Home
Mobile

இதுதான் புதிய ஐபோன்.. 48எம்பி கேமரா.. OLED டிஸ்பிளே.. 8ஜிபி ரேம்.. எந்த மாடல்? என்ன விலை?

ஆப்பிள் நிறுவனம் விரைவில் ஐபோன் 17இ (iPhone 17e) மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போன் வரும் நாட்களில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில் இந்த புதிய ஐபோன் 17இ மாடலின் படங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளன. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.

பெரிய டிஸ்பிளே, சிங்கிள் ரியர் கேமரா, ஆக்‌ஷன் பட்டன், யுஎஸ்பி-சி போர்ட் உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த ஐபோன் 17இ மாடல் வெளியாகும். குறிப்பாக இந்த புதிய ஐபோன் மாடலின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

இதுதான் புதிய ஐபோன்.. 48எம்பி கேமரா.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

ஐபோன் 17இ அம்சங்கள் (iPhone 17e Specifications): 6.1-இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் ஒஎல்இடி(Super Retina XDR OLED)டிஸ்பிளே வசதியுடன் இந்த ஐபோன் 17இ மாடல் வெளியாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (60Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

சக்திவாய்ந்த ஆப்பிள் ஏ19 சிப் (Apple A19 chip) உடன் ஐபோன் 17இ மாடல் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். குறிப்பாக கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சி1எக்ஸ் மோடம் (C1X modem) வசதி இந்த ஐபோன் 17இ மாடலில் உள்ளது. அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதி இந்த போனில் உள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஆப்பிள் நிறுவனம்.

48எம்பி சிங்கிள் ரியர் கேமரா உடன் ஐபோன் 17இ ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆகவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான வீடியோக்கள் மற்றும் படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன.

4005எம்ஏஎச் பேட்டரி உடன் ஆப்பிள் ஐபோன் 17இ மாடல் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஐபோன் மாடல் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் MagSafe சப்போர்ட் கொண்டுள்ளது இந்த புதிய ஐபோன். பிளாக், ஒயிட், லாவெண்டர் நிறங்களில் இந்த புதிய ஆப்பிள் ஐபோன் வெளிவரும்.

இதுதான் புதிய ஐபோன்.. 48எம்பி கேமரா.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ஐபோன் 17இ மாடல் விலை $599 (இந்திய மதிப்பில் ரூ.54,310) ஆக உள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த ஐபோன் 17இ மாடல் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 16இ மாடலின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

ஐபோன் 16இ அம்சங்கள் (iPhone 16e Specifications): சிக்ஸ் கோர் ஏ18 3என்எம் (Six Core A18 3nm) சிப்செட், ஐஓஎஸ் 18 (iOS 18) 6.1 சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் (Super Retina XDR) டிஸ்பிளே, 48 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் ரியர் கேமரா, 12 எம்பி செல்பீ கேமரா, பில்ட்-இன் லித்தியம் அயன் பேட்டரி உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

photo credits: FPT, gizmochina

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone 17e design and Specifications leaked online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X