Apple அசத்தல்.. 5.5 மிமீ ஸ்லிம், 48MP கேமரா, 24MP செல்பீ, 8GB ரேம்.. வாய் பிளக்க வைக்கும் புதிய iPhone 17 Air!
ஒன்பிளஸ் 13 வந்துடுச்சு.. சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரீஸ் இன்று (ஜன.22) இரவு அறிமுகமாகிறது. இதற்கு அடுத்தபடியாக 2025 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் உள்ள ஐபோன் 17 சீரீஸ் வருகிற செப்டம்பர் மாதம் உலகளவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்தாண்டு ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து சுவாரசியாமான சில மாற்றங்களை நாம் எதிர்பார்க்கலாம். 2025 ஆம் ஆண்டு வெளியாகும் ஐபோன் 17 சீரீஸில், ஐபோன் 17 பிளஸ் மாடலுக்கு பதிலாக ஐபோன் 17 ஏர் (iPhone 17 Air) என்கிற புதிய மாடல் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும்படி டிப்ஸ்டர், மஜின் பு வழியாக ஐபோன் 17 ஏர் மாடலின் பேக் பேனலை வெளிப்படுத்தும் 2 படங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளன.

அதில் ஐபோன் 17 ஏர் மாடலில் செவ்வக கேமரா பம்ப் இருப்பதை பார்க்க முடிகிறது. மேலும் இது சிங்கிள் ரியர் கேமரா லென்ஸ்-ஐ மட்டுமே பேக் செய்கிறது. நீண்ட காலமாகவே, ஸ்டாண்டர்ட் ஐபோன்களில் டூயல் ரியர் கேமரா செட்டப் மட்டுமே பேக் செய்யப்படுகின்றன. ஆக இது ஐபோன் 17 ஆக இருக்க வாய்ப்பில்லை, புதிய ஏர் மாடலாக இருக்கலாம் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
மேலும் லீக் ஆன புகைப்படம் வழியாக டேப்லெட் ஷேப்டு மற்றும் சற்றே மேல உயர்த்தப்பட்ட கேமரா பார்-ஐ காண முடிகிறது. இது அடிப்படையில் ஐபோன் 17 சீரீஸின் புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பாகும். வலது பக்கத்தில் எல்இடி ஃபிளாஷ் மற்றும் சிறிய மைக்ரோஃபோன் ஓப்பனிங் உள்ளது.

ஐபோன் எஸ்இ 4 (iPhone SE 4) அல்லது ஐபோன் 16இ (iPhone 16e) வெளியீடு நெருங்கி வருவதால், லீக் ஆன புகைப்படங்கள் அதற்கு சம்பந்தப்பட்டவைகளாக என்றும் கருத்துக்கள் நிலவுகின்றன. இதில் உள்ள சிங்கிள் கேமரா லென்ஸை பார்க்கும்போது இது நம்பத்தகுந்ததாக தெரிகிறது. இருப்பினும், டிசைனை பார்க்கும்போது இது பிளாக்ஷிப் சீரிஸ் உடன் ஒத்துப்போகிறது. இதெல்லாம் ஒருபக்கம், முன்னதாக வெளியான ஐபோன் எஸ்இ 4 வடிவமைப்பு தொடர்பான லீக்களும், இதுவும் மிகவும் வித்தியாசமாகத் தெரிகிறது.
ஐபோன் 17 ஏர் மாடலில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? வதந்திகளின் அடிப்படையில், ஐபோன் 17 ஏர் வெறும் 5.5 மிமீ தடிமன் கொண்ட மிகவும் ஸ்லிம் ஆன ஸ்மார்ட்போனாக இருக்கும். இந்த வதந்தி உண்மையாகும் பட்சத்தில், இதுவரை வெளியானதிலேயே மிகவும் ஸ்லிம் ஆன ஐபோன் மாடல் ஆக திகழும் ஐபோன் 6 ஆனது பின்னுக்கு தள்ளப்படும்
இந்த அல்ட்ரா-ஸ்லிம் வடிவமைப்பிற்காக, ஆப்பிள் நிறுவனம் இந்த மாடலின் சிம் டிரே, ஒரு கேமரா லென்ஸ்-ஐ அகற்றுவது மற்றும் சிறிய பேட்டரியை பேக் செய்வது போன்ற "அடேங்கப்பா" வேலைகளை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதெல்லாமே சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்லிம் (Samsung Galaxy S25 Slim) உடன் நேரடியாக போட்டியிடும் நோக்கத்தின் தான் ஆப்பிள் செய்கிறது என்பதில் சந்தேகமே வேண்டாம். எஸ்25 ஸ்லிம் ஆனது 2025 மே மாத வாக்கில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன் 17 ஏர் மாடலின் டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது ப்ரோமோஷன் (ProMotion) தொழில்நுட்பத்துடன் கூடிய 6.6-இன்ச் OLED டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் வரவும் வாய்ப்புள்ளது. இது உண்மையாகும் பட்சத்தில், ஆப்பிள் இந்த அம்சத்தை ப்ரோ அல்லாத மாடல்களுக்கு விரிவுபடுத்துவது முதல் முறையாக இருக்கும்.
கேமராவை பொறுத்தவரை ஐபோன் 17 ஏர் மாடலின் சிங்கிள் ரியர் கேமரா செட்டப்பில் 48 மெகாபிக்சல் கேமரா பேக் செய்யப்படலாம். முன்பக்கத்தில், இது 24-மெகாபிக்சல் ட்ரூடெப்த் (TrueDepth) கேமரா இடம்பெறலாம். சிப்செட்டை பொறுத்தவரை ஐபோன் 17 ஏர் ஆனது ஆப்பிளின் ஏ19 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 8ஜிபி வரையிலான ரேம் உடன் இணைக்கப்படலாம்! Photo Courtesy: Majin Bu


Click it and Unblock the Notifications








