மொத்த சாம்ராஜ்யமே மிரளும் iPhone 17 Pro.. விலையை கேட்டா தலை சுத்தும்.. ஆனால், அதுக்கு வச்சாச்சு ஒரு ட்விஸ்ட்!
ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே ஐபோன் 17 சீரிஸ் (iPhone 17 Series) மாடல்களுக்கு காத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு ஏற்ப பீச்சர்கள், டிசைன் விவரங்கள் மற்றும் விலை விவரங்கள் மார்கெட்டில் கசிந்து, மேலும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இப்போது, ஐபோன் 17 ப்ரோ (iPhone 17 Pro) போனின் விலை விவரங்கள் கசிந்து, பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரியர்களையே மூக்கில் விரல் வைக்க செய்துள்ளது. அதே நேரத்தில் அந்த விலைக்கு ஏற்ப ஒரு முக்கிய மாற்றமும் இருக்கப் போகிறது.
ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) வெளியாகிய போது, அதனுடைய 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை 999 அமெரிக்க டாலர்களாக இருந்தது. ஆனால், இந்திய மார்கெட்டில் ரூ.1,19,900 பட்ஜெட்டில் வெளியாகியது. இப்போது, வெளியாக இருக்கும் ஐபோன் 17 ப்ரோ மாடலானது 50 டாலர்கள் விலை அதிகமாக இருக்கும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆகவே, 1,049 அமெரிக்க டாலர்களாக விலை இருப்பது தெரிகிறது. இந்தியாவில் ரூ.1,21,900 பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது. ஏனென்றால், அமெரிக்காவில் 1,049 அமெரிக்க டாலர்களுக்கு வெளியாகும் ஐபோன்களின் விலை இந்தியாவில் ரூ.1,21,900ஆக இருந்திருக்கிறது. அதாவது, ஐபோன் 16 ப்ரோ போனின் 256 ஜிபி மாடலின் விலை 1,049 அமெரிக்க டாலர்களாகும்.
ஆனால், இந்தியாவில் ரூ.1,29,900 பட்ஜெட்டில் வெளியாகியது. ஆகவே, அதே விலையில் ஐபோன் 17 ப்ரோ மாடலும் வெளியாகும் என்று மார்கெட்டில் தகவல் கசிந்துள்ளது. இது அதிக விலையாக தோன்றலாம். ஆனால், ஆப்பிள் நிறுவனமானது, ஐபோன் 17 ப்ரோ மாடலில் 128 ஜிபி வேரியண்ட்டுக்கு பதிலாக 256 ஜிபி கொண்ட வேரியண்ட்டை களமிறக்க இருக்கிறது.
ஆகவே, பேஸ் வேரியண்ட்டே 256 ஜிபியாக கிடைக்க இருப்பதால், இந்த விலை முந்தைய ஐபோன் 16 ப்ரோ மாடலுடன் ஒப்பிடுகையில் நியாயமான பட்ஜெட்டாகவே தெரிகிறது. இந்த விலை மற்றும் ஸ்டோரேஜ் விவரங்கள் சீனாவின் இன்ஸ்டன்ட் டிஜிட்டல் (Instant Digital) டிப்ஸ்டர் மூலமாக வெய்பூ (Weibo) தளத்தில் கசிந்துள்ளது. இதனால் ஆப்பிள் யூசர்கள் குஷியில் இருக்கின்றனர்.
ஏனென்றால், இனிமேல் ப்ரோ மாடல்களில் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் 256 ஜிபியாக மாறப் போகிறது. ஐபோன் 17 சீரிஸ் செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதில் ஐபோன் 17 (iPhone 17), ஐபோன் 17 ஏர் (iPhone 17 Air), ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (iPhone 17 Pro Max) வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாடல்களின் விலையும் 50 அமெரிக்க டாலர்கள் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. ஆப்பிள் நிறுவனமானது, ஐபோன் 17 சீரிஸ் மாடல்களின் எந்த பீச்சர்களையும் இதுவரை உறுதி செய்யவில்லை. இருப்பினும், ஐபோன் 17 ப்ரோ மாடலின் டிஸ்பிளே, கேமரா, சிப்செட் போன்ற ஒட்டுமொத்த பீச்சர்களும் மார்கெட்டில் கசிந்துள்ளன. இதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஐபோன் 17 ப்ரோ அம்சங்கள் (iPhone 17 Pro Specifications): 6.3 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. ஏ19 ப்ரோ சிப்செட் வருகிறது. 48 எம்பி மெயின் + 48 எம்பி அல்ட்ரா வைடு + 48 எம்பி டெலிபோட்டோ கேமரா வர இருக்கிறது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்க இருக்கிறது. ஐஓஎஸ் 26 இதில் எதிர்பார்க்கலாம். இந்த பீச்சர்கள் உறுதியாக செப்டம்பர் 9ஆம் தேதிக்கு காத்திருப்போம்.
Image Credits: Instant Digital


Click it and Unblock the Notifications








