Home
Mobile

விலையை கேட்டு கடுப்பான கஸ்டமர்கள்.. iPhone 16e க்கு பதிலாக வேறு எந்த போனை வாங்கலாம்? 5 ஆப்ஷன் இருக்கு!

ஆப்பிளின் லேட்டஸ்ட் ஐபோன் 16இ (iPhone 16e) மாடலை பார்த்து பலரும் ஹேப்பி தான் என்றாலும் கூட சிலர் செம்ம அப்செட். ஏனென்றால் அவர்கள் எல்லாம் ரூ.50,000 க்குள் ஐபோன் எஸ்இ 4 அல்லது ஐபோன் எஸ்இ 2025 மாடலை எதிர்பார்த்தார்கள். அவர்களுக்கு கிடைத்ததே எதிர்பார்த்ததை விட ரூ.10,000 விலை அதிகமுள்ள ஐபோன் 16இ மாடல். பின் அப்செட் ஆகாமல் என்ன செய்வார்கள்.

இந்தியாவில் ஐபோன் 16இ மாடலின் பேஸிக் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.59,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.69,900 க்கும் மற்றும் ஹை-எண்ட் 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.89,900 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிளாக் மற்றும் ஒயிட் கலர்களில் பிப்.21 முதல் ப்ரீ-ஆர்டர் தொடங்கி, பிப்.28 முதல் விற்பனையும் தொடங்கவுள்ளது.

iPhone 16e க்கு பதிலாக வேறு எந்த போனை வாங்கலாம்? 5 ஆப்ஷன் இருக்கு!

மேற்கண்ட 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் விலைகளுமே.. ரூ.49,000-ஐ சுற்றிய விலையில் ஒரு பட்ஜெட் ஐபோன் மாடலை எதிர்பார்த்தவர்களுக்கு செட் ஆகாமல் போகலாம். இந்த இடத்தில் தான் ஐபோன் 16இ மாடலுக்கு பதிலாக வேறு எந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை வாங்கலாம் என்கிற எண்ணம் பிறக்கும். ஒருவேளை நீங்களும் அதே எண்ணத்தில் இருந்தால்..நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய 5 ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இதோ:

01. ஐக்யூ 13 5ஜி (iQOO 13 5G): விலை ரூ.54,999
02. ஒன்பிளஸ் 13ஆர் 5ஜி (OnePlus 13R 5G): விலை ரூ.39,999
03. ரியல்மி ஜிடி 7 ப்ரோ (Realme GT 7 Pro): விலை ரூ.54,999
04. சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ (Samsung Galaxy S24 FE): விலை ரூ.50,999
05. கூகுள் பிக்சல் 8ஏ (Google Pixel 8a): விலை ரூ.37,999

ஐக்யூ 13 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: 144 ஹெர்ட்ஸ் வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் குவாட் எச்டி பிளஸ் கர்வ்டு BOE Q10 LTPO AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டை கொண்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை இது 1/ 1.49-இன்ச் சோனி IMX921 சென்சார், எப்/1.88 அபெர்க்ஷர், ஓஜஎஸ் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா + 150° அல்ட்ரா-வைட்-ஆங்கிள், எப்/2.0 அபெர்க்ஷர் உடனான 50எம்பி கேமரா + 119.4° டிகிரி, எப்/1.8-இன்ச் IMX816 சென்சார், ஓஐஎஸ், 4x லாஸ்லெஸ் ஜூம் உடனான 50எம்பி டெலிஃபோட்டோ கேமரா ஆகியவைகளை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் எப்/2.45 அபெர்க்ஷர் உடனான 32எம்பி செல்பீ கேமரா உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை இது 120W அல்ட்ரா-ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங் உடனான 6150mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது ஒன்பிளஸ் 13 மாடலில் உள்ள 6000mAh பேட்டரியை விட பெரியதாகும். கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார், அகச்சிவப்பு சென்சார், யூஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ஃபை ஆடியோ, IP68+IP69 ரேட்டிங் ஆகியவைகளை கொண்டுள்ளது

கூகுள் பிக்சல் 8ஏ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு உடனான 6.1-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது கூகுளின் டென்சர் ஜி3 சிப்செட் மற்றும் டைட்டன் எம்2 செக்யூரிட்டி கோ-ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை இதில் 64 மெகாபிக்சல் மெயின் லென்ஸ் மற்றும் 13 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. இந்த கேமரா செட்டப்பில் சில ஏஐ அம்சங்களும் உள்ளன. அதில் பெஸ்ட் டேக், மேஜிக் எடிட்டர், ஆடியோ மேஜிக் ஏரேசர் போன்றவைகள் அடங்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் கூகுளின் பில்ட் இன் ஏஐ அசிஸ்டென்ட் ஆன ஜெமினியும் இணைக்கப்பட்டுள்ளது. கடைசியாக இது 4492mAh பேட்டரியுடன் வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone 16e Best Alternative Android Smartphones Consider to Buy in 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X