வந்துட்டான் Apple சிங்கம்.. 6.1 இன்ச் டிஸ்பிளே.. ரூ.3000 ஆஃபரில் புது iPhone.. எந்த மாடல்? என்ன விலை?
ஆப்பிள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் மாடலாக களமிறங்கி ஐபோன் பிரியர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற ஸ்மார்ட்போனாக ஐபோன் 17இ (iPhone 17e) இருக்கிறது. 6.1 இன்ச் டிஸ்பிளேவுடன் ஸ்லிம் மற்றும் லைட் வெயிட் மாடலாக களமிறங்கியது. இப்போது, தள்ளுபடி விலைக்கு வந்து விற்பனையில் பட்டையை கிளப்பி வருகிறது.
அமேசான் தளத்தில் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.64,900ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.3000 தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.61,900 விலைக்கு வாங்கிவிட முடியும். ரூ.39,900 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையைும் இந்த ஐபோன் 17இ ஸ்மார்ட்போன் கொடுக்கிறது.

பிளாக் (Black), ஒயிட் (White) மற்றும் சாப்ட் பிங்க் (Soft Pink) ஆகிய கலர்களில் இந்த ஐபோன் 17இ மாடலை வாங்கி கொள்ளலாம். சிங்கிள் ரியர் கேமரா கொண்ட மாடலாக கிடைக்கிறது. காம்பாக்ட் டிசைனில் ஐபோனை விரும்பினால், இந்த ஐபோன் 17இ மாடலானது 170 கிராமில் கிடைக்கிறது. 7.8 எம்எம் தடிமன் மட்டுமே கொண்டு இருக்கிறது.
ஐபோன் 17இ அம்சங்கள் (iPhone 17e Specifications): 6.1 இன்ச் (2532 x 1170 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் (Super Retina XDR) டிஸ்பிளேவை இந்த ஐபோன் 17இ கொடுத்துள்ளது. செராமிக் ஷீல்டு 2 (Ceramic Shield 2) புரொடெக்சன் மட்டுமல்லாமல், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் ட்ரூ டோன் (True Tone) கொடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் எச்டிஆர் (HDR) கிடைக்கிறது. சிக்ஸ்-கோர் ஏ19 3என்எம் (Six-Core A19 3nm) சிப்செட் மற்றும் 4 கோர் ஜிபியு கிடைக்கிறது. மேலும், 16 கோர் நியூரல் என்ஜின் (Neural Engine) உள்ளது. லேட்டஸ்ட் பீச்சர்களுடன் ஐஓஎஸ் 26 (iOS 26) கொடுக்கப்பட்டு உள்ளது. 48 எம்பி வைடு ஆங்கிள் மெயின் கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது.
இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilisation) கிடைக்கிறது. 2X டெலிபோட்டோ சப்போர்ட் உள்ளது. மேலும், போட்டோனிக் என்ஜின் (Photonic Engine) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 4K ரெசொலூஷன் சப்போர்ட் கிடைக்கிறது. வழக்கமாக கிடைக்கும் 4K எச்டிஆர் சினிமாடிக் மோட் (Cinematic Mode) உள்ளது.
மேலும், ட்ரூ டோன் ஃபிளாஷ் (True Tone Flash) கொடுக்கப்பட்டு உள்ளது. 4K ரெசொலூஷன் மற்றும் டால்பி விஷன் வீடியோ ரெக்கார்டிங்குடன் 12 எம்பி செல்பீ கேமராவை இந்த ஐபோன் 17இ மாடல் கொடுத்து உள்ளது. இதில் ரெடினா ஃபிளாஷ் (Retina Flash) சப்போர்ட் உள்ளது. மேலும், ஆட்டோ போகஸ் (Auto Focus) மற்றும் போகஸ் பிக்சல் (Focus Pixels) கிடைக்கிறது.
நானோ (Nano SIM)+ ஈசிம் (eSIM) சப்போர்ட் கொண்ட மாடலாக இருக்கிறது. செராமிக் ஷீல்டு 2 மட்டுல்லாமல், மொத்தமாக IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) சப்போர்ட் கொடுத்துள்ளது. 15W மேக்சேப் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட பில்ட்-இன் லித்தியம்-அயன் பேட்டரியை இந்த ஐபோன் 17இ கொடுக்கிறது.
20W அடாப்டர் சப்போர்ட் கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளது. 5ஜி (5G), எல்டிஇ (LTE), வை-பை 7 (Wi-Fi 7) மற்றும் ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) ஆகிய கனெக்டிவிட்டிகள் கிடைக்கின்றன. இந்த விலைக்கு ஸ்லிம் மற்றும் காம்பாக்ட் டிசைனில் ஐபோன் வேண்டுமானால், இந்த ஐபோன் 17இ மாடலை தாராளமாக கன்சிடர் செய்யலாம்.


Click it and Unblock the Notifications