Vijay Sales நீ வாழ்க வாழ்க.. முன் எப்போதும் இல்லாத OFFER விலையில் லேட்டஸ்ட் iPhone.. எந்த மாடல்?
ஆப்பிள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஐபோன்களில் ஒன்றான ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடல் தற்போது விஜய் சேல்ஸில், இதுவரை வாங்க கிடைக்காத மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தள்ளுபடிகள் மற்றும் வங்கி சலுகைகளுடன் சேர்த்து ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடல் மீது சுமார் ரூ.12,000 தள்ளுபடி கிடைக்கிறது
இதன் மூலம் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலின் இறுதி ஆபர் விலையை ரூ.1.37 லட்சம் ஆக குறைக்கலாம். நினைவூட்டும் வண்ணம் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலின் அசல் அறிமுக விலை ரூ. 1,49,900 ஆகும். இப்போது விஜய் சேல்ஸில் ரூ. 2,000 நேரடி விலை குறைப்பை பெற்று ரூ.1,47,900 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

ரூ.2000 என்கிற முன்கூட்டிய விலை குறைப்புடன், உடனடி தள்ளுபடிகள் மற்றும் கேஷ்பேக் திட்டங்கள் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி சலுகைகள் மூலம் வாங்குபவர்கள், ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலையை மேலும் குறைக்கலாம். இறுதி விலையானது கார்டு வழங்குநர் மற்றும் பொருந்தக்கூடிய விதிமுறைகளை பொறுத்தது, ஆனால் அனைத்து பலன்களையும் பயன்படுத்தும்போது ரூ.1.37 லட்சத்திற்கும் குறைவாக இருக்கலாம்.
முன்னரே குறிப்பிட்டபடி ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகக்குறைந்த விலைகளில் இதுவும் ஒன்றாகும். ஆப்பிளின் நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஐபோன் சீரீஸ் (ஐபோன் 18 சீரீஸ்) பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரித்து வரும் வேளையில் இந்த விலை குறைப்பு வந்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஐபோன் 18 சீரிஸ் அறிமுகம் தொடர்பான பேட் நியூஸ்: ஐபோன் 18 சீரீஸின், முதலில் ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் மட்டுமே அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பல மாதங்களாவே ஐபோன் 18 சீரீஸ் மாடல்கள் ஆனது மொத்தமாக அறிமுகம் செய்யப்படாமல், பிரித்து பிரித்து அறிமுகம் செய்யப்படலாம் என்கிற தகவல் சுற்றி வருகிறது.
அதாவது இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் (செப்டம்பர் 2026 இல்) ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் மட்டும் வெளியாகும் என்றும், பின்னர் ஐபோன் 18 மாடல் ஆனது அடுத்த ஆண்டு "சரியாக இதே நேரத்தில்" ஐபோன் 18இ மாடலுடன் சேர்த்து அறிமுகம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.
ஐபோன் 18 சீரிஸ் விலை தொடர்பான குட் நியூஸ்: வரவிருக்கும் ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் ஆகியவை அவற்றின் முந்தைய மாடல்களை போன்றே விலை நிர்ணயத்தைக் கொண்டிருக்கக்கூடும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் மிகவும் நம்பகமான ஆப்பிள் ஆய்வாளர் ஆன மிங்-சி குவோவிடம் இருந்து வந்துள்ளதால், பெரும்பாலும் இது உண்மையாக மாற அதிக வாய்ப்புள்ளது.
டிஎஃப் இன்டர்நேஷனல் செக்யூரிட்டீஸின் மிகவும் மதிக்கப்படும் ஆய்வாளரான மிங்-சி குவோவின் கூற்றுப்படி, ஆப்பிள் நிறுவனம் அதன் அடுத்த ஹை-எண்ட் மாடல்களுக்கான விலைகளை நிலையானதாக வைக்கலாம். அதாவது சந்தையில் நிலவும் தற்போதைய நிலைமைகளை (நினைவகம் மற்றும் சிப்கள் போன்ற கூறுகளின் விலை உயர்வுகளை, அதற்கான செலவுகளை) ஆப்பிள் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களின் தலையில் ஏற்றாது என்பது போல் தெரிகிறது.
மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்படும் செலவீனங்களை விலை உயர்வு மூலம் வாடிக்கையாளர்களின் தலையில் ஏற்றி வருகின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆப்பிள் அதை செய்யப்போவதில்லை என்பது போல் தெரிகிறது. அதற்கான ஆப்பிளின் செலவுகள் அப்படியே இருக்கும் என்று அர்த்தமல்ல; ஆப்பிளுக்கு அதிக செலவு இருக்காது ஏன்னு அர்த்தமல்ல. கண்டிப்பாக இருக்கும். ஆனால் ஆப்பிள் இந்த அதிகரிப்பை நுகர்வோருக்கு வழங்காது என்பதே இதன் பொருள் ஆகும்.


Click it and Unblock the Notifications








