ஆரம்பமே அசத்தல்.. ஆபர் விலையில் iPhone 17 சீரீஸ் முன்பதிவு ஆரம்பம்.. எப்போது முதல் விற்பனை?
சொன்னபடியே ஆப்பிள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஐபோன் மாடல்கள் ஆன ஐபோன் 17 சீரிஸின் முன்பதிவுகள் இன்று (செப்.12) மாடலை 5.30 மணி முதல் தொடங்கியது. அதாவது ஸ்டாண்டர்ட் ஐபோன் 17 (iPhone 17), ஐபோன் 17 ப்ரோ (iPhone 17 Pro), ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (iPhone 17 Pro Max) மற்றும் புத்தம் புதிய ஐபோன் ஏர் (iPhone Air) ஆகிய 4 மாடல்களுமே தற்போது முன்பதிவு செய்ய கிடைக்கின்றன.
செப்டம்பர் 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணிக்கு தொடங்கியுள்ள ஐபோன் 17 சீரிஸ் மாடல்களின் முன்பதிவுகளை தொடர்ந்து, செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் இவைகள் விற்பனைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கூடவே ஐபோன் 17 சீரிஸ் மாடல்களின் மீதான ப்ரீ-ஆர்டர் ஆபர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆப்பிள் வெப்சைட் ஆபர்கள்: ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் ஐபோன் 17 சீரிஸை ப்ரீ -ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ பேங்க் கார்டுகளை பயன்படுத்தி வாங்கும் போது 6 மாதங்கள் வரை நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பமும், ரூ.5,000 வரை தள்ளுபடியும் கிடைக்கும்.
மேலும் ஆப்பிள் இந்தியா வலைத்தளத்தில், ஐபோன் 17 மாடலுக்கான இஎம்ஐ திட்டங்கள் மாதத்திற்கு ரூ. 12,983 முதல் தொடங்குகின்றன; அடுத்ததாக உள்ள ஐபோன் 17 ஏர் மாடலுக்கான இஎம்ஐ திட்டங்கள் மாதத்திற்கு ரூ.19,150 முதல் தொடங்குகிறது.
ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்களுக்கான இஎம்ஐ திட்டங்கள் மாதத்திற்கு முறையே ரூ.21,650 மற்றும் ரூ.24,150 முதல் தொடங்குகின்றன. இதோடு சேர்த்து ஆப்பிள் நிறுவனமானது தகுதியான டிவைஸ்களை எக்ஸ்சேன்ஜ் செய்யும் போது ரூ.64,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் ஆபரையும் வழங்குகிறது.
ஐபோன் 17 மாடல்களை எங்கெல்லாம் ப்ரீ-ஆர்டர் செய்யலாம்? ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள், ஆப்பிள் பிகேசி (மும்பை), ஆப்பிள் சாக்கெட் (டெல்லி), ஆப்பிள் ஹெப்பால் (பெங்களூரு) மற்றும் ஆப்பிள் கோரேகான் பார்க் (புனே) உட்பட இந்தியா முழுவதும் உள்ள ஆப்பிள் ரீடெயில் ஸ்டோர்களின் வழியாக ஐபோன் 17 சீரிஸின் 4 மாடல்களையுமே முன்பதிவு செய்யலாம்
மேலும் ஆப்பிளின் 4 புதிய ஐபோன் 17 சீரீஸ் மாடல்களை பிரபல இகாமர்ஸ் வலைத்தளங்கள் ஆன அமேசான் இந்தியா (Amazon India), பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் விஜய் சேல்ஸ் (Vijay Sales) ஆகிய தளங்கள் மூலமாகவும் கூட ப்ரீ ஆர்டர் (முன்பதிவு) செய்யலாம்.
ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் விலை விவரங்கள்:
1. 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.1,49,900
2. 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.1,69,900
3. 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.1,89,900
4. 2டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.2,29,900
ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ விலை விவரங்கள்:
1. 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.1,34,900
2. 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.1,54,900
3. 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.1,74,900
ஆப்பிள் ஐபோன் ஏர் விலை விவரங்கள்:
1. 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.1,19,900
2. 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.1,39,900
3. 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.1,59,900
ஆப்பிள் ஐபோன் 17 விலை விவரங்கள்:
1. 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.82,900
2. 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.1,02,900


Click it and Unblock the Notifications