ஐபோன் 17 ப்ரோ சீரிஸ் Vs ஐபோன் 16 ப்ரோ சீரிஸ்.. சிப்செட், கேமரா, டிசைன்.. மொத்தமா வந்தது அப்கிரேட்!
இந்திய மார்கெட்டில் ஐபோன் 17 ப்ரோ (iPhone 17 Pro) மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (iPhone 17 Pro Max) ஆகிய மாடல்கள் வெளியாகிவிட்டன. இந்த மாடல்களின் டிசைன் முதல் கேமரா மற்றும் சிப்செட் போன்றவற்றில் முந்தைய மாடல்களைவிட கூடுதல் அப்கிரேட்களை பார்க்க முடிகிறது. ஆகவே, ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) ஆகிய மாடல்களை இவற்றுடன் ஒப்பிட்டு பார்க்கலாம்.
டிசைன் & பில்ட் (Design & Build)
ஐபோன் 17 ப்ரோ சீரிஸ் மாடல்களில் ஹீட்-போர்ஜ்டு அலுமினிய யூனிபாடி டிசைன் கிடைக்கிறது. முந்தைய மாடல்களை விட லைட்டாக இருக்கிறது. செராமிக் ஷீல்டு 2 புரொடெக்சன் கொடுக்கிறது. ஐபோன் 17 ப்ரோ சீரிஸ் மாடல்களில் மாடல்களில் செராமிக் ஷீல்டு மற்றும் டைட்டானியம் ஃபிரேம் மட்டுமே கிடைக்கிறது.

ப்ராசஸர் (Processor)
வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம் (Vapor Chamber Cooling System) கொண்ட ஏ19 ப்ரோ (A19 Pro) சிப்செட்டானது ஐபோன் 17 ப்ரோ சீரிஸ் மாடல்களில் கிடைக்கிறது. முந்தைய மாடல்களைவிட 40 சதவீதம் பர்ஃபாமென்ஸ் அதிகமாக ஜிபியு மற்றும் சிபியு எதிர்பார்க்கலாம். ஐபோன் 17 ப்ரோ சீரிஸ் மாடல்களில் ஏ18 ப்ரோ (A18 Pro) சிப்செட் கிடைக்கிறது.
ரியல் கேமராக்கள் (Rear Cameras)
48 எம்பி மெயின் + 48 எம்பி அல்ட்ரா வைடு + 48 எம்பி டெலிபோட்டோ கேமரா ஐபோன் 17 ப்ரோ சீரிஸ் மாடல்களில் கிடைக்கிறது. 8X ஆப்டிகல் ஜூம் கிடைக்கிறது. ஐபோன் 16 சீரிஸ் மாடல்களில் 48 எம்பி மெயின் + 48 எம்பி அல்ட்ரா வைடு + 12 எம்பி டெலிபோட்டோ கிடைக்கிறது. மேக்ஸில் 5X ஆப்டிகல் ஜூம், ப்ரோவில் 3X ஜூமிங் உள்ளது.
ஃப்ரன்ட் கேமரா (Front Camera)
ஐபோன் 17 ப்ரோ சீரிஸ் மாடல்களில் 18 எம்பி சென்டர் ஸ்டேஜ் செல்பீ கேமரா கிடைக்கிறது. ஆனால், 16 ப்ரோ சீரிஸ் மாடல்களில் 12 எம்பி ட்ரூடெப்த் கேமரா மட்டுமே கிடைக்கிறது. அதேபோல 17 ப்ரோ சீரிஸ் மாடல்களில் 120FPS 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 16 ப்ரோ சீரிஸ் மாடல்களில் 60FPS 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது.

ஓஎஸ், பீச்சர்கள் (OS, Features)
ஐபோன் 17 ப்ரோ சீரிஸ் மாடல்களில் ஐஓஎஸ் 26 (iOS 26) மற்றும் ப்ரோரெஸ் ராவ் (ProRes RAW), ஆப்பிள் லாக் 2 (Apple Log 2) மற்றும் ஜென்லாக் (Genlock) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. ஐபோன் 16 ப்ரோ சீரிஸ் மாடல்களில் ஐஓஎஸ் 18 (iOS 18) மற்றும் ப்ரோரெஸ் (ProRes) கிடைக்கிறது. மேலும், வழக்கமான ஆப்பிள் இன்டலிஜன்ஸ் பீச்சர்கள் கிடைக்கிறது.
ஐபோன் 17 ப்ரோ சீரிஸ் அப்கிரேட்கள் (iPhone 17 Pro Series Upgrades)
முந்தைய மாடல்களைவிட அதிக டியூரபிள் கொடுக்கும்படியான பில்ட் குவாலிட்டி மற்றும் டிசைனில் அப்கிரேட்களை பார்க்க முடிகிறது. அதேபோல பர்ஃபாமென்ஸ் அதிகரிக்கும்படி சிப்செட் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. கேமராவில் அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றுள்ளது. அதேபோல ஓஎஸ் அப்கிரேட் மூலம் புதிய பீச்சர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
வேப்பர் சேம்பர் கூலிங்: மற்ற நிறுவனங்களை போல வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம் சேர்க்கப்பட்டுள்ளதால், ஏ19 ப்ரோ சிப்செட்டின் பர்ஃபாமென்ஸ் 40 சதவீதம் வரையில் அதிகரிக்க இருக்கிறது. இது ஹெவி கேமிங், எடிட்டிங் அல்லது 8K வீடியோ ரெக்கார்டிங் போன்றவற்றின்போதும் லேக்-ப்ரீ பர்ஃபாமென்ஸ் கொடுக்கிறது.
அதேபோல ப்யூஷன் கேமரா சிஸ்டம் போட்டோகிராபி மற்றும் வீடியோகிராபி பிரியர்களுக்கு முக்கியமான அப்கிரேட்டாக இருக்கிறது. இது சினிமாடிக் தரத்தில் அவுட்புட் கொடுக்கும்படி பில்ட் செய்யப்பட்டுள்ளது. டைட்டானியம் டிசைனுக்கு அடுத்து மேலும் லைட்வெயிட் மாடலாக இருக்க அலுமினிய யூனிபாடிக்கு மாறி இருக்கிறது.


Click it and Unblock the Notifications








