லட்டு மாதிரி ஆஃபர்.. ரூ.8,401 ரேட் கட்ல iPhone மாடல்.. OIS கேமரா.. OLED டிஸ்பிளே.. IP68 ரேட்டிங் கிடைக்குது!
அமேசான் தளத்தில் ஐபோன் 16இ (iPhone 16e) ஸ்மார்ட்போனுக்கு நம்ப முடியாத விலை குறைப்பு கிடைக்கிறது. இப்போது, ஆர்டர் செய்தால் இதுவரையில் கிடைக்காதபடி கம்மி விலைக்கு வாங்கி கொள்ளலாம். காம்பாக்ட் டிசைனில் ஓஎல்இடி டிஸ்பிளே, ஓஐஎஸ் கேமரா போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த ஐபோன் 16இ மாடலுக்கு கிடைக்கும் சலுகை விவரங்கள் இதோ.
மார்கெட் விலையை பார்க்கையில், ஐபோன் 16இ மாடலின் 128 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.59,900ஆகவும், 256 ஜிபி ஸ்ரோடோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.69,900ஆகவும் இருக்கிறது. அதேபோல 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.89,900ஆக இருக்கிறது. இப்போது அமேசான் தளத்தில் ரூ.8,401 விலை குறைப்பு போக ரூ.51,499 பட்ஜெட்டில் வாங்க கிடைக்கிறது.

ஐபோன் 16இ அம்சங்கள் (iPhone 16e Specifications): சிக்ஸ் கோர் ஏ18 3என்எம் (Six Core A18 3nm) சிப்செட் மற்றும் ஐஓஎஸ் 18 (iOS 18) கிடைக்கிறது. ஐபோன்களில் வழக்கமாக கிடைக்கும் செராமிக் சீல்டு (Ceramic Shield) புரொடெக்சனுடன் 6.1 இன்ச் (2532 x 1170 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி உள்ளது.
1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர் (HDR), ட்ரூ டோன் (True Tone) சப்போர்ட் கிடைக்கிறது. செராமிக் ஷீல்டு மட்டுமல்லாமல், IP68 ரேட்டிங் கொண்ட வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் (Water & Dust Resistance) கொடுக்கிறது. இந்த ஐபோனில் 48 எம்பி வைடு ஆங்கிள் மெயின் கேமரா கிடைக்கிறது. இதுவொரு சிங்கிள் ரியர் கேமரா சிஸ்டம் கொண்ட மாடலாகும்.
இந்த கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி மற்றும் போட்டோனிக் என்ஜின் (Photonic Engine) சப்போர்ட் கிடைக்கிறது. அதேபோல சினிமாடிக் மோட் (Cinematic Mode), டால்பி விஷன் (Dolby Vision) போன்ற பிரீமியம் கேமரா பீச்சர்களும் கிடைக்கின்றன. மேலும், ஆட்டோ போகஸ் கொண்ட 12 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது.
இதில் பிக்சல் போகஸ் (Focus Pixels) கிடைக்கிறது. மொத்தமாக மெயின் கேமராவில் 2X டெலிபோட்டோ மற்றும் ட்ரூ டோன் பிளாஷ் கிடைக்கிறது. பிரீமியம் மாடல்களுக்கு நிகரான அவுட்புட் பெற்று கொள்ளலாம். ஏனென்றால், 12 எம்பி செல்பீ கேமராவிலும், டால்பி விஷன், 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ரெடினா பிளாஷ் போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன.
இதுவொரு காம்பாக்ட் ஸ்மார்ட்போன் மாடலாக இருப்பதால், வெறும் 167 கிராம் மட்டுமே எடை வருகிறது. அதேபோல 7.8 எம்எம் தடிமன் மட்டுமே கொண்டிருக்கிறது. 26 மணி நேரங்களுக்கு வீடியோ பிளேபேக் கொடுக்கும் லித்தியம்-அயன் பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு மற்ற ஐபோன்களை போலவே கியூஐ சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது.
காம்பாக்ட் மாடலாக இருந்தாலும், ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை (Stereo Speakers) கொடுக்கிறது. 5ஜி, ஜிகாபைட்-கிளாஸ் எல்டிஇ மற்றும் வை-பை 7 கனெக்டிவிட்டி கிடைக்கிறது. மேலும், ப்ளூடூத் 5.3 மற்றும் ஜிபிஎஸ் போன்ற வழக்கமாக பீச்சர்களையும் இந்த ஐபோன் 16இ கொடுக்கிறது. பிளாக் (Black) மற்றும் ஒயிட் (White) ஆகிய 2 கலர்களில் மட்டுமே ஆர்டர் செய்ய கிடைக்கிறது.
இந்த ஐபோன் 16இ ஸ்மார்ட்போனின் டிசைனை போலவே ஐபோன் 17 ஏர் மாடல் இருக்கிறது. இதேபோல அல்ட்ரா ஸ்லிம் மற்றும் சிங்கிள் ரியர் கேமராவை கொடுக்கிறது. ஆகவே, இந்த மாடலுக்கு அப்கிரேட் மாடலாக ஐபோன் 17 ஏர் மாடலை எதிர்பார்க்கலாம். இருப்பினும், ஐபோன் 17இ மாடலும் வெளியாக வாய்ப்புகள் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications