Home
Mobile

இதுவரை Apple இப்படி ஒரு ஐபோனை அறிமுகம் செஞ்சதே இல்ல.. அல்ட்ரா-தின் டிஸ்பிளேவுடன் iPhone 17 Air மாடல்!

ஐபோன் 16 சீரீஸ் (iPhone 16 Series) உலகளவில் அறிமுகமாகி சில வாரங்களே ஆகின்ற நிலைப்பாட்டில் இதனுடன் சேர்த்து அறிவிக்கப்படும் என்று கிசுகிசுக்கப்பட்ட புதிய ஐபோன் ஏர் (iPhone Air) மாடல் அல்லது ஐபோன் ஸ்லிம் (iPhone Slim) மாடல் குறித்த தகவல்கள் மீண்டும் ஆன்லைனில் வெளியாகியுள்ளன. எப்படி பார்த்தாலும் இது ஐபோன் 17 சீரிஸில் (iPhone 17 Series) தான் இடம்பெறலாம் என்றாலும் கூட, இது என்ன மாதிரியான வடிவமைப்பை பெறும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும் என்கிற விவரங்கள் இப்போதே பலரது ஆர்வத்தை தூண்டும்படி உள்ளது!

ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 17 சீரீஸ் உடன் அதன் பிளஸ் மாடல்களுக்கு ஒரு முடிவு கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஐபோன் 17 சீரிஸில் பிளஸ் மாடல் இடம்பெறலாம் போகலாம் என்றும், அதற்கு பதிலாக புதிய ஐபோன் 17 ஏர் (iPhone 17 Air) அல்லது ஐபோன் 17 ஸ்லிம் (iPhone 17 Slim) மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அல்ட்ரா-தின் டிஸ்பிளேவுடன் iPhone 17 Air மாடல்!

முன்னதாக ஐபோன் 17 ஏர் மாடலானது மேம்படுத்தப்பட்ட ஸ்லிம் டிஸ்பிளே இடம்பெறும் என்கிற தகவல் வெளியாகி இருந்த நிலையில், தற்போது ஐபோன் 17 ஏர் மாடல் அல்ட்ரா-தின் டிஸ்பிளேவுடன் வரும் என்றும், இதற்காக ஆப்பிள் நோவாடெக்கின் டிஸ்பிளே தொழில்நுட்பத்தை பயன்படுத்த வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

டிஜிடைம்ஸ் (Digitimes) வழியாக கிடைத்த சமீபத்திய அறிக்கையின்படி, தைவானின் முன்னணி டிஸ்பிளே ட்ரைவர் ஐசி (Display driver IC - DDI) உற்பத்தியாளரான நோவாடெக் (Novatek), அடுத்த ஆண்டு இரண்டாவது காலாண்டில் அதன் ஓஎல்இடி டிடிடிஐ (OLED TDDI) தொழில்நுட்ப டிஸ்பிளேவின் பெருமளவிலான உற்பத்தியை தொடங்க திட்டமிட்டுள்ளது.

இந்த டிஸ்பிளே தொழில்நுட்பத்தை ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்டவர்களில் ஆப்பிள் நிறுவனமும் ஒன்று என நம்பப்படுகிறது. "சாத்தியமான இறுதி வாடிக்கையாளர்களை பற்றி தொழில்துறையினர் வாய் திறக்கவில்லை என்றாலும், நோவடெக்ஸின் முன்மொழியப்பட்ட ஷிப்பிங் அட்டவணை 2025 ஆம் ஆண்டில் அடுத்த தலைமுறை ஐபோன் டிஸ்பிளேக்களுடன் இணைக்கப்படலாம் என்று ஊகங்கள் தெரிவிக்கின்றன" என்று டிஜிடைம்ஸின் அறிக்கை கூறுகிறது.

ஐபோன் 17 மாடலில் புதிய டிஸ்பிளே தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது பற்றி ஆப்பிள் நிறுவனம் அல்லது நோவாடெக் நிறுவனம் ஆகிய இரண்டுமே தற்போது வரையிலாக எதுவும் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், ஐபோன் 17 ஏர் மாடலின் எதிர்பார்க்கப்படும் லான்ச் டைம்லைன் மற்றும் காம்போனென்ட் ஏற்றுமதி அட்டவணை உடனான ஒற்றுமை ஆனது, ஆப்பிள் நிறுவனமானது "வதந்திக்கப்படும்" ஐபோன் 17 ஏர் மாடலில் அதை பயன்படுத்தக்கூடும் என்பதைக் குறிக்கிறது.

ஓஎல்இடி டிடிடிஐ தொழில்நுட்பத்துடன், சிப்செட் ஆனது இன்புட் மற்றும் டச் இன்புட் ஆகிய இரண்டையும் கையாளும். இது மெல்லிய மற்றும் திறமையான டிஸ்பிளேகளை உருவாக்க அனுமதிக்கிறது. முன்னரே குறிப்பிட்டபடி, புதிய ஐபோன் ஸ்லிம் / ஏர் பற்றிய தகவல்கள் ஐபோன் 16 சீரிஸின் அறிமுகதிற்கு முன்பிருந்தே வெளியான வண்ணம் உள்ளன.

முந்தைய அறிக்கைகள் இது ஒரு அல்ட்ரா ஸ்லிம் வடிவமைப்புடன் வரும் என்றும், இது மற்ற ஐபோன் 17 மாடல்களில் இருந்து தனித்து நிற்கும் என்றும் கூறுகின்றன. ஆப்பிள் ஆய்வாளர் மிங்-சி குவோவின் கூற்றுப்படி, இது ஒரு டைட்டானியம் மிடில் ஃப்ரேம் மற்றும் சிங்கிள் 48 மெகாபிக்சல் ரியர் கேமராவை கொண்டிருக்கும்.

இதுதவிர்த்து ஐபோன் 17 ஸ்லிம் / ஏர் மாடலில் 1260 x 2740 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் மற்றும் டைனமிக் ஐலேண்ட் உடனான 6.6 இன்ச் டிஸ்பிளே இடம்பெறலாம். இது ஆப்பிளின் சொந்த ஏ19 சிப்செட் கொண்டு இயங்க வாய்ப்புள்ளது. அதேசமயம் ஐபோன் 17 சீரிஸின் ப்ரோ மாடல்கள் ஆன ஐபோன் 17 ப்ரோ (iPhone 17 Pro) மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (iPhone 17 Pro Max) ஆகியவைகள் ஆப்பிளின் ஏ19 ப்ரோ (Apple A19 Pro) சிப்செட்டை கொண்டிருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone 17 Air May Pack Ultra Thin OLED TDDI Technology Display From Novatek Report Says
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X