Home
Mobile

இம்புட்டு விலையா.. ஆடிப்போன ஆப்பிள் பிரியர்கள்.. iPhone 17 ப்ரோ மேக்ஸ் விலை அப்படிங்க.. எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் இருக்கும் ஆப்பிள் பிரியர்கள் மூக்கில் விரல் வைக்கும்படியான பட்ஜெட்டில் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (iPhone 17 Pro Max) வெளியாக இருப்பது தெரிகிறது. ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடலைவிட அதிக விலைக்கு வெளியாகவுள்ளது. இந்தியாவில் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை இப்போது கசிந்துள்ளது. இந்த ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் விலை எப்படி, பீச்சர்கள் என்ன உள்ளிட்ட முழு விவரங்கள் இதோ.

ஐபோன் 17 சீரிஸ் (iPhone 17 Series) மாடல்கள் செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாக இருக்கின்றன. இதில் ஐபோன் 17 (iPhone 17), ஐபோன் 17 ஏர் (iPhone 17 Air), ஐபோன் 17 ப்ரோ (iPhone 17 Pro) மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (iPhone 17 Pro Max) ஆகிய மாடல்கள் வெளியாக இருக்கின்றன. அதே நாளில் ப்ரீ-ஆர்டருக்கும் கிடைக்க இருக்கிறது. செப்டம்பர் 19ஆம் தேதி முதல் விற்பனை தொடங்க இருக்கிறது.

இம்புட்டு விலையா.. ஆடிப்போன பிரியர்கள்.. iPhone 17 ப்ரோ மேக்ஸ் விலை?

இதனால், அந்த மாடல்களின் விலை விவரங்கள் கசிய தொடங்கிவிட்டன. அந்த வகையில் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலின் அமெரிக்க மற்றும் யுஏஈ மார்கெட் விலை மட்டுமல்லாமல், இந்தியாவில் அந்த மாடலுக்கு நிர்ணயிக்கப்படும் விலை விவரங்களும் கசிந்துள்ளன. இது ஆப்பிள் பிரியர்களை முக்கில் விரல் வைக்கும் செய்யும்படி அதிக விலை கொண்டுள்ளது.

ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் விலை

இந்திய மார்கெட்டில் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடலின் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட பேஸ் வேரியண்ட்டின் விலை ரூ.1,44,900ஆக இருந்தது. ஆனால், ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலின் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட பேஸ் வேரியண்ட்டின் விலை ரூ.1,64,990ஆக இருக்கும் என்று தகவல் கசிந்துள்ளது. ஆகவே, 512 ஜிபி மற்றும் 1 டிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்களில் விலை கூடுதலாக இருக்கும்.

இதே ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலின் அமெரிக்க விலை 1,249 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,10,037) ஆகவும், யுஏஈ மார்கெட் விலை 5,299 திர்ஹாம்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,27,243) ஆகவும் இருக்கும் என்றும் தகவல் கசிந்துள்ளது. எப்படியும் நாளை அதிகார்பூர்வ விலை விவரங்கள் வெளியாகிவிடும். முதலில் அமெரிக்க விலை, பிறகு இந்திய விலை தெரியவரும்.

ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள் (iPhone 17 Pro Max Specifications): இந்த 17 ப்ரோ மேக்ஸ் மாடலில் 48 எம்பி மெயின் கேமரா + 48 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 48 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்க இருக்கிறது. 24 எம்பி செல்பீ கேமரா கிடைக்க இருக்கிது. 5,000mAh பேட்டரி வர இருக்கிறது. ஐஓஎஸ் 26 (iOS 26) கிடைக்க இருக்கிறது.

இந்த ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் ஒயிட் (White), கிரே (Grey), டார்க் ப்ளூ (Dark Blue) மற்றும் ஆரஞ்ச் (Orange) ஆகிய கலர்கள் கிடைக்கின்றன. இந்த பீச்சர்களும் அதிகாரப்பூர்வமானவை கிடையாது. ட்விட்டரில் கசிந்துள்ள பீச்சர்களாகும். இதற்கு முன்னதாக வெளியான ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடலில் சூப்பர் ரெடினா ஓஎல்இடி டிஸ்பிளே கிடைத்தது.

சிக்ஸ் கோட் ஏ18 ப்ரோ 3என்எம் (Six-Core A18 Pro 3nm) சிப்செட் மற்றும் ஐஓஎஸ் 18 (iOS 18) கிடைக்கிறது. 48 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 48 எம்பி டெலிபோ்டோ கேமரா கிடைத்தது. ஆக்சன் பட்டன் கிடைத்து. இந்த பீச்சர்களில் அப்கிரேட் செய்யப்பட்டு ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Best Mobiles in India

English summary
iPhone 17 Pro Max Price in India Tipped Ahead of Launch on September 9 Expected Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X