் நெருக்கமாக இருப்பதை உணர்த்துகின்றன.

புதிய 2026 iPhone மாடல்.. A19 சிப், ஸ்லிம் பெசல், 18MP செல்பீ கேமரா!

ஐபோன் 17இ மாடலில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது புதிய ஏ19 சிப்பை பேக் செய்யலாம். இது சிபியு செயல்திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும், ஆரம்ப மதிப்பீடுகள் சுமார் 5 முதல் 10 சதவீதம் வரை ஆதாயங்களை குறிக்கின்றன. இது அன்றாட பயன்பாட்டை தீவிரமாக மாற்றாது என்றாலும், குறிப்பாக நீண்டகால சாஃப்ட்வேர் ஆதரவின் அடிப்படையில், நீண்ட காலத்திற்கு போட்டித்தன்மையுடன் இருக்க உதவும்.

ஐபோன் 17இ மாடலில் வடிவமைப்பு மாற்றங்களும் சாத்தியமாகும். தி எலெக்கின் ஒரு அறிக்கை, ஐபோன் 16இ உடன் ஒப்பிடும்போது ஐபோன் 17இ மெல்லிய பெசல்களை கொண்டிருக்கும் என்று கூறுகிறது. இருப்பினும், ஸ்க்ரீன் சைஸ் ஆனது 6.1 இன்ச் ஆகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஹை-எண்ட் டிஸ்பிளே அம்சங்களை (ProMotion அல்லது Always On) பேக் செய்ய வாய்ப்பில்லை

கேமராவில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்களை பொறுத்தவரை, ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 17 சீரீஸ் முழுவதும், ஆப்பிள் சென்டர் ஸ்டேஜ் ஆதரவுடன் ஒரு புதிய செல்பீ கேமராவை அறிமுகப்படுத்தியதாக கூறுகிறது. இந்த கேமரா 18எம்பி ஸ்கொயர் சென்சாரை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இதை ஐபோன் 17இ மாடலிலும் நாம் எதிர்பார்க்கலாம்.

சார்ஜிங் மற்றும் ஆக்சஸெரீஸ்களை பொறுத்தவரை ஐபோன் 17இ மாடலில் மேக்சேஃப் (MagSafe) ஆதரவு சேர்க்கப்படலாம். இது ஐபோன் 16இ மாடலில் இல்லாத ஒரு அம்சமாகும். இப்போது ஐபோன் 16இ ஆனது க்யூஐ வயர்லெஸ் சார்ஜிங்கை 7.5W வரை ஆதரிக்கிறது. மேக்சேஃப் உடன், ஐபோன் 17இ ஆனது குறைந்தபட்சம் 15W வயர்லெஸ் சார்ஜிங் ஸ்பீடை ஆதரிக்க முடியும்.

ஆப்பிள் ஐபோன் 17இ இந்தியாவில் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? விலையை பொறுத்தவரை, இந்திய சந்தையில் ஆப்பிள் ஐபோன் 17இ மாடலில் விலை ரூ.64,990 ஆக இருக்கலாம். நினைவூட்டும் வண்ணம் ஐபோன் 16இ மாடல் ஆனது ரூ.59,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டது

ஐபோன் 16இ மாடலின் முக்கிய அம்சங்கள்: இது ஃபேஸ் ஐடி உடனான 6.1-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ஆப்பிளின் ஏ18 சிப் மூலம் இயக்கப்படுகிறது. ஏ18 சிப்பில் 6-கோர் சிபியு உள்ளது, இது ஐபோன் 11 மாடலில் உள்ள ஏ13 பயோனிக் சிப்பை விட 80 சதவிகிதம் வேகமானது என்று ஆப்பிள் கூறுகிறது. ஏஐ அம்சங்களின் தொகுப்பான ஆப்பிள் இன்டெலிஜென்ஸ்-ஐ ஆதரிக்கிறது.

இது சிங்கிள் 48எம்பி ஃப்யூஷன் ரியர் கேமராவுடன் வருகிறது, இது விரிவான ஹை ரெசல்யூஷன் புகைப்படங்களைப் பிடிக்கும் திறன் கொண்டது. இதன் கேமரா செட்டப் ஆனது 2எக்ஸ் டெலிஃபோட்டோ ஜூம் விருப்பத்தை வழங்குகிறது. இயல்பாக ஐபோன் 16இ ஆனது 24எம்பி புகைப்படங்களை தான் எடுக்கும், ஆனால் அதிக தெளிவுத்திறன் கொண்ட காட்சிகளுக்கு 48எம்பி மோட்-க்கு மாறலாம்.

இதன் கேமரா செட்டப்பில் போர்ட்ரெய்ட் மோட், நைட் மோட் மற்றும் எச்டிஆர் ஆகிய அம்சங்கள் உள்ளன முன்பக்கத்தில் ஐபோன் 16இ மாடலில் ஆட்டோஃபோகஸுடன் 12எம்பி ட்ரூ டெப்த் கேமரா உள்ளது. வீடியோ ரெக்கார்டிங்கை பொறுத்தவரை, ஐபோன் 16இ மாடல் ஆனது 4கே ரெக்கார்டிங்கை வினாடிக்கு 60 பிரேம்கள் வரை ஆதரிக்கிறது.

இதிலுள்ள டால்பி விஷன் ஆனது மேம்பட்ட கலர்கள் மற்றும் காண்ட்ராஸ்ட் உடன் உயர்தர வீடியோவை ரெக்கார்ட் செய்ய அனுமதிக்கிறது. கடைசியாக ஐபோன் 16இ மாடல் இது 26 மணிநேர வீடியோ பிளேபேக்கை வழங்குகிறது என்று ஆப்பிள் கூறுகிறது. இந்த மாடல் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone 17e tipped to launch next month check out leaked specifications Expected Price in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X