பய புடிச்சிட்டான்.. பட்ஜெட் விலையில் புது iPhone.. 48MP சிங்கிள் கேமரா, 6.1-இன்ச் டிஸ்பிளே, A19 சிப்!
ஆப்பிள் (Apple) நிறுவனம் அதன் புதிய ஐபோன் 17 சீரீஸ் (iPhone 17 Series) மாடல்களை, வருகிற செப்டம்பரில் உலகளவில் அறிமுகம் செய்யவுள்ள நிலையில்.. ஐபோன் 16இ (iPhone 16e) மாடலின் அப்கிரேடட் வெர்ஷன் ஆன ஐபோன் 17இ (iPhone 17e) மாடலின் முக்கிய அம்சங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது.
ஆக இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமான ஐபோன் 16இ மாடலை போலவே, ஐபோன் 17 சீரீஸின் மலிவு விலை மாடல் ஆக ஐபோன் 17இ அறிமுகமாகும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. சரி வாருங்கள், நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) வழியாக லீக் ஆன ஐபோன் 17ஏ மாடலின் முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பதை பற்றி பார்க்கலாம்.

விநியோக சங்கிலியிலிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், ஐபோன் 17இ மாடலில் 6.1-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே இடம்பெறலாம். பெரும்பாலும் ஐபோன் 16 மாடலில் பயன்படுத்தப்படும் அதே 60ஹெர்ட்ஸ் லோ-பவர் பேனல் தான் இதிலும் பயன்படுத்தப்படலாம். மேலும் இது அதே டைனமிக் ஐலேண்ட் வடிவமைப்பையும் தக்கவைக்கலாம்.
சிப்செட்டை பொறுத்தவரை ஐபோன் 17இ மாடலில் ஆப்பிள் ஏ19 சிப்செட் பேக் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை, முன்புறத்தில் 3டி பேஸ் ரிக்கனைசேஷன் உடனான 12-மெகாபிக்சல் செல்பீ சென்சார் இருக்கலாம்; பின்புறத்தில் 48-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக அறிமுகமான ஐபோன் 16இ மாடலின் விரிவான அம்சங்கள் இது ஃபேஸ் ஐடி உடனான 6.1-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இது ஐபோன் எஸ்இ சீரீஸில் காணப்படும் பாரம்பரிய ம்யூட் சுவிட்சுக்கு பதிலாக ஒரு ஆக்ஷன் பட்டனையும் கொண்டுள்ளது. கேமராவை ஸ்டார்ட் செய்வது அல்லது டிஎன்டி மோட்-ஐ ஆன் செய்வது போன்ற பல்வேறு செயல்பாடுகளை விரைவாக அணுக, இந்த ஆக்ஷன் பட்டன் உதவும்.
கூடுதலாக, ஆப்பிள் ஐபோன் 16இ ஆனது யூஎஸ்பி-சி போர்ட்டுடன் வருகிறது. இது விரைவான டேட்டா பரிமாற்றம் மற்றும் சார்ஜிங்கிற்காக லைட்னிங் போர்ட்டை மாற்றுகிறது. இது ஆப்பிளின் ஏ18 சிப் மூலம் இயக்கப்படுகிறது. ஐபோன் 16இ மாடல் ஆனது ஏஐ அம்சங்களின் தொகுப்பான ஆப்பிள் இன்டெலிஜென்ஸ்-ஐ ஆதரிக்கிறது
கேமராக்களை பொறுத்தவரை இது சிங்கிள் 48எம்பி ஃப்யூஷன் ரியர் கேமராவுடன் வருகிறது, இது விரிவான ஹை ரெசல்யூஷன் புகைப்படங்களைப் பிடிக்கும் திறன் கொண்டது. இதன் கேமரா செட்டப் ஆனது 2எக்ஸ் டெலிஃபோட்டோ ஜூம் விருப்பத்தை வழங்குகிறது. இயல்பாக ஐபோன் 16இ ஆனது 24எம்பி புகைப்படங்களை தான் எடுக்கும், ஆனால் அதிக தெளிவுத்திறன் கொண்ட காட்சிகளுக்கு 48எம்பி மோட்-க்கு மாறலாம்.
முன்பக்கத்தில் ஐபோன் 16இ மாடலில் ஆட்டோஃபோகஸுடன் 12எம்பி ட்ரூ டெப்த் கேமரா உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை இது 26 மணிநேர வீடியோ பிளேபேக்கை வழங்குவதாக ஆப்பிள் கூறுகிறது. நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில் ஐபோன் 16இ மாடல் ரூ.59,900 க்கு அறிமுகமானது. இப்போது சில இகாமர்ஸ் வலைத்தளங்களில் ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது.
ஜூன் 2025 காலாண்டிற்கான நுகர்வோர் நுண்ணறிவு ஆராய்ச்சி கூட்டாளர்களின் (Consumer Intelligence Research Partners - IRP) ஆராய்ச்சி அறிக்கையின்படி, ஆப்பிள் சீரீஸில் ஐபோன் 16இ மாடல் ஆனது ஒரு வலுவான செயல்திறன் மிக்க மாடலாக தன்னை நிலைநிறுத்தி கொண்டுள்ளது. அதாவது ஐபோன் 16இ ஆனது அதன் முன்னோடியை விட மிகவும் பிரபலமான மாடலாக இருக்கிறது. உயர்நிலை அம்சங்களை பட்ஜெட் விலையில் வழங்குவதே இந்த வறவிப்பிற்கு காரணம். இதே வரவேற்பை ஐபோன் 17இ மாடலும் பெறும் என்பதில் சந்தேகமே வேண்டாம்!


Click it and Unblock the Notifications








