மொத்தமா முடிச்சுவிட்ட ஆப்பிள்.. iPhone 17 Series-க்கு வெயிட் பண்ணது வீண் போகல.. முழு பீச்சர்கள் மிரளவிடுது!
ஐபோன் 17 சீரிஸ் (iPhone 17 Series) மாடல்களுக்கு காத்திருந்த ஆப்பிள் பிரியர்கள் குஷியாகும்படி அந்த மாடல்களின் ஒட்டுமொத்த பீச்சர்களும் கசிந்துள்ளன. ஆப்பிள் ஹப் (Apple Hub) மூலம் கசிந்துள்ளதால், கிட்டத்தட்ட இதே பீச்சர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. 12 ஜிபி ரேம், ஸ்மாலர் டைனாமிக் ஐலேண்ட், 48 எம்பி அல்ட்ரா வைடு போன்ற பல்வேறு பீச்சர்களில் அப்கிரேட் இருக்கிறது. இந்த பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஐபோன் 17 (iPhone 17), ஐபோன் 17 ஏர் (iPhone 17 Air), ஐபோன் 17 ப்ரோ (iPhone 17 Pro) மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (iPhone 17 Pro Max) ஆகிய மாடல்கள் செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாகின்றன. இந்த நேரத்தில் அந்த மாடல்களின் முழு பீச்சர்கள் கசிந்துள்ளன. ஏற்கனவே, விலை விவரங்கள் கசிந்தன. இப்போது, பீச்சர்கள் கசிந்து எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

ஐபோன் 17 அம்சங்கள் (iPhone 17 Specifications): இந்த மாடலில் 6.3 இன்ச் ஓஎல்இடி பேனல், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளே கிடைக்கிறது. அலுமினியம் மற்றும் கிளாஸ் பினிஷிங் கொண்ட பாடி கிடைக்கிறது. 7.8 எம்எம் தடிமன் மட்டுமே வருகிறது. ஏ19 சிப்செட் மற்றும் 8 ஜிபி ரேம் கிடைக்கிறது. 24 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது.
48 எம்பி பியூஷன் மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. 2X ஆப்டிகல் ஜூமிங் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 3600mAh+ பேட்டரி கிடைக்க இருக்கிறது. 128 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி மற்றும் 1 டிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன. 799 அமெரிக்க டாலர்களில் ஆரம்ப விலை இருக்கும்.
ஐபோன் 17 ஏர் அம்சங்கள் (iPhone 17 Air Specifications): 6.6 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே உள்ளது. டைட்டானியம் + கிளாஸ் பாடி மற்றும் 5.5 எம்எம் தடிமன் வருகிறது. ஏ19 ப்ரோ சிப் மற்றும் 12 ஜிபி ரேம் வருகிறது. 24 எம்பி செல்பீ + 48 எம்பி மெயின் கேமரா வருகிறது. 2900mAh பேட்டரி வருகிறது. ஆப்பிள் சி1 மோட் உள்ளது. 10,99 அமெரிக்க டாலர்கள் ஆரம்ப விலை வருகிறது.
ஐபோன் 17 ப்ரோ அம்சங்கள் (iPhone 17 Pro Specifications): 6.3 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே, ஸ்மாலர் டைனாமிக் ஐலேண்ட் பீச்சர் கிடைக்கிறது. ஆன்டி-ரெப்ளெக்டிவ் டிஸ்பிளே மாடலாக இருக்கிறது. அலுமினியம் + கிளாஸ் பாடி கிடைக்கிறது. 8.7 எம்எம் தடிமன் வருகிறது. ஏ19 ப்ரோ சிப்செட் மற்றும் 12 ஜிபி ரேம் கொடுக்கிறது. 24 எம்பி செல்பீ கேமரா வருகிறது.
48 எம்பி ப்யூஷன் மெயின் கேமரா + 48 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 48 டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. 8X ஆப்டிகல் ஜூமிங் மற்றும் 8K வீடியோ ரெக்கார்டிங் வருகிறது. 3700mAh+ பேட்டரி வருகிறது. ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிக் மற்றும் வேப்பர் சேம்பர் கூலிங் வருகிறது. 256 ஸ்டோரேஜ் வருகிறது. 1,199 அமெரிக்க டாலர்களில் ஆரம்ப விலை இருக்கிறது.
ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள் (iPhone 17 Pro Max Specifications): ப்ரோ மாடலில் கிடைத்த பெரும்பாலான பீச்சர்கள் இந்த ப்ரோ மேக்ஸ் மாடலில் கிடைக்கிறது. டிஸ்பிளே சைஸ் மற்றும் பேட்டரி மாறுபடுகிறது. ஆகவே, இதில் 5000mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. 6.9 இன்ச் டிஸ்பிளே வருகிறது. 1,299 அமெரிக்க டாலர்கள் ஆரம்ப விலையில் கிடைக்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications