Home
Mobile

பேஸிக் iPhone மாடலுக்கு வரும் 2 முக்கிய மாற்றங்கள்.. ஒருவழியாக Apple மனம் இறங்கியது!

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் நெருங்கினாலே போதும் ஆப்பிளின் அடுத்த ஐபோன் மாடல்கள் குறித்த லீக்ஸ் மற்றும் ரென்டர்ஸ் (புகைப்படங்கள்) 360 டிகிரி கோணத்தில் இருந்தும்.. எல்லா பக்கங்களில் இருந்தும் பிய்த்துக்கொண்டு வரும். அப்படித்தான் ஆப்பிளின் அடுத்த ஐபோன் சீரிஸ் ஆன ஐபோன் 17 சீரிஸ் (iPhone 17 Series) பற்றி சில சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்பிளின் ஐபோன் 17 சீரிஸில் - ஐபோன் 17, ஐபோன் 17 ஏர், ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய 4 மாடல்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வெண்ணிலா வேரியண்ட் ஆன ஐபோன் 17 மாடலில் 2 முக்கியமான மாற்றங்கள் இருக்கும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

பேஸிக் iPhone மாடலுக்கு வரும் 2 முக்கிய மாற்றங்கள்!

எக்ஸ் தளம் வழியாக டிஎஸ்சிசி (DSCC) ஆய்வாளர் ரோஸ் யங் பகிர்ந்துள்ள தகவலின்படி, ஐபோன் 17 மாடல் ஆனது அதன் முன்னோடியான ஐபோன் 16 மாடலை விட பெரிய டிஸ்பிளேவை கொண்டிருக்கும். கடந்த ஆண்டு அறிமுகமான ஐபோன் 16 மாடலின் 6.1 இன்ச் டிஸ்பிளேவுடன் ஒப்பிடும்போது, புதிய ஐபோன் 17 மாடல் ஆனது 6.3 இன்ச் என்கிற அளவிலான சற்றே பெரிய டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் பெரிய டிஸ்பிளேவுடன் சேர்த்து ஐபோன் 17 மாடல் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்-ஐ வழங்கும் என்று கூறப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் முந்தைய ஆண்டுகளில் ஆப்பிள் அதன் ஐபோன் ப்ரோ மாடல்களில் மட்டுமே 120ஹெர்ட்ஸ் ப்ரோமோஷன் டிஸ்பிளேக்களை பேக் செய்தது. ஆனால் ஐபோன் 17 சீரிஸில் இது மாறும் என்பது போல் தெரிகிறது.

முன்னதாக அறிமுகமான ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் மாடல்கள் 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்-ஐ வழங்குகின்றன, அதே நேரத்தில் ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் பேனலை கொண்டுள்ளன. பல்வேறு ஆதாரங்களில் இருந்து கிடைத்த பல லீக்ஸ்கள் - ஐபோன் 17 மாடலில் பெரிய மேம்பாடுகளை காணலாம் என்று பரிந்துரைப்பதால்.. மேற்கண்ட 2 மாற்றங்கள் ஐபோன் 17 மாடலின் டிஸ்பிளேவில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது.

ஐபோன் 17 சீரிஸ் குறித்த மற்ற அம்சங்களை பொறுத்தவரை, ஐபோன் 17 ப்ரோ மாடலில் 6.3-இன்ச் டிஸ்பிளே இடம்பெறலாம். ஐபோன் 17 ஏர் மாடலில் 6.5-இன்ச் டிஸ்பிளே இடம்பெறலாம். வெண்ணிலா மாடல் மற்றும் புதிய ஐபோன் 17 ஏர் மாடல் 8ஜிபி ரேம் கொண்ட ஏ18 அல்லது ஏ19 சிப்செட்டில் இயங்கலாம். ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் 12ஜிபி ரேம் உடன் ஏ19 ப்ரோ சிப்செட்டுடன் அறிமுகம் செய்யப்படலாம்.

குறிப்பாக ஐபோன் 17 ஏர் மாடல் 5.5 மிமீ அளவீட்டில் உள்ள "சூப்பர் ஸ்லிம் ஐபோன்" மாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ​​ஆப்பிள் நிறுவனம் இந்த மாடலின் வழியாக அதன் ஸ்மார்ட் பேட்டரி கேஸ்-ஐ (Smart Battery Case) மீண்டும் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தி இன்ஃபர்மேஷன் வழியாக கிடைத்த அறிக்கையின்படி, ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 17 ஏர் மாடலுக்காக ஸ்மார்ட் பேட்டரி கேஸை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

பெயர் குறிப்பிடுவது போல, இது ஒரு பேட்டரி பேக் கொண்ட ஐபோன் கேஸ் ஆகும். இது பயணத்தின்போது அல்லது சார்ஜிங் பாயிண்ட் இல்லாத சூழ்நிலைகளில் டிவைஸை சார்ஜ் செய்ய அனுமதிக்கும். ஐபோன் 17 ஏர் மாடல் ஆனது மிகவும் மெலிதாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டால், நிச்சயம் இதன் பேட்டரி பெரும்பாலும் சிறியதாகவே இருக்கும். பெரும்பாலும் இது 3,000mAh முதல் 4,000mAh க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone 17 Display Could Be Larger Than iPhone 16 and Offer 120Hz refresh rate Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X