iPhone 17 மாடலை நம்பி வாங்க நச்சுனு 5 காரணங்கள்.. வாங்காமல் தவிர்க்க நியாயமான 3 காரணங்கள்!
சுற்றி வளைத்து கதை பேசாமல் நேரடியாக விஷயத்திற்கு வந்துவிடுவோம். ஆப்பிளின் லேட்டஸ்ட் ஐபோன் மாடல் ஆக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஐபோன் 17-ஐ (iPhone 17) வாங்கலாமா? வேண்டாமா? ஏன் நம்பி வாங்கலாம் என்பதற்கான 5 நல்ல காரணங்களும், ஏன் வாங்காமல் தவிர்க்கலாம் என்பதற்கான 3 நியாயமான காரணங்களும் இதோ:
ஐபோன் 17 மாடலை நம்பி வாங்க 5 காரணங்கள்:
1. தரமான வியூவிங் எக்ஸ்பீரியன்ஸை வழங்கும் ப்ரோமோஷன் டிஸ்பிளே
2. இன்னும் அதிகமாக நீடித்து உழைக்கும்படியான வடிவமைப்பு
3. (சொல்லவே வேண்டாம்) டூயல் 48எம்பி ரியர் கேமராக்கள்
4. முன்னெப்போதும் இல்லாதபடியான 256ஜிபி பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன்
5. ஒப்பீட்டளவில் நீண்ட பேட்டரி லைஃப்

ஐபோன் 17 மாடலை வாங்காமல் தவிரக்க 3 காரணங்கள்:
1. ஆச்சரியப்படும் விதமாக எல்லா ஐபோன் 17 மாடல்களுமே மந்தமான கலர் ஆப்ஷன்களை பெற்றுள்ளன
2. ஐபோன் 17 மாடலின் ஹீட்டிங்கை திறம்பட சமாளிக்க வேப்பர் சேம்பர் இல்லை
3. ஐபோன் 17 மாடலில் புதிதாக எந்த ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் அம்சங்களும் அறிமுகம் செய்யப்படவில்லை.
ஆப்பிள் ஐபோன் 17 ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள், விலை மற்றும் விற்பனை விவரங்கள்: ஐபோன் 17 மாடலின் பேஸிக் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.82,900 க்கும், ஹைஎண்ட் 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,02,900 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் 17-க்கான ப்ரீ-ஆர்டர் ஆனது செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் தொடங்கும்; டெலிவரி செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்கும்.
ஐபோன் 17 மாடலின் விரிவான அம்சங்கள்: ஐஓஎஸ் 26 (iOS 26) கொண்டு இயங்கும் ஐபோன் 17 மாடல் ஆனது டூயல் சிம் (நானோ + இசிம்) ஆதரவுடன் வருகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் உடனான பெரிய 6.3-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
மேலும் ஐபோன் 17 மாடலின் டிஸ்பிளேவானது - புதிய ப்ரோமோஷன் (ProMotion) பேனலை ஆதரிக்கிறது. இது ஐபோன் 16 ப்ரோ மாடல்களில் மாடல்களில் இருந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட அம்சமாகும். மேலும் 3000 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ், மேம்படுத்தப்பட்ட செராமிக் ஷீல்ட் 2 பாதுகாப்பு மற்றும் ஆஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே ஆகிய அம்சங்களையும் ஆதரிக்கிறது.
தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்கை கொண்டுள்ள ஐபோன் 17 மாடலின் கேமராக்களை பொறுத்தவரை - இது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் எப் /1.6 அபெர்க்ஷர் மற்றும் சென்சார்-ஷிப்ட் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடனான 48 மெகாபிக்சல் ஃப்யூஷன் பிரைமரி கேமரா உள்ளது
இந்த சென்சாரால் 52மிமீ குவிய நீளம் கொண்ட 2எக்ஸ் டெலிஃபோட்டோ கேமராவாகவும் செயல்பட முடியும். இதனுடன் எப்/2.2 அபெர்க்ஷர் மற்றும் மேக்ரோ திறன்களை கொண்ட 48 மெகாபிக்சல் ஃப்யூஷன் அல்ட்ரா-வைட் கேமராவும் உள்ளது. முன்பக்கத்தில், நீங்கள் ஒரு புதிய சென்டர் ஸ்டேஜ் செல்ஃபி கேமராவை பெறுவீர்கள்.
சிப்செட்டை பொறுத்தவரை ஐபோன் 17 மாடல் ஆனது ஏ19 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 16-கோர் நியூரல் எஞ்சினை கொண்டுள்ளது. ஆப்பிளின் கூற்றுப்படி, பவர் எபிஷியன்ட் ஏஐ இன்பெரென்ஸ் (Power-efficient AI inference), அதிகரித்த மெமரி பேண்ட்வித் மற்றும் மேம்பட்ட செயல்திறனை வழங்கும்.
ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 17 மாடலின் ஸ்டோரேஜையும் அதிகரித்துள்ளது, பேஸிக் ஸ்டோரேஜ் ஆக 256ஜிபி உள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி, ஐபோன் 17 மாடல் ஆனது ஐபோன் 16 உடன் ஒப்பிடும்போது எட்டு மணிநேரம் வரை கூடுதல் பேட்டரி ஆயுளை வழங்கும். மேலும் இது வேகமாக சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது. ஆப்பிளின் கூற்றுப்படி சில நிமிடங்களில் 50 சதவீதம் சார்ஜ் ஆகும்; 10 நிமிட சார்ஜ் எட்டு மணிநேர பயன்பாட்டை வழங்கும்.


Click it and Unblock the Notifications








