Home
Mobile

கனவுல கிடைக்காது.. ரூ.5000 ஆஃபரில் iPhone.. 256GB ஸ்டோரேஜ்.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் (Flipkart Big Billion Days Sale) என்னும் சிறப்பு விற்பனையில் ஐபோன் மாடல்கள் நம்ப முடியாத டிஸ்கவுண்ட் விலைக்கு கிடைக்கின்றன. இதில் ஐபோன் 17 (iPhone 17) டிஸ்கவுண்ட் விலையில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த ஐபோன் 17 குறித்த முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இப்போது பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் 17 மாடலுக்கு 13 சதவீத டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே ரூ.86,999 விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.5000 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. இந்த டிஸ்கவுண்டுடன் ரூ.81,999 விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். 6 மாதங்களுக்கு நோ-காஸ்ட் இஎம்ஐ சலுகை கிடைக்கிறது.

கனவுல கிடைக்காது.. ரூ.5000 ஆஃபரில் iPhone.. 256GB ஸ்டோரேஜ்.. மாடல்?

ஐபோன் 17 அம்சங்கள் (iPhone 17 Specifications): செராமிக் ஷீல்டு 2 (Ceramic Shield 2) புரொடெக்சன் உடன் 6.3 இன்ச் (2622 x 1206 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவை இந்த ஐபோன் 17 ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பிரீமியம் அம்சங்கள் இதில் கிடைக்கின்றன.

மேலும், எச்டிஆர் (HDR), ட்ரூ டோன் (True Tone) மற்றும் ப்ரோமோஷன் (ProMotion) டிஸ்பிளே டெக்னாலஜிகளும் இந்த ஐபோன் 17 மாடலில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, ஸ்க்ரோலிங் செய்வது முதல் வீடியோ பார்க்கும் அனுபவம் வரை மிகவும் ஸ்மூத்தாக இருக்கும். ஐஓஎஸ் 26 (iOS 26) ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 256 ஜிபி மட்டுமல்லாமல் 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனும் விற்பனைக்கு கிடைக்கிறது.

பர்ஃபாமென்ஸை பொறுத்தவரை, 3என்எம் (3nm) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஏ19 (A19) சிப்செட் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. 5 கோர் ஜிபியு (5-core GPU) கொண்ட இந்த சிப்செட் ஆப்ஸ் யூசேஜ், கேமிங் மற்றும் மல்டி டாஸ்கிங் உள்ளிட்ட பர்ஃபாமென்ஸை சிறப்பாக கையாளும். கேமராவுக்கு மட்டுமல்லாமல், அதிக பர்ஃபாமென்ஸை தேவைப்படும் யூசர்களுக்கும் இந்த ஐபோன் 17 பக்காவாக இருக்கும்.

செல்பீ எடுக்க விரும்பும் கஸ்டமர்களுக்கு 18 எம்பி (18MP) முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஆட்டோ போகஸ் (Auto Focus) மற்றும் ரெடினா ஃபிளாஷ் (Retina Flash) சப்போர்ட் கொண்ட இந்த கேமரா மூலம் 4K ரெசொலூஷனில் வீடியோக்களை ரெக்கார்டு செய்யலாம். மேலும், மேக்ரோ போட்டோகிராபி சப்போர்ட் இருப்பதால், க்ளோஸ் அப் ஷாட்களையும் பக்காவாக எடுக்கலாம்.

பின்பக்கத்தில் 48 எம்பி மெயின் கேமரா மற்றும் 48 எம்பி செகண்டரி கேமரா என டூயல் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மெயின் கேமராவுக்கு சென்சார்-ஷிப்ட் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Sensor-shift Optical Image Stabilization) சப்போர்ட் கிடைக்கிறது. இதனுடன் போட்டோனிக் என்ஜின் (Photonic Engine) மற்றும் ட்ரூ டோன் ஃபிளாஷ் (True Tone Flash) அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

வீடியோ ரெக்கார்டிங் அனுபவத்தை மேம்படுத்த 4K டால்பி விஷன் (4K Dolby Vision) சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. சினிமாடிக் மோடு (Cinematic Mode) மூலம் வீடியோக்களை ரெக்கார்டு செய்யலாம். அதேபோல், ஆட்டோ போகஸ் வசதியும் இருப்பதால், வீடியோ எடுக்கும்போது சப்ஜெக்ட்டை தெளிவாக ஃபோகஸ் செய்ய முடியும். இதனால் போட்டோகிராபி மற்றும் வீடியோகிராபிக்கு இந்த ஐபோன் 17 சிறந்த ஆப்ஷனாக இருக்கும்.

பாதுகாப்பு மற்றும் ஷார்ட் கட் அம்சங்களில் ஃபேஸ் ஐடி (Face ID) அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஆக்சன் பட்டன் (Action Button) வசதியும் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் கேமரா உள்ளிட்ட குறிப்பிட்ட கன்ட்ரோல்களை விரைவாக அக்சஸ் செய்ய முடியும். மேலும், கேமராவில் டெப்த், ஜூம் மற்றும் எக்ஸ்போஷர் போன்ற கன்ட்ரோல்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஆடியோ அனுபவத்திற்காக ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வழங்கப்பட்டுள்ளன. இந்த ஐபோன் 17 ஸ்மார்ட்போன் 7.95 மிமீ தடிமன் கொண்டதாகவும், 177 கிராம் எடை கொண்டதாகவும் உள்ளது. பேட்டரி சார்ஜிங் வசதிகளில் 25W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 40W அடாப்டர் சப்போர்ட் இடம்பெற்றுள்ளது. இதனால் சார்ஜிங் மற்றும் அன்றாட பயன்பாட்டுக்கு தேவையான வசதிகளை இந்த மாடல் வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
iPhone 17 With 256GB Storage Available At Discounted Price on Flipkart Big Billion Days Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X