அடிதடிக்கு நடுவே.. ரூ.82,900 கொடுத்து வாங்குன iPhone 17 மாடலின் பேட்டரி mAh-ஐ கேட்டு கஸ்டமர்ஸ் கதறல்!
மும்பையில் உள்ள ஆப்பிள் ஸ்டோருக்கு வெளியே புதிய ஐபோன் 17 சீரிஸ் மாடல்களை வாங்குவதற்காக வரிசையில் நின்ற கஸ்டமர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது ஒருபக்கம் இருக்க.. இப்படி அடிதடிக்கு இடையே வாங்கிய ஐபோன் 17 சீரீஸின் பேட்டரி கெப்பாசிட்டியை பற்றி அவர்களுக்கு தெரியுமா?
யூட்யூப் சேனல் ஆன ரேவா டெக்னாலஜி (REWA Technology) ஆனது சிம் கார்டு ட்ரே (SIM Card Tray) உடனான ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோவின் (Apple iPhone 17 Pro) உட்புறத்தைப் பற்றிய ஒரு நெருக்கமான பார்வையை வழங்கும் ஒரு வீடியோவை பகிர்ந்து உள்ளது.

குறிப்பிட்ட வீடியோ வழியாக ஐபோன் 17 ப்ரோ மாடலானது பெரிய ரியர் கேமரா லென்ஸ்கள் (Larger rear camera lenses) உட்பட பல்வேறு உள் வடிவமைப்பு மாற்றங்களை கொண்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. கூடவே மேம்படுத்தப்பட்ட வெப்பச் சிதறலுக்கான புதிய நீராவி வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டமும் (Vapor chamber cooling system) உள்ளது. மேலும் வைஃபை 7, ப்ளூடூத் 6 மற்றும் த்ரெட்-க்காக ஆப்பிள் வடிவமைத்த என்1 சிப்பும் உள்ளது. இதுபோன்ற வீடியோக்கள் ஆனது டியர்டவுன் வீடியோக்கள் என்று அழைக்கப்படுகிறது.
இப்படியாக ஆன்லைன் வழியாக வெளியிடப்பட்ட டியர்டவுன் வீடியோக்கள் மற்றும் இயு-வில் உள்ள ஆப்பிளின் எனர்ஜி லேபிள்களின் அடிப்படையில், சிம் கார்டு மற்றும் இசிம்-ஒன்லி உடன் வாங்க கிடைக்கும் புதிய ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் ஏர் மாடல்களின் பேட்டரி விவரங்கள் நமக்கு கிடைத்துள்ளது
மேக்ரூமர்ஸ் (Macrumors) வழியாக பகிரப்பட்டுள்ள விவரங்களின்படி, இசிம் கார்டு ஆதரவுடன் வரும் ஐபோன் 17 மாடலின் பேட்டரி கெப்பாசிட்டி 3692mAh ஆகும். சிம் கார்டு ஆதரவுடன் வரும் ஐபோன் 17 மாடலின் பேட்டரி விவரங்கள் இன்னும் தெரியவிலல்லை. அடுத்ததாக உள்ள ஐபோன் 17 ப்ரோ மாடலின் சிம் கார்டு வேரியண்ட் ஆனது 3988mAh பேட்டரியையும், இசிம் கார்டு உடன் வரும் வேரியண்ட் ஆனது 4252mAh பேட்டரியையும் கொண்டுள்ளது.
இதேபோல ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலின் சிம் கார்டு வேரியண்ட் ஆனது 4832mAh பேட்டரியையும், இசிம் கார்டு உடன் வரும் வேரியண்ட் ஆனது 5088mAh பேட்டரியையும் கொண்டுள்ளது. கடைசியாக இசிம் ஆதரவுடன் மட்டுமே வரும் ஐபோன் ஏர் மாடல் ஆனது 3149mAh பேட்டரியை கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு அறிமுகமான ஐபோன் 16 சீரிஸ் மாடல்களின் பேட்டரி விவரங்கள்:
1. ஐபோன் 16 - 3561mAh பேட்டரி
2. ஐபோன் 16 பிளஸ் - 4674mAh பேட்டரி
3. ஐபோன் 16 ப்ரோ - 3582mAh பேட்டரி
4. ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் - 4685mAh பேட்டரி
ஆப்பிள் ஐபோன் 17 ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மற்றும் இந்திய விலை விவரங்கள்: ஐபோன் 17 மாடலின் பேஸிக் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.82,900 க்கும், ஹை எண்ட் 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.1,02,900 க்கும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ஐபோன் ஏர் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மற்றும் இந்திய விலை விவரங்கள்: ஐபோன் ஏர் மாடலின் பேஸிக் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,19,900 க்கும், 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,39,900 க்கும் மற்றும் ஹைஎண்ட் 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,59,900 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஐபோன் 17 ப்ரோ ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மற்றும் இந்திய விலை விவரங்கள்: ஐபோன் 17 ப்ரோ மாடலின் பேஸிக் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,34,900 க்கும், 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,54,900 க்கும் மற்றும் ஹைஎண்ட் 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,74,900 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மற்றும் இந்திய விலை விவரங்கள்: ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலின் பேஸிக் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,49,900 க்கும், 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,69,900 க்கும், 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,89,900 க்கும் மற்றும் ஹைஎண்ட் 2டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.2,29,900 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








