என்ன டா பண்ணி வச்சி இருக்கீங்க.. அடுத்த iPhone மாடல்.. ஷாக் ஆன சுந்தர் பிச்சை!
ஆப்பிள் (Apple) நிறுவனம் இறங்கி அடிக்க முடிவு செய்துவிட்டதை, ஐபோன் 16இ அறிமுகத்திலேயே புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் இதெல்லாம் வெறும் ஆரம்பம் தான் என்கிற அளவிற்கு ஆப்பிள் நிறுவனத்தின் "ஆல் நியூ" ஐபோன் 17 ஏர் மாடல் (iPhone 17 Air) மீது எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள் உள்ளன.
இதற்கிடையில் ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 17 சீரிஸில் உள்ள ப்ரோ மாடல்களில் புதிய ரியர் கேமரா டிசைனை அறிமுகப்படுத்தும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. டிப்ஸ்டர் மஜின் பு என்பவர் வழியாக ஐபோன் 17 ப்ரோ மாடலின் கேஸ் (iPhone 17 Pro Case) லீக் செய்யப்பட்டுள்ளது. இது ஐபோன் 17 ப்ரோ மாடல் ஆனது ரவுண்டட் ரெக்டாங்குலர் கேமரா ஐலேண்ட் (rounded rectangular camera island) டிசைனை கொண்டிருப்பதை உறுதிப்படுத்துகிறது.

டக்கென்று பார்ப்பதற்கு இது கூகுள் பிக்சல் சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் பார்க்கும் டிசைனின் சற்றே பெரிய வெர்ஷனை போலவே உள்ளது. டிப்ஸ்டர் மஜின் பு (Tipster Majin Bu) வழியாக லீக் ஆன ஐபோன் 17 ப்ரோ கேஸ்கள் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், ஃபிளாஷ் யூனிட் மற்றும் ஒரு லிடார் ஸ்கேனர் ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. கூடவே பக்கவாட்டில் ஆக்ஷன் பட்டன் மற்றும் கேமரா கண்ட்ரோல் உள்ளிட்ட பட்டங்களையும் காண முடிகிறது
ஆஃப்-ஒயிட், லைட் பர்பிள், லைட் ப்ளூ, லைட் க்ரீன் மற்றும் சார்கோல் க்ரே ஆகிய கலர்களில் ஐபோன் 17 ப்ரோவின் கேஸ்களை காண முடிகிறது. கேஸின் உள்ளே, ஐபோன் 17 ப்ரோ ஒயிட் மற்றும் டார்க் கலர் பேக்-ஐ கொண்டிருப்பதையும் காண முடிகிறது.
ஆப்பிள் ஐபோன் 17 சீரீஸ் எப்போது அறிமுகமாகும்? ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 17 சீரிஸ் மாடலக்ளை இந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யும். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ஐபோன் 17 சீரீஸ் மாடல்கள் வருகிற செப்டம்பர் 11 - 13 ஆம் தேதிகளுக்கு இடையில் அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் ஐபோன் 17 சீரீஸின் கீழ் எத்தனை மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம்? இந்த முறை ஐபோன் 17 சீரிஸின் கீழ் 4 மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது - ஐபோன் 17, ஐபோன் 17 ஏர், ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ். வடிவமைப்பில் சில மாற்றங்கள், கேமராக்கள் மற்றும் டிஸ்பிளேக்களில் சில மேம்பாடுகள் என ஐபோன் 16 சீரீஸில் இருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!
ஆப்பிள் ஐபோன் 17 சீரிஸ் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? ஐபோன் 17 சீரீஸ்-ன் பேஸிக் ஐபோன் 17 மாடல் ஆனது ரூ.89,900 க்கும், ஆல் நியூ ஐபோன் 17 ஏர் மாடல் ஆனது ரூ.99,900 க்கும், ஐபோன் 17 ப்ரோ மாடல் ஆனது ரூ.1,39,900 க்கும் மற்றும் ஹை-எண்ட் வேரியண்ட் ஆன ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடல் ஆனது ரூ.1,64,900 க்கும் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன் 17 சீரிஸில் என்னென்ன கேமரா சென்சார்களை எதிர்பார்க்கலாம்? ஐபோன் 17 சீரீஸின் ப்ரோ மாடல்கள் வைட், அல்ட்ரா-வைட் மற்றும் சிறந்த போர்ட்ரெய்ட்களுக்காக 85 மிமீ சமமான குவிய நீளத்துடன் கூடிய புதிய டெலிஃபோட்டோ லென்ஸ்-ஐ உள்ளடக்கிய 48எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்டிகல் ஜூம் 3.5எக்ஸ் ஆக குறையக்கூடும் என்றாலும், ஆப்பிள் சென்சார் க்ராப்பிங்கை பயன்படுத்தி 7எக்ஸ் "லாஸ்லெஸ்" டிஜிட்டல் ஜூமை அறிமுகப்படுத்தலாம். மறுகையில் உள்ள ஸ்டாண்டர்ட் ஐபோன் 17 மற்றும் ஐபோன் 17 ஏர் ஆகிய மாடல்களில் சிங்கிள் 48MP ரியர் கேமரா இடம்பெறலாம். அனைத்து மாடல்களும் 24எம்பி செல்பீ கேமரா அப்கிரேட்-ஐ பெறலாம்.


Click it and Unblock the Notifications








