Home
Mobile

விஸ்வரூப விற்பனை.. ரூ.7,140 விலை குறைப்பு.. OLED டிஸ்பிளே.. 48MP கேமரா.. IP68 ரேட்டிங்.. எந்த மாடல்?

ஐபோன் பிரியர்கள் அடித்து பிடித்து ஆர்டர் போடும்படியான விலை குறைப்பு மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட்டில் ஓஎல்இடி டிஸ்பிளே, 48 எம்பி கேமரா, IP68 ரேட்டிங் ரெசிஸ்டன்ட், ஏ18 சிப்செட் போன்ற பீச்சர்களை கொண்ட ஐபோன் 16இ (iPhone 16e) கிடைக்கிறது. இப்போது, ஆர்டர் செய்தால், மார்கெட் விலையில் இருந்து ரூ.7,140 கம்மியான விலைக்கு வாங்கி கொள்ளலாம். லேட்டஸ்ட் மற்றும் பிரீமியம் ஆப்பிள் போனை கம்மியான விலைக்கு வாங்க வேண்டுமானால், இது நல்ல நேரமாக இருக்கிறது.

ஐபோன் 16இ அம்சங்கள் (iPhone 16e Specifications): இந்த போனில் ஐஓஎஸ் 18 (iOS 18) கொண்ட சிக்ஸ் கோர் ஏ18 3என்எம் (Six Core A18 3nm) சிப்செட் கிடைக்கிறது. 4 கோர் ஜிபியு கிராபிக்ஸ் கார்டு மற்றும் 16 கோர் நியூரல் என்ஜின் (Neural Engine) கிடைக்கிறது. 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் கிடைக்கிறது.

விஸ்வரூப விற்பனை.. ரூ.7140 விலை குறைப்பு.. OLED டிஸ்பிளே.. 48MP கேமரா!

செராமிக் ஷீல்டு (Ceramic Shield) பாதுகாப்பு கொண்ட 6.1 இன்ச் (2532 x 1170 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் (Super Retina XDR) டிஸ்பிளேவில் ட்ரூ டோன் (True Tone), எச்டிஆர் (HDR) மற்றும் 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. 1200 நிட்ஸ் பிரைட்னஸ் வருகிறது.

சிங்கிள் ரியர் கேமரா சிஸ்டம் கிடைத்தாலும், அதில் பிரீமியமான பீச்சர்கள் வருகின்றன. ஆகவே, 48 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இதில் வைடு-ஆங்கிள் (Wide-angle), ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) மற்றும் போட்டோனிக் என்ஜின் (Photonic Engine) சப்போர்ட் கிடைக்கிறது.

டால்பி விஷன் (Dolby Vision) மட்டுமல்லாமல் 4K ரெசொலூஷன் வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 1080p ரெசொலூஷன் ஸ்லோவ்-மோஷன் ரெக்கார்டிங் கிடைக்கிறது. ஐபோன்களில் வழக்கமாக கிடைக்கும் சினிமாடிக் மோட் (Cinematic Mode) இந்த மாடலிலும் கிடைக்கிறது. அதேபோல 12 எம்பி ட்ரூடெப்த் செல்பீ ஷூட்டர் உள்ளது.

இந்த ஷூட்டரில் ஆட்டோ போகஸ் மட்டுமல்லாமல் போகஸ் பிக்சல் மற்றும் டால்பி விஷன் ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது. ரெடினா ஃபிளாஷ் மற்றும் 1080p ஸ்லோவ்-மோஷன் ரெக்கார்டிங் வருகிறது. ஆகவே, ஐபோன்களுக்கு மட்டுமே கிடைக்கும் கேமரா அவுட்புட் இதிலும் கட்டாயம் எதிர்பார்க்கலாம்.

இந்த ட்ரூடெப்த் ஷூட்டரில் பேஸ்ஐடி (FaceID) ரெககனைசேஷன் கிடைக்கிறது. 26 மணி நேரங்களுக்கு வீடியோ பிளேபேக் கொடுக்கும்படி லித்தியம்-அயன் பேட்டரி கிடைக்கிறது. கியூஐ சார்ஜர் சப்போர்ட்டுடன் வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் காம்பாக்ட் டிசைனில் 167 கிராம் எடை உள்ளது.

அதேபோல 7.8 எம்எம் தடிமனில் ஸ்லிம் பாடி கிடைக்கிறது. இந்த ஐபோன் 16இ மாடலில் 5ஜி, ஜிகாபைட்-கிளாஸ் 4ஜி கனெக்டிவிட்டி வருகிறது. மேலும், வை-பை 7 (Wi-Fi 7), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), என்எப்சி (NFC) மற்றும் ஜிபிஎஸ் (GPS) போன்ற கனெக்டிவிட்டி சாப்போர்ட்களும் கிடைக்கின்றன.

பிளாக் (Black) அல்லது ஒயிட் (White) கலரில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்திய மார்கெட் விலையை பொறுத்தவரையில், 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.59,900ஆகவும், 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.69,900ஆகவும், 512 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.89,900ஆகவும் இருக்கிறது.

ஆனால், அமேசான் விற்பனையில் (Amazon Sale) 128 ஜிபி மாடலின் விலை ரூ.56,790ஆக இருக்கிறது. இதுபோக ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.4,000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.52,790 பட்ஜெட்டில் இப்போது வாங்கி கொள்ளலாம். இதேபோல மற்ற மாடல்களுக்கும் ரூ.4,000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
iPhone 16e With 48MP Camera Sale Under Rs 53000 in Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X