Home
Mobile

நாளை முதல் SALE.. iPhone 17 மீது ரூ.10,000 - ரூ.64,000 டிஸ்கவுண்ட் அறிவிப்பு.. iPhone Air மீதும் ஆபர்!

ஆப்பிளின் லேட்டஸ்ட் ஐபோன் மாடல்கள் ஆன ஐபோன் 17 சீரிஸின் இந்திய விற்பனை நாளை (செப்டம்பர் 19 ஆம் தேதி) முதல் தொடங்குகிறது. இதன்கீழ் ஐபோன் 17, ஐபோன் ஏர், ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் என மொத்தம் 4 மாடல்கள் ஆபர் விலையில் வாங்க கிடைக்கவுள்ளன.

ஐபோன் 17 சீரீஸ் மீதான ஆபர்கள் (iPhone 17 Series Sale Offers) என்று வரும் போது - அவைகளை 2 வகையாக பிரிக்கலாம். ஒன்று - ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து நேரடியாக வாங்கும் போது கிடைக்கும் சலுகைகள்; இரண்டு - விஜய் சேல்ஸ் உள்ளிட்ட மற்ற ஆப்பிள் ரீடெயிலர்களிடம் இருந்து வாங்கும் போது கிடைக்கும் சலுகைகள்.

நாளை முதல் SALE.. iPhone 17 மீது டிஸ்கவுண்ட்.. iPhone Air மீதும் ஆபர்!

ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து நேரடியாக வாங்கும் போது என்னென்ன சலுகைகள் கிடைக்கும்? ஆப்பிள் நிறுவனம் ஆனது பெரும்பாலான முன்னணி வங்கிகளுடன் 6 மாதங்கள் வரை நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தை வழங்குகிறது. மேலும் தகுதியான அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி கார்டுகளுடன் ரூ.10,000 வரை உடனடி கேஷ்பேக்கையும் வழங்குகிறது

ஐபோன் 17 ப்ரோ மற்றும் 17 ப்ரோ மேக்ஸ் ஆகியவை மாதத்திற்கு ரூ.21,650 இலிருந்து உடனடி கேஷ்பேக் மற்றும் நோ காஸ்ட் இஎம்ஐ உடன் வாங்க கிடைக்கும். ஐபோன் ஏர் ஆனது மாதம் ரூ.19,150 இலிருந்து உடனடி கேஷ்பேக் மற்றும் நோ காஸ்ட் இஎம்ஐ உடன் கிடைக்கும். இதேபோல ஐபோன் 17 ஆனது மாதம் ரூ.12,983 இலிருந்து உடனடி கேஷ்பேக் மற்றும் நோ காஸ்ட் இஎம்ஐ உடன் வாங்க கிடைக்கும்.

ஒருவேளை நீங்கள் ஆப்பிள் டிரேட் இன் விருப்பத்தை தேர்வு செய்தால், உங்களிடம் இருக்கும் "தகுதியான" ஸ்மார்ட்போனை (கடையிலும், ஆன்லைனிலும்) எக்ஸ்சேன்ஜ் செய்து கொள்வதன் மூலம் ரூ.64,000 வரை சேமிக்கலாம். சுவாரசியமாக நீங்கள் தேர்ந்தெடுத்த இஎம்ஐ திட்டத்துடன் இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் பெறலாம்.

க்ரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல் போன்ற ஆப்பிள் ரீடெயிலர்களிடம் இருந்து வாங்கும் போது என்னென்ன சலுகைகள் கிடைக்கும்? ஆப்பிள் விநியோகஸ்தர் ஆன இங்க்ராம் மைக்ரோ (Ingram Micro) வழியாக 6 மாத நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்துடன், ஐபோன் 17 மாடலை வாங்கும்போது ரூ.6,000 உடனடி கேஷ்பேக் கிடைக்கும்

இதேபோல ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ், ஐபோன் ஏர் ஆகியவற்றுக்கான கேஷ்பேக் ஆனது, 6 மாத நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பத்துடன் ரூ.4,000 ஆகும். எக்ஸ்சேன்ஜ் செய்வதன் மூலம் ரூ.7,000 வரை கூடுதல் போனஸ் (Extra Bonus) கிடைக்கும்

எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ கார்டு, பஜாஜ் பைனான்ஸ் மற்றும் பலவற்றின் கீழ் 24 மாதங்கள் வரை நோ காஸ்ட் இஎம்ஐ-ஐ பெறலாம். மேலும், ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் 24 மாதங்களுக்கு 75 சதவீத செலவை செலுத்த அனுமதிக்கும் பிரத்யேக சலுகையையும் பெறலாம்.

க்ரோமா (Croma) வழியாக ஐபோன் 17 மாடலை வாங்கினால் ரூ.6,000 பிளாட் டிஸ்கவுண்ட் கிடைக்கும். இந்த ஆபர் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய இரண்டிலும் கிடைக்கும். விஜய் சேல்ஸ் வழியாக ஐபோன் 17 (256 ஜிபி ஆப்ஷன்) மாடலை வாங்கினால் ரூ.6,000 தள்ளுபடியும், ஐபோன் ஏர், ஐபோன் 17 ப்ரோ மற்றும் அதிக ஸ்டோஎரேஜ் ஆப்ஷன்களுக்கு ரூ.4,000 தள்ளுபடியும் வழங்குகிறது.

கடைசியாக ரிலையன்ஸ் டிஜிட்டல் (Reliance Digital) ஆனது பெருநகரங்கள் மற்றும் இரண்டாம் நிலை நகரங்களில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் கேஷ்பேக் சலுகைகள், பேங்க் ஆபர்களை அறிவித்துள்ளது. அசல் விலைகளை பொறுத்தவரை ஆப்பிள் ஐபோன் 17 ரூ.82,900 முதலும், ஐபோன் 17 ப்ரோ ரூ.1,34,900 முதலும், ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ரூ.1,49,900 முதலும், ஐபோன் ஏர் மாடல் ஆனது ரூ.1,19,900 முதலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

Best Mobiles in India

English summary
iPhone 17 Series iPhone Air India Sale Begins Tomorrow September 19 Apple Offers Vs Retailers Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X