Home
Mobile

யம்மாடியோவ்.. Apple-இன்‌ முதல் 2TB மாடல்.. விண்ணை முட்டும் iPhone 17 Pro Max விலை.. எவ்வளவு தெரியுமா?

ஆப்பிள் நிறுவன வரலாற்றிலேயே முதல் முறையாக 2 டிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலாக ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (iPhone 17 Pro Max) வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் இந்த மாடலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை விவரங்களும் வெளியாகிவிட்டன. எவ்வளவு விலைக்கு கிடைக்க இருக்கிறது? எப்போது விற்பனைக்கு கிடைக்கும்? ப்ரீ-ஆர்டருக்கு கிடைக்கிறதா? உள்ளிட்ட விவரங்கள் இதோ.

இதுவரையில் அதிகபட்சம் 1 டிபி வரையில் மட்டுமே ஆப்பிள் நிறுவனம் ஸ்டோரேஜ் கொடுத்து வந்தது. ஆனால், இப்போது ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலில் 2 டிபி ஸ்டோரேஜ் கொடுத்து போட்டி நிறுவனங்களை மிரளவிட்டுள்ளது. இதற்கு ஏற்ப விலையும் விண்ணை முட்டும்படி இருக்கிறது. இந்தியாவில் ரூ.1,49,900 ஆரம்ப விலைக்கு விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.

யம்மாடியோவ்.. Apple-இன்‌ முதல் 2TB மாடல்.. விண்ணை முட்டும் Pro Max!

ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் விலை (iPhone 17 Pro Max Price)
256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.1,49,900ஆகவும், 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் ரூ.1,69,900ஆகவும் மற்றும் 1 டிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் ரூ.1,89,900ஆகவும் இருக்கிறது. அதேபோல டாப்-எண்ட் மாடலாக இருக்கும் 2 டிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.2,29,900ஆக இருக்கிறது. இந்த விலையுடன் செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் ப்ரீ-ஆர்டருக்கு கிடைக்கிறது.

அதேபோல செப்டம்பர் 19ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. மேலும், ஐபோன் 17 ப்ரோ மாடலின் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.1,34,900ஆக இருக்கிறது. 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.154900ஆகவும், 1 டிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.1,74,900ஆகவும் இருக்கிறது.

இந்த மாடல்களிலும் சில்வர் (Silver), காஸ்மிக் ஆரஞ்ச் (Cosmic Orange) மற்றும் டீப் ப்ளூ (Deep Blue) ஆகிய மூன்று கலர்கள் பொதுவாக கிடைக்கின்றன. அலுமினியம் யுனிபாடி டிசைன் கிடைக்கிறது. ஏ19 ப்ரோ (A19 Pro) சிப்செட்டுடன் வேப்பர் சேம்பர் கிடைக்கிறது. புதிய செராமிக் ஷீல்டு 2 (Ceramic Shield 2) டிஸ்பிளே பாதுகாப்பு கிடைக்கிறது.

யம்மாடியோவ்.. Apple-இன்‌ முதல் 2TB மாடல்.. விண்ணை முட்டும் Pro Max!

ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள் (iPhone 17 Pro Max Specifications)
குவாட் பிக்சல் கொண்ட 48 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. கூடவே. 48 எம்பி ப்யூஷன் அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 48 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. இதுவொரு ப்ரோ ப்யூஷன் கேமரா (Pro Fusion) மாடலாக இருக்கிறது. அதேபோல லோவ்-லைட் போட்டோகிராபி மற்றும் நைட் மோட் (Night mode) கொடுக்கிறது.

ஆகவே, ஷார்ப் இமேஜ்கள் மற்றும் நேச்சுரல் கலர் அவுட்புட் எதிர்பார்க்கலாம். 18 எம்பி சென்டர் ஸ்டேஜ் பிரண்ட் கேமரா கிடைக்கிறது. ஆகவே, சென்டர் ஸ்டேஜ் வீடியோ மற்றும் செல்பீகளை எடுத்து கொள்ள முடியும். சினிமாடிக் அவுட்புட் கொடுக்கும்படி ப்ரோ வீடியோ (Pro Video) கிடைக்கிறது. மேலும், ப்ரோரெஸ் ராவ் (ProRes RAW) மற்றும் ப்ரோ வொர்க்ப்ளோ (Pro workflows) கிடைக்கிறது.

இந்த ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலில் பெரிய பேட்டரி கிடைக்கிறது. இதில் 37 மணி நேரங்களுக்கு பிளேபேக் பெற்று கொள்ள முடியும். 20 நிமிடங்களில் 50 சதவீத சார்ஜ் செய்து கொள்ள முடியும். 6.9 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்பிளே மற்றும் அதில் ப்ரோமோஷன் சப்போர்ட் கொண்ட 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone 17 Pro Max Becomes First Apple Phone to Offer 2TB Storage Check India Pricing
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X