Home
Mobile

செப்டம்பர் 9 உறுதி.. வருகிறது iPhone 17 சீரிஸ்.. 48எம்பி கேமரா.. 25W சார்ஜிங்.. இதோ முழு விவரம்..

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 17 (iPhone 17) மாடல்களை செப்டம்பர் 9-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது ஆப்பிள் நிறுவனத்தின் Awe Dropping எனும் நிகழ்வு தான் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் ஐபோன் 17 சீரிஸ், ஆப்பிள் ஏர்போட்ஸ் ப்ரோ 3, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3 உள்ளிட்ட பல சாதனங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

அதுவும் ஐபோன் 17 சீரிஸில், ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ஏர், ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் போன்ற போன்கள் தான் அறிமுகம் செய்யப்பட்ட உள்ளது. குறிப்பாக இந்திய நேரப்படி செப்டம்பர் 9ஆம் தேதி இரவு 10:30 மணிக்கு இந்த ஆப்பிள் நிகழ்ச்சி நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

செப்டம்பர் 9 உறுதி.. வருகிறது iPhon 17 சீரிஸ்.. 48எம்பி கேமரா..

ஐபோன் 17 ப்ரோ
சமீபத்தில் ஐபோன் 17 ப்ரோ மாடலின் அம்சங்கள் வெளியானது. அதாவது 6.3 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய ஐபோன் 17 ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்படும். மேலும் ஏ19 ப்ரோ சிப்செட் வசதி இந்த புதிய போனில் உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

அதேபோல் 48 எம்பி மெயின் + 48 எம்பி அல்ட்ரா வைடு + 48 எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ஐபோன் 17 ப்ரோ போன் மாடல் வெளிவரும் என்று கூறப்படுகிறது. பின்பு 25W ஃபாஸ்ட் சார்ஜிங், ஐஓஎஸ் 26 உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த புதிய ஐபோனில் உள்ளன.

ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 17 ப்ரோ மாடலில் வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டமை (Vapor chamber cooling system) சேர்க்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. லீக்கர் மஜின் பு (Leaker Majin Bu) பகிர்ந்துள்ள ஒரு புகைப்படத்தின்படி, கடந்த பல ஆண்டுகளாக ஆண்ட்ராய்டு (Android) ஸ்மார்ட்போன்களில் உள்ள உள்ள வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம் ஆனது ஐபோன்களுக்கும் வருவதாக பரிந்துரைத்தது.

ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்
ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் பேட்டரி அளவு பற்றிய விவரங்கள் கூட சமீபத்தில் கசிந்தது. அதாவதுடிப்ஸ்டர் இன்ஸ்டன்ட் டிஜிட்டலின் கூற்றுப்படி இந்த மாடலில் 5000mAh வரையிலான பேட்டரி பேக் செய்யப்படலாம். இது உண்மையாகும் பட்சத்தில் ஆப்பிள் இப்படி செய்வது (இவ்வளவு பெரிய பேட்டரியை வழங்குவது) முதல் முறையாக இருக்கும்!

நினைவூட்டும் வண்ணம் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸில் 4676mAh பேட்டரி இருப்பதாக கூறப்படுகிறது (அறியாதோர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் ஒருபோதும் அதன் ஐபோன்களில் உள்ள பேட்டரி கெப்பாசிட்டியை துல்லியமாக குறிப்பிடாது: மாறாக இவ்வளவு மணி நேரம் நீடிக்கும் என்கிற பேட்டரி லைஃப் குறித்த விவரங்களை மட்டுமே அறிவிக்கும்).

செப்டம்பர் 9 உறுதி.. வருகிறது iPhon 17 சீரிஸ்.. 48எம்பி கேமரா..

விலை

குறிப்பாக ஐபோன் 17 ப்ரோ (iPhone 17 Pro Price) மாடலின் விலை $1,049 (தோராயமாக ரூ.91,000) க்கு தொடங்கலாம், இது ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) மாடலின் வெளியீட்டு விலையான $999 (தோராயமாக ரூ.87,000) விட அதிகமாகும்.

நினைவூட்டும் வண்ணம் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) $1,199 (தோராயமாக ரூ.1,00,700) க்கு அறிமுகமானது. இதனுடன் ஒப்பிடும்போது ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (iPhone 17 Pro Max Price) மாடலின் விலை $1,249 (தோராயமாக ரூ.1,09,000) ஆக இருக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone 17 launch date announced: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X