ரூ.20,000 மிச்சம் டோய்.. ரூ.59,900 iPhone 16e க்கும்.. ரூ.79,900 iPhone 16 க்கும்.. அட இவ்ளோ தான் வித்தியாசமா!
ஆப்பிள் (Apple) நிறுவனம் அதன் எஸ்இ சீரிஸின் கீழ் புதிய ஐபோன் எஸ்இ 4 அல்லது ஐபோன் எஸ்இ 2025 மாடலை அறிமுகம் செய்யாமல், அதன் ஐபோன் 16 சீரிஸின் கீழ் ஐபோன் 16இ (iPhone 16e) என்கிற புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது சிலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தலாம். ஏனென்றால் ரூ.49,900 க்கு வரவேண்டிய ஐபோன் எஸ்இ 4 ஆனது ரூ.59,900 பட்ஜெட்டில் ஐபோன் 16இ ஆக வந்துள்ளது.
இந்த இடத்தில் ரூ.79,900க்கு அறிமுகமான ஐபோன் 16 வாங்குவதற்கு பதிலாக ரூ.20,000 மலிவான விலைக்கு கிடைக்கும் ஐபோன் 16இ வாங்கலாமே என்கிற எண்ணம் மேலோங்கினால், அதில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை. யார்தான் பணத்தை மிச்சப்படுத்த விரும்ப மாட்டார்கள். அதெல்லாம் சரி.. ஐபோன் 16இ மாடலுக்கும் ஐபோன் 16 க்கும் இடையே உள்ள வேறுபாடுகள் (Differences between iPhone 16e vs iPhone 16) என்னென்ன? வாங்க பார்த்துடலாம்!

ஐபோன் 16இ VS ஐபோன் 16 - டிசைன் (iPhone 16e VS iPhone 16 Design): இவ்விரு மாடல்களுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடு - கலர் ஆப்ஷன்கள். இரண்டு போன்களும் அலுமினியம், கிளாஸ் டிசைன் மற்றும் சூப்பர் ரெடினா XDR டிஸ்பிளேவை பகிர்ந்து கொண்டாலும், ஐபோன் 16இ பிளாக் மற்றும் ஒயிட் கலர்களில் மட்டுமே வாங்க கிடைக்கும். ஆனால் ஐபோன் 16 ஆனது 5 கலர்களில் வாங்க கிடைக்கிறது.
ஐபோன் 16இ VS ஐபோன் 16 - டிஸ்பிளே (iPhone 16e VS iPhone 16 Display): டிஸ்பிளேக்களை பொறுத்தவரை, ஐபோன் 16இ மற்றும் ஐபோன் 16 ஆகிய இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக உள்ளன. இரண்டுமே 460பிபிஐ ரெசல்யூஷன், ட்ரூ டோன், வைட் கலர் (பி3) மற்றும் ஹாப்டிக் டச் உடனான 6.1-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED பேனலை கொண்டுள்ளன
ஐபோன் 16இ VS ஐபோன் 16 - கேமராக்கள் (iPhone 16e VS iPhone 16 Camera): கேமராக்களை பொறுத்தவரை, ஐபோன் 16இ மற்றும் ஐபோன் 16 ஆகிய இரண்டும் ஆப்பிளின் சமீபத்திய இமேஜிங் தொழில்நுட்பம் உடனான 48எம்பி ப்ரைமரி சென்சாரை கொண்டுள்ளன. ஆனால் ஐபோன் 16 மாடலில் கூடுதலாக அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் சில மேம்பட்ட புகைப்பட அம்சங்கள் உள்ளன. ஆனால் ஐபோன் 16இ மாடலில் சிங்கிள் ரியர் கேமரா மட்டுமே உள்ளது.
ஐபோன் 16இ VS ஐபோன் 16 - சிப்செட் (iPhone 16e VS iPhone 16 Chipset): பெர்ஃபார்மென்ஸை பொறுத்தவரை, ஐபோன் 16இ மற்றும் ஐபோன் 16 ஆகிய இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை தான். இரண்டுமே ஆப்பிளின் புதிய ஏ18 சிப் மூலம் இயக்கப்படுகின்றன. இதில் 6-கோர் சிபியு (2 செயல்திறன் கோர்கள், 4 செயல்திறன் கோர்கள்) உள்ளது. முக்கிய வேறுபாடு ஜிபியு-வில் உள்ளது. ஐபோன் 16 ஆனது 5-கோர் ஜிபியு-வை கொண்டுள்ளது. ஆனால் ஐபோன் 16இ ஆனது 4-கோர் ஜிபியு-வை கொண்டுள்ளது.
ஐபோன் 16இ VS ஐபோன் 16 - பேட்டரி லைஃப் (iPhone 16e VS iPhone 16 Battery Life): ஆப்பிள் ஐபோன் 16இ மாடலை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், இது 26 மணிநேர வீடியோ பிளேபேக் டைமை வழங்கும் என்று கூறப்படுகிறது. மறுகையில் உள்ள ஆப்பிள் ஐபோன் 16 மாடல் ஆனது 22 மணிநேர வீடியோ பிளேபேக் டைமை வழங்குகிறது.
ஐபோன் 16இ VS ஐபோன் 16 - ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் (iPhone 16e VS iPhone 16 Apple Intelligence): இந்த இரண்டு மாடல்களுமே ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் உடன் வருகின்றன. ஸ்மார்ட்டான இமேஜ் செயலாக்கத்திற்கான விஷுவல் இன்டெலிஜென்ஸ் மற்றும் நிகழ்நேர மேம்பாடுகள் உட்பட ஐபோன் 16இ மற்றும் ஐபோன் 16 ஆகிய இரண்டுமே ஆப்பிளின் ஏஐ திறன்களை கொண்டுள்ளன.
ஐபோன் 16இ மாடலின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் (iPhone 16e Price, Pre-order, Sale Date): இந்தியாவில் ஐபோன் 16இ மாடலின் பேஸிக் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.59,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.69,900 க்கும் மற்றும் ஹை-எண்ட் 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.89,900 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ப்ரீ-ஆர்டர் பிப்ரவரி 21 முதல் தொடங்கும் என்றும், பிப்ரவரி 28 முதல் டெலிவரி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








