வெளுக்குது விற்பனை.. ரூ.7,500 டிஸ்கவுண்ட்.. OLED டிஸ்பிளே.. 48MP கேமரா.. 25W சார்ஜிங்.. எந்த மாடல்?
இதைவிட கம்மியான பட்ஜெட்டில் வாங்க முடியாதுங்க என்று அடித்து சொல்லும்படியான டிஸ்கவுண்ட்டில் ஐபோன் 16 (iPhone 16) போனானது விற்பனைக்கு வந்துள்ளது. ரூ.7500 டிஸ்கவுண்ட்டில் இப்போது கிடைக்கிறது. சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் ஓஎல்இடி டிஸ்பிளே, சிக்ஸ்-கோர் ஏ18 சிப்செட், சென்சார்-ஷிப்ட் ஓஐஎஸ் டெக்னாலஜியுடன் 48 எம்பி கேமரா போன்ற பிரீமியம் பீச்சர்கள் மட்டுமல்லாமல், லேட்டஸ்ட் ஆக்சன் பட்டனையும் கொண்ட இந்த ஐபோன் 16 மாடலின் முழு பீச்சர்களை பார்த்துவிட்டு, டிஸ்கவுண்ட் மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்வோம்.
ஐபோன் 16 அம்சங்கள் (iPhone 16 Specifications): கேமரா பீச்சர்கள் அல்ட்ரா பிரீமியமாக வருகின்றன. 48 எம்பி வைடு-ஆங்கிள் கேமரா + 12 எம்பி ஆட்டோபோகஸ் அல்ட்ரா வைடு கேமரா கொண்ட வழக்கமான டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. 2ஆவது ஜெனரேஷன் சென்சார்-ஷிப்ட் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொண்டிருக்கிறது.

2X டெலிபோட்டோ (Telephoto), போட்டோனிக் என்ஜின் (Photonic Engine), ட்ரூ டோன் ஃபிளாஷ் (True Tone Flash) வருகிறது. டால்பி விஷன் (Dolby Vision) கொண்ட எச்டிஆர் (HDR) வீடியோ ரெக்கார்டிங் உள்ளது. அதேபோல சினிமாடிக் மோட் (Cinematic Mode) கொண்ட 4K டால்பி விஷன் ரெக்கார்டிங் வருகிறது. மேக்ரோ போட்டோகிராபி (Macro Photography) பேக் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஐபோன் 16 போனின் செல்பீ கேமராவை பார்க்கையில், ஆட்டோபோகஸ் (Autofocus) மற்றும் பிக்சல் போகஸ் (Focus Pixels) கொண்ட 12 எம்பி ட்ரூடெப்த் கேமரா வருகிரது. இந்த கேமராவுக்கு ரெடினா ஃபிளாஷ் (Retina Flash) பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த கேமராவிலும் டால்பி விஷன், 4K வீடியோ ரெக்கார்டிங் இருக்கிறது. கேமரா கன்ட்ரோல்கள் வருகின்றன.
ஆக்சன் பட்டன் (Action Button) பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டன் மூலம் சைலெண்ட் மோட் (Silent Mode), போகஸ் (Focus), கேமரா (Camera), ஃபிளாஷ்லைட் (Flashlight) போன்றவற்றை கன்ட்ரோல் செய்து கொள்ள முடியும். அதேபோல டிரான்ஸ்லேட் (Translate), மேக்னிஃபையர் (Magnifier) கன்ட்ரோல்களையும் செய்து கொள்ளலாம். டிஸ்பிளேவும் பட்டையை கிளப்பி இருக்கிறது.
காம்பாக்ட் டிசைனில் 6.1 இன்ச் (2556 × 1179 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. முந்தைய மாடல்களை போலவே இதுவும் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்பிளே (Super Retina XDR Display) மாடலாகும். 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 2000 அவுட்டோர் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது. வழக்கமான செராமிக் ஷீல்டு (Ceramic Shield) புரொடெக்சன் கொண்டிருக்கிறது.
அதேபோல எச்டிஆர் (HDR) மற்றும் ட்ரூ டோன் (True Tone) சப்போர்ட் உள்ளது. லேட்டஸ்ட் ஐஓஸ் 18 (iOS 18) கொண்ட சிக்ஸ்-கோர் ஏ18 3என்எம் (Six-Core A18 3nm) சிப்செட் வருகிறது. 5 கோர் ஜிபியு (GPU) மற்றும் 16 கோர் நியூரல் என்ஜின் (Neural Engine) பேக் செய்யப்பட்டுள்ளது. 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி மாடல்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது.
25W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட லித்தியன்-அயன் பேட்டரி வருகிறது. இந்த போனின் 128 ஜிபி மாடலின் விலை ரூ.79,900ஆக இருக்கிறது. விஜய் சேல்ஸ் (Vijay Sales) மூலம் ஆர்டர் செய்தால், ரூ.7500 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆனால், ஒன்கார்டு கிரெடிட் கார்டு மூலம் ஈஎம்ஐ ஆப்னில் ஆர்டர் செய்தால் மட்டுமே இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கும்.
ஈஎம்ஐ இல்லையென்றால், ரூ.5000 டிஸ்கவுண்ட் பெற்று கொள்ளலாம். இந்த டிஸ்கவுண்ட் எஸ்பிஐ கிரெடிட் காடுக்கு கிடைக்கிறது. அதேபோல கோடக் மஹிந்திரா கிரெடிட் கார்டுக்கு ரூ.5000 டிஸ்கவுண்ட், எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.4500 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. பிளாக், ஒயிட், பிங்க், டீல் மற்றும் அல்ட்ராமரைன் கலர்களில் ஆர்டர் செய்யலாம்.


Click it and Unblock the Notifications








