Home
Mobile

ஒத்த போனுக்கு மொத்தமும் அலறுது.. பிப்ரவரி 19 க்கு அப்புறம் இதுதான்.. புது iPhone 17e க்கு தேதி குறிச்சாச்சு!

ஆப்பிள் பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் பிரியர்களையும் வெயிட்டிங் மோடில் போட்டு வைத்துள்ள ஐபோன் 17இ (iPhone 17e) ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி கசிந்துள்ளது. சி1எக்ஸ் மோடம் மற்றும் மேக்சேப் சார்ஜிங் கொண்ட மாடலாகவும் எதிர்பார்க்கலாம். இந்த ஐபோன் 17இ மாடலின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஐபோன் 16இ (iPhone 16e) ஸ்மார்ட்போன் கடந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆகவே, இந்த பிப்ரவரியில் ஐபோன் 17இ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், எந்த தேதியில் வெளியாகும், பீச்சர்கள் எப்படி என்பதை ஆப்பிள் நிறுவனம் இதுவரை உறுதி செய்யவில்லை. இந்த நேரத்தில் வெளியீட்டு தேதி மற்றும் பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துள்ளது.

ஒத்த போனுக்கு மொத்தமும் அலறுது.. பிப்ரவரி 19 க்கு அப்புறம் இதுதான்!

மேக்வேர்ல்டு (MacWorld) வழியாக கசிந்த தகவலின்படி பிப்ரவரி 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும், சி1எக்ஸ் மோடம் (C1X Modem) கிடைக்க இருக்கிறது. இந்த மோடம் ஏற்கனவே வெளியாகிய ஐபோன் ஏர் (iPhone Air) மாடலில் கிடைத்தது. ஐபோன் 16இ ஸ்மார்ட்போனில் சி1 மோடம் (C1 Modem) மட்டுமே கிடைத்தது. ஆகவே, ஐபோன் 17இ மாடலில் சி1எக்ஸ் மோடம் எதிர்பார்க்கலாம்.

இந்த விவரங்கள் மட்டுமே கசிந்துள்ளன. மேலும், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.1 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவை எதிர்பார்க்கலாம். பேஸ் ஐடி, டைனாமிக் ஐலேண்ட் போன்ற வழக்கமாக பீச்சர்களும் கிடைக்க வாய்ப்புள்ளது. இப்போது, ஐபோன் 16இ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம். இதை வைத்து 17இ மாடலின் விலையை யூகிக்கலாம்.

ஒத்த போனுக்கு மொத்தமும் அலறுது.. பிப்ரவரி 19 க்கு அப்புறம் இதுதான்!

ஐபோன் 16இ அம்சங்கள் (iPhone 16e Specifications): சிக்ஸ் கோர் ஏ18 3என்எம் (Six Core A18 3nm) சிப்செட்டை இந்த ஐபோன் 16இ ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. ஐஓஎஸ் 18 (iOS 18) கொண்டுள்ளது. செராமிக் ஷீல்டு புரொடெக்சன் (Ceramic Shield Protection) கொண்ட 6.1 இன்ச் (2532 x 1170 பிக்சல்கள்) சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் (Super Retina XDR) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது.

இந்த ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவுக்கு 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் எச்டிஆர் (HDR) கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ட்ரூ டோன் (True Tone) சப்போர்ட் கிடைக்கிறது. 48 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் ரியர் கேமரா கிடைக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilisation) இந்த கேமராவுக்கு கிடைக்கிறது.

மேலும், 2X டெலிபோட்டோ, போட்டானிக் என்ஜின் (Photonic Engine) மற்றும் எச்டிஆர் டால்பி விஷன் (HDR Dolby Vision) ரெக்கார்டிங் கிடைக்கிறது. ட்ரூ டோன் பிளாஷ் (True Tone Flash) கிடைக்கிறது. சினிமாடிக் மோட் 4K எச்டிஆர் வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 12 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இதில் போகஸ் பிக்சல் மற்றும் ரெடினா போகஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.

இதிலும் எச்டிஆர் டால்பி விஷன் ரெக்கார்டிங் கிடைக்கிறது. ஆட்டோ போகஸ் (Auto Focus) சப்போர்ட் கிடைக்கிறது. பில்ட்-இன் லித்தியம் அயன் பேட்டரி கிடைக்கிறது. இதில் 26 மணி நேரங்களுக்கு வீடியோ பிளேபேக் கிடைக்கும். மேலும், கியூஐ சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது. 7.8 எம்எம் தடிமன் மற்றும் 167 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், பேஸ்ஐடி பேசியல் ரிககனைசேஷன் உள்ளிட்ட வழக்கமாக பீச்சர்களும் கிடைக்கின்றன. இந்திய மார்கெட்டில் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.59,900ஆக இருக்கிறது. ஆகவே, ஐபோன் 17இ மாடலை ரூ.60,000 பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம். பிப்ரவரி 19ஆம் தேதிக்கு முன்பாக வெளியீட்டு விவரங்கள் தெரியவரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone 17e Tipped To Launch in February 2026 With C1X Modem MagSafe Charging What To Expect
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X