ஆள விட்றா சாமி.. தெரியாம கூட வாங்கிடாதீங்க.. iPhone 16e மாடலை டபுள் விலைக்கு விற்கும் நாடு!
பிப்.18 ஆம் தேதி முதல் ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் லேட்டஸ்ட் மற்றும் பட்ஜெட் விலை ஐபோன் மாடல் ஆன ஐபோன் 16இ (iPhone 16e) இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது. அறிமுகமான நேரத்தில் ஐபோன் 16இ மாடலானது மற்ற நாடுகளில் (அமெரிக்கா முதல் அரபு நாடுகள் வரை) என்னென்ன விலைகளில் வாங்க கிடைக்கும் என்கிற தகவல் வெளியாகி இருந்தது
இதற்கிடையில், இந்திய விலையுடன் ஒப்பிடும் போது ஐபோன் 16இ மாடலை "கிட்டத்தட்ட" டபுள் விலைக்கு விற்பனை செய்யும் நாடு குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. அதென்ன நாடு? இந்தியாவில் ஐபோன் 16இ மாடலின் விலை நிர்ணயம் என்ன? எந்த நாட்டில் ஐபோன் 16இ இந்தியாவில் கிடைப்பதை விட மலிவான விலைக்கு வாங்க கிடைக்கும்? இதோ விவரங்கள்:

ஐபோன் 16இ மாடல் ஆனது இரட்டிப்பு விலையில் விற்பனை செய்யப்படுவது துருக்கி நாட்டில் தான். அங்கே ஐபோன் 16இ மாடலின் பேஸிக் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ₺47,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,09,000 க்கு வாங்க கிடைக்கிறது. இந்திய விலை உடன் ஒப்பிடும் போது இது டபுள் விலை ஆகும்!
ஐபோன் 16இ மாடலின் இந்திய விலை விவரங்கள்: இந்தியாவில் ஐபோன் 16இ மாடலின் பேஸிக் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.59,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.69,900 க்கும் மற்றும் ஹை-எண்ட் 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.89,900 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து ஆப்ஷன்களுமே ஒயிட் மற்றும் பிளாக் கலர்களில் வாங்க கிடைக்கும்.
அமெரிக்காவில் ஐபோன் 16இ மாடலின் பேஸிக் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் 599 அமெரிக்க டாலர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.51,970 ஆகும். ஆக அமெரிக்காவில் ஐபோன் 16இ மாடலை வாங்குபவர்கள், இந்தியாவில் வாங்க கிடைப்பதை விட மலிவான விலைக்கு இதை வாங்கலாம்.
இதேபோல யுனைடெட் கிங்டம்மில் (யுகே) ஐபோன் 16இ மாடலின் 128 ஜிபி ஆப்ஷனின் விலை £599 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.65,460 ஆகும். அதாவது யுகே விலை நிர்ணயம் ஆனது இந்தியாவை விட சற்று அதிகமாக உள்ளது.
ஜப்பானில், ஐபோன் 16இ மாடலின் விலை 99,800 யென்களாக உள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.57,599 ஆகும். ஆகா ஜப்பானில் ஐபோன் 16இ மாடல் ஆனது இந்தியாவில் வாங்க கிடைப்பதை விட மலிவான விலைக்கு கிடைக்கிறது. இயற்பினும் அமெரிக்கா அளவிற்கு மிகவும் மலிவான விலைக்கு விற்பனை செய்யவில்லை.
கடைசியாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில், ஐபோன் 16இ மாடலின் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை AED 2,599 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ. 61,470 ஆகும். ஆக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சந்தையிலும் ஐபோன் 16இ மாடலின் விலை இந்திய விலையை விட சற்றே அதிகமாக இருக்கிறது.
ஐபோன் 16இ மீது என்னென்ன ப்ரீ-ஆர்டர் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது? ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர் (Apple Online Store) வழியாக ஐபோன் 16இ மாடலை வாங்கும் வாடிக்கையாளர்கள் தங்களுடைய அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி கார்டுகளை பயன்படுத்தினால் ரூ.4,000 வரை கேஷ்பேக் (Cashback) பெறலாம். இதோடு ஆப்பிள் நிறுவனம் ரூ.76,500 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸையும் (Exchange Bonus) வழங்குகிறது.
இலவச சலுகைகளை பொறுத்தவரை, ஐபோன் 16இ மாடலை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 3 மாதங்களுக்கு வகையான ஆப்பிள் சேவைகள் இலவசமாக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது: அவைகள் ஆப்பிள் ம்யூசிக் (Apple Music), ஆப்பிள் டிவி பிளஸ் (Apple TV Plus) மற்றும் ஆப்பிள் ஆர்கேட் (Apple Arcade) சந்தாக்கள் ஆகும்.


Click it and Unblock the Notifications