Home
Mobile

அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லீயே.. 5மிமீ ஸ்லிம் டிசைனில் iPhone 17 Air.. எப்போது அறிமுகம்? என்ன விலை?

ஐபோன் 16இ (iPhone 16e) மாடலுக்கு இருந்த எதிர்பார்ப்பை விட ஐபோன் 17 ஏர் (iPhone 17 Air) மாடலுக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. இது எப்போது அறிமுகமாகும்? இது ஏர் என்று குறிப்பிடப்பட என்ன காரணம்? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:

ஐபோன் 17 ஏர் எப்போது அறிமுகமாகும்? இது ஐபோன் 17 சீரீஸின் கீழ் முற்றிலும் புதிய மாடல் ஆக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிளின் மற்ற ஐபோன் சீரீஸ்களின் அறிமுகத்தை கருத்தில் கொண்டால், இந்த சீரிஸ் செப்டம்பர் 2025 இல் அறிமுகம் செய்யப்படலாம்.

அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லீயே.. 5மிமீ ஸ்லிம் டிசைனில் iPhone 17 Air!

ஐபோன் 17 சீரீஸின் கீழ் இந்த முறை நான்கு மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது - ஐபோன் 17, ஐபோன் 17 ஏர், ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ். வடிவமைப்பில் சில மாற்றங்கள், கேமராக்கள் மற்றும் டிஸ்பிளேக்களில் சில மேம்பாடுகள் என ஐபோன் 16 சீரீஸில் இருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; குறிப்பாக ஐபோன் 17 ஏர்!

என்னென்ன டிசைன் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்? ஐபோன் 17 ஏர் மாடல் ஆனது இதுவரை இல்லாத அளவுக்கு மெலிதான ஐபோன் மாடலாக இருக்கும் என்றும், இது 5 மிமீ முதல் 6.25 மிமீ வரை தடிமன் கொண்டதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இது 6.6 இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஸ்க்ரீன் சைஸ்-ன் அடிப்படையில் இந்த மாடல் ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல்களுக்கு இடையில் வைக்கப்படும்.

இதற்கிடையில், ஐபோன் 17 மாடலானது ஐபோன் 16 மாடலின் டிசைனை தக்கவைத்து கொள்ளலாம். இருப்பினும் இது இன்னும் திடமான, ஆன்டி ரெஃப்ளெக்டிவ் மற்றும் ஸ்க்ராட்ச் ரெஸிஸ்டன்ட் கோட்டிங்கை (Anti-reflective and scratch-resistant coating) பெறும். மேலும் நான்கு மாடல்களுமே ஆல்வேஸ் ஆன் செயல்பாட்டுடன் 120ஹெர்ட்ஸ் ப்ரோமோஷன் டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேமரா செட்டப்பில் ஒரு பெரிய அப்டேட்டை எதிர்பார்க்கலாம். ஐபோன் 17 ஏர் மாடலானது ஹாரிசாண்டல் மாட்யூலில் சிங்கிள்-லென்ஸ் கேமராவுடன் வரக்கூடும். அதே நேரத்தில் ப்ரோ மாடல்கள் வழக்கமான ஸ்கொயர் பம்பிற்கு பதிலாக ஒரு ரெக்டாங்குலர் அலுமினிய கேமரா பார்-ஐ கொண்டிருக்கலாம்.

என்ன சிப்செட்? எவவ்ளவு ரேம்? ஐபோன் 17 மற்றும் 17 ஏர் ஆகிய 2 மாடல்களும் ஆப்பிளின் வரவிருக்கும் ஏ19 சிப்பால் இயக்கப்படும். அதே நேரத்தில் ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய 2 மாடல்களும் மிகவும் சக்திவாய்ந்த ஏ19 ப்ரோ சிப் மூலம் இயக்கப்படலாம். ஸ்டாண்டர்ட் மற்றும் ஏர் மாடல்கள் 8ஜிபி ரேம்-ஐ கொண்டிருக்கலாம், அதே நேரத்தில் ப்ரோ மாடல்கள் 12ஜிபி வரையிலான ரேம்-ஐ கொண்டிருக்கலாம்.

என்னென்ன கேமரா சென்சார்களை பேக் செய்யலாம்? ஐபோன் 17 சீரீஸின் ப்ரோ மாடல்கள் வைட், அல்ட்ரா-வைட் மற்றும் சிறந்த போர்ட்ரெய்ட்களுக்காக 85 மிமீ சமமான குவிய நீளத்துடன் கூடிய புதிய டெலிஃபோட்டோ லென்ஸ்-ஐ உள்ளடக்கிய 48எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்டிகல் ஜூம் 3.5எக்ஸ் ஆக குறையக்கூடும் என்றாலும், ஆப்பிள் சென்சார் க்ராப்பிங்கை பயன்படுத்தி 7எக்ஸ் "லாஸ்லெஸ்" டிஜிட்டல் ஜூமை அறிமுகப்படுத்தலாம். மறுகையில் உள்ள ஸ்டாண்டர்ட் ஐபோன் 17 மற்றும் ஐபோன் 17 ஏர் ஆகிய மாடல்களில் சிங்கிள் 48MP ரியர் கேமரா இடம்பெறலாம். அனைத்து மாடல்களும் 24எம்பி செல்பீ கேமரா அப்கிரேட்-ஐ பெறலாம்.

எப்போது அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்? ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 17 சீரிஸ் மாடலக்ளை வருகிற செப்டம்பர் 11 - 13 ஆம் தேதிகளுக்கு இடையில் அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 17 - ரூ.89,900 க்கும், ஐபோன் 17 ஏர் - ரூ.99,900 க்கும், ஐபோன் 17 ப்ரோ - ரூ.1,39,900 க்கும் மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் - ரூ.1,64,900 க்கும் அறிமுகம் செய்யப்படலாம்.

Best Mobiles in India

English summary
iPhone 17 Air Design Display Chipset Camera Specifications Launch Date Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X