Home
Mobile

அட்றா சக்கை.. 3 இலவசங்கள் உட்பட மொத்தம் 5 ஆபர்கள் அறிவிப்பு.. Apple iPhone 16e முன்பதிவு ஆரம்பம்!

இந்தியாவில், ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் லேட்டஸ்ட் மற்றும் பட்ஜெட் விலை ஐபோன் ஆன ஐபோன் 16இ (iPhone 16e) மாடலின் முன்பதிவுகள் (பிப்.21 மாலை 6.30 மணி முதல்) தொடங்கியது. கடந்த பிப்.19 அன்று நடந்த ஐபோன் 16இ அறிமுகத்தின் போது, இந்த மாடலின் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் விலைகள் மற்றும், முன்பதிவு மற்றும் விற்பனை தேதிகள் மட்டுமே அறிவிக்கப்பட்டன. விற்பனை சலுகைகள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

தற்போது ஐபோன் 16இ மாடலின் ப்ரீ-ஆர்டர் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஆப்பிள் நிறுவனம் தனது லேட்டஸ்ட் ஐபோன் 16இ மீது 3 இலவசங்கள் உட்பட மொத்தம் 5 ஆபர்களை (iPhone 16e Pre-order Offers) வழங்குவது தெரிய வந்துள்ளது. அதென்ன ஆபர்கள்? ஐபோன் 16இ மாடலை முன்பதிவு செய்வது எப்படி? ஐபோன் 16இ மாடலின் இந்திய விலை நிர்ணயம் என்ன? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது?

மொத்தம் 5 ஆபர்கள் அறிவிப்பு.. Apple iPhone 16e முன்பதிவு ஆரம்பம்!

ஆப்பிள் ஐபோன் 16இ மீது என்னென்ன ப்ரீ-ஆர்டர் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது? ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர் (Apple Online Store) வழியாக ஐபோன் 16இ மாடலை வாங்கும் வாடிக்கையாளர்கள் தங்களுடைய அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி கார்டுகளை பயன்படுத்தினால் ரூ.4,000 வரை கேஷ்பேக் (Cashback) பெறலாம். இதோடு ஆப்பிள் நிறுவனம் ரூ.76,500 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸையும் (Exchange Bonus) வழங்குகிறது.

இலவச சலுகைகளை பொறுத்தவரை, ஐபோன் 16இ மாடலை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 3 மாதங்களுக்கு வகையான ஆப்பிள் சேவைகள் இலவசமாக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது: அவைகள் ஆப்பிள் ம்யூசிக் (Apple Music), ஆப்பிள் டிவி பிளஸ் (Apple TV Plus) மற்றும் ஆப்பிள் ஆர்கேட் (Apple Arcade) சந்தாக்கள் ஆகும்.

ஆப்பிள் ஐபோன் 16இ மாடலை முன்பதிவு செய்வது எப்படி? முன்னரே குறிப்பிட்டபடி பிப்ரவரி 21, 2025 அன்று மாலை 6:30 மணி முதல் இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் ஐபோன் 16இ மாடலை முன்பதிவு செய்யலாம். ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ஆன்லைன் அல்லது ஆப்லைன் ஆப்பிள் ஸ்டோரில் (Apple Store - Online and Offline) ஐபோன் 16இ மாடலை ப்ரீ ஆர்டர் செய்யலாம்

இது தவிர்த்து ஆப்பிளால் அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களிடமிருந்தும் ஐபோன் 16இ மாடலை ப்ரீ-ஆர்டர் செய்யலாம். அதாவது அமேசான் இந்தியா (Amazon India), பிளிப்கார்ட் (Flipkart), ரிலையன்ஸ் டிஜிட்டல் (Reliance Digital), க்ரோமா (Croma) மற்றும் பிற ஆன்லைன் ஸ்டோர்களிலும் முன்பதிவு செய்யலாம்.

ஆப்பிள் ஐபோன் 16இ மாடலின் முக்கிய அம்சங்கள்: இது ஃபேஸ் ஐடி உடனான 6.1-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இது ஐபோன் எஸ்இ சீரீஸில் காணப்படும் பாரம்பரிய ம்யூட் சுவிட்சுக்கு பதிலாக ஒரு ஆக்ஷன் பட்டனையும் கொண்டுள்ளது. கேமராவை ஸ்டார்ட் செய்வது அல்லது டிஎன்டி மோட்-ஐ ஆன் செய்வது போன்ற பல்வேறு செயல்பாடுகளை விரைவாக அணுக, இந்த ஆக்ஷன் பட்டன் உதவும்.

கூடுதலாக, ஆப்பிள் ஐபோன் 16இ ஆனது யூஎஸ்பி-சி போர்ட்டுடன் வருகிறது. இது விரைவான டேட்டா பரிமாற்றம் மற்றும் சார்ஜிங்கிற்காக லைட்னிங் போர்ட்டை மாற்றுகிறது. இது ஆப்பிளின் ஏ18 சிப் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் ஏஐ அம்சங்களின் தொகுப்பான ஆப்பிள் இன்டெலிஜென்ஸ்-ஐயும் ஆதரிக்கிறது.

கேமராக்களை பொறுத்தவரை இது சிங்கிள் 48எம்பி ஃப்யூஷன் ரியர் கேமராவுடன் வருகிறது, இது விரிவான ஹை ரெசல்யூஷன் புகைப்படங்களைப் பிடிக்கும் திறன் கொண்டது. இதன் கேமரா செட்டப் ஆனது 2எக்ஸ் டெலிஃபோட்டோ ஜூம் விருப்பத்தை வழங்குகிறது. முன்பக்கத்தில் ஐபோன் 16இ மாடலில் ஆட்டோஃபோகஸுடன் 12எம்பி ட்ரூ டெப்த் கேமரா உள்ளது. பேட்டரி லைஃப்பை பொறுத்தவரை இது 26 மணிநேர வீடியோ பிளேபேக்கை வழங்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone 16e Pre order Started in India with 3 Free Apple subscriptions Bank Cashback Exchange Offer
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X