ரூ.200, ரூ.300 இல்ல.. ரூ.7000 விலை உயரும் லேட்டஸ்ட் iPhone.. சீக்கிரமா வாங்குறது நல்லது.. எந்த மாடல்?
வழக்கமாக, ஒவ்வொரு ஆண்டும் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டதும், பழைய ஐபோன் மாடல்களின் விலைகள் குறைக்கப்படும். ஆப்பிளின் அதிகாரப்பூர்வ விலை குறைப்பை விட பிளிப்கார்ட், அமேசான் இந்தியா போன்ற வலைத்தளங்கள் அறிவிக்கும் விலை குறைப்புகள் அதிகமாக இருக்கும். இதுவும் வழக்கம் தான்.
ஆனால் இந்தாண்டு "வழக்கத்திற்கு மாறாக" ஒரு விஷயம் நடக்க உள்ளது. அது என்னவென்றால் லேட்டஸ்ட் ஆக அறிமுகமான ஒரு ஐபோன் மாடலின் விலை ரூ.7000 வரை விலை உயர்த்தப்படலாம் என்கிற தகவல் கிடைத்துள்ளது. அது ஐபோன் 17 (iPhone 17) மாடல் ஆகும்.

எக்ஸ் தளம் வழியாக டிப்ஸ்டர் யோகேஷ் பிரார் பகிர்ந்துள்ள தகவலின்படி, ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் உள்ள ஐபோன் 17 மாடலின் அனைத்து எஸ்கேயு-க்களின் (SKU) விலையையும் உயர்த்தக்கூடும். ஐபோன் 17 மாடலுக்கான அதிக தேவை மற்றும் குறைவான ஸ்டாக் இருப்பதே இந்த விலை உயர்வுக்கு காரணமாக இருக்கலாம் என்றும் அவர் குய்ப்பிட்டுளார்.
யோகேஷ் பிராரின் கூற்றுப்படி, ஐபோன் 17 மாடலின் 256 ஜிபி மற்றும் 512 ஜிபி ஆப்ஷன்கள் ரூ.7,000 வரை விலை உயர்வை காணலாம். இது துல்லியமாக மாறினால், இரண்டு எஸ்கேயு-க்களின் திருத்தப்பட்ட விலையும் ரூ.89,900 மற்றும் ரூ.1,09,900 ஆக அதிகரிக்கும்.
நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில் ஐபோன் 17 மாடலின் வெளியீட்டு விலை - 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் கூடிய பேஸிக் ஆப்ஷன் ரூ.82,900 க்கு அறிமுகமானது. ஐபோன் 17 மாடலின் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,02,900 க்கு அறிமுகமானது. ரூ.7000 விலை குறித்து ஆப்பிள் இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருப்பினும் ரூ.7000 மிச்சம் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் முடிந்த வேகத்தில் ஐபோன் 17 மாடலை வாங்கலாம்.
ஐபோன் 17 மாடலின் விரிவான அம்சங்கள்: ஐஓஎஸ் 26 (iOS 26) கொண்டு இயங்கும் ஐபோன் 17 மாடல் ஆனது டூயல் சிம் (நானோ + இசிம்) ஆதரவுடன் வருகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் உடனான பெரிய 6.3-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
மேலும் ஐபோன் 17 மாடலின் டிஸ்பிளேவானது - புதிய ப்ரோமோஷன் (ProMotion) பேனலை ஆதரிக்கிறது. இது ஐபோன் 16 ப்ரோ மாடல்களில் மாடல்களில் இருந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட அம்சமாகும். மேலும் 3000 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ், மேம்படுத்தப்பட்ட செராமிக் ஷீல்ட் 2 பாதுகாப்பு மற்றும் ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே ஆகிய அம்சங்களையும் ஆதரிக்கிறது.
தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்கை கொண்டுள்ள ஐபோன் 17 மாடலின் கேமராக்களை பொறுத்தவரை - இது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் எப் /1.6 அபெர்க்ஷர் மற்றும் சென்சார்-ஷிப்ட் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடனான 48 மெகாபிக்சல் ஃப்யூஷன் பிரைமரி கேமரா உள்ளது
இந்த சென்சாரால் 52மிமீ குவிய நீளம் கொண்ட 2எக்ஸ் டெலிஃபோட்டோ கேமராவாகவும் செயல்பட முடியும். இதனுடன் எப்/2.2 அபெர்க்ஷர் மற்றும் மேக்ரோ திறன்களை கொண்ட 48 மெகாபிக்சல் ஃப்யூஷன் அல்ட்ரா-வைட் கேமராவும் உள்ளது. முன்பக்கத்தில், நீங்கள் ஒரு புதிய சென்டர் ஸ்டேஜ் செல்ஃபி கேமராவை பெறுவீர்கள்.
சிப்செட்டை பொறுத்தவரை ஐபோன் 17 மாடல் ஆனது ஏ19 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 16-கோர் நியூரல் எஞ்சினை கொண்டுள்ளது. ஆப்பிளின் கூற்றுப்படி, பவர் எபிஷியன்ட் ஏஐ இன்பெரென்ஸ் (Power-efficient AI inference), அதிகரித்த மெமரி பேண்ட்வித் மற்றும் மேம்பட்ட செயல்திறனை வழங்கும். ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 17 மாடலின் ஸ்டோரேஜையும் அதிகரித்துள்ளது, பேஸிக் ஸ்டோரேஜ் ஆக 256ஜிபி உள்ளது.
நிறுவனத்தின் கூற்றுப்படி, ஐபோன் 17 மாடல் ஆனது ஐபோன் 16 உடன் ஒப்பிடும்போது எட்டு மணிநேரம் வரை கூடுதல் பேட்டரி ஆயுளை வழங்கும். மேலும் இது வேகமாக சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது. ஆப்பிளின் கூற்றுப்படி சில நிமிடங்களில் 50 சதவீதம் சார்ஜ் ஆகும்; 10 நிமிட சார்ஜ் எட்டு மணிநேர பயன்பாட்டை வழங்கும்.


Click it and Unblock the Notifications








