ஆஃபர்னா இதுதான்.. ரூ.9,000 இறக்கியாச்சு.. இதுல ரூ.4,000 டிஸ்கவுண்ட்.. ரூ.5,000 ரேட் கட்.. எந்த மாடல்?
ஆப்பிள் பிரியர்களுக்கு இதைவிட என்னங்க வேண்டும் என்று சொல்லும்படியான டிஸ்கவுண்ட் விலையில் ஐபோன் 16 (iPhone 16) கிடைக்கிறது. இப்போது, ரூ.5,000 விலை குறைப்பு மட்டுமல்லாமல், ரூ.4,000 உடனடி பேங்க் டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்கிறது. இதனால், கஸ்டமர்கள் அடிச்சு புடிச்சு ஆர்டர் செய்து வருகின்றனர். இந்த ஐபோன் 16 மாடலுக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட் விவரங்கள் மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் ஐபோன்கள் வெளியாகும்போது ஒரு விலையும் சில மாதங்களுக்கு பிறகு ஒரு விலையும் இருக்கும். அதாவது, நேரடி விலை குறைப்பு மற்றும் குறிப்பிட்ட பேங்க் கார்டுகளுக்கு உடனடி டிஸ்கவுண்ட் அதிகமாக கிடைக்கும். இதேபோல 2024ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் ரூ.79,900 பட்ஜெட்டில் வெளியான ஐபோன் 16 மாடலானது, இப்போது ரூ.70,900 பட்ஜெட்டில் கிடைக்கிறது.

முன்பே சொன்னதை போல இதில் நேரடி விலை குறைப்பு மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் இருக்கிறது. அதாவது, 128 ஜிபி மெமரி கொண்ட ஐபோன் 16 மாடலின் மார்கெட் விலை ரூ.79,900 ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து ரூ.5,000 விலை குறைப்பு செய்யப்பட்டு, ரூ.74,900 பட்ஜெட்டில் இப்போது விற்பனைக்கு கிடைக்கிறது. ஆகவே, இந்த விலையில் வாங்க முடியும்.
இதற்கு பேங்க் கார்டுகள் தேவையில்லை. ஆனால், இந்த ரூ.74,900 பட்ஜெட் போக கூடுதலாக ரூ.4,000 டிஸ்கவுண்ட் பெறுவதற்கு பேங்க் கார்டுகள் வேண்டும். ஆகவே, மேலும் ரூ.4,000 போக ரூ.70,900 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இந்த விலைக்கு பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) ஆர்டர் செய்ய கிடைக்கிறது. பேங்க் டிஸ்கவுண்ட் பெற குறிப்பிட்ட கார்டுகள் தேவைப்படுகிறது.
ஆகவே, ஐசிஐசிஐ பேங்க், எஸ்பிஐ பேங்க் ஆகியவற்றின் கிரெடிட் கார்டுகளுக்கு இந்த டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. இதேபோல 256 ஜிபி மெமரி வேரியண்ட் மற்றும் 512 ஜிபி மெமரி வேரியண்ட் ஆகியவற்றுக்கும் டிஸ்கவுண்ட் மற்றும் விலை குறைப்பு கிடைக்கிறது. பிளாக், பிங்க், டீல், அல்ட்ராமரைன் மற்றும் ஒயிட் உள்ளிட்ட கலர்களில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது.
ஐபோன் 16 அம்சங்கள் (iPhone 16 Specifications): இந்த ஐபோனில் 48 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவில் குவாட் பிக்சல் (Quad Pixel) மற்றும் போகஸ் பிக்சல் (Focus Pixel) சப்போர்ட் கிடைக்கிறது. இதுபோக சென்சார்-ஷிப்ட் ஓஐஎஸ் மற்றும் 26 எம்எம் போகல் லென்த் கிடைக்கிறது. 2X டெலிபோட்டோ ஆப்ஷன் கிடைக்கிறது.
அல்ட்ரா வைடு கேமராவில் ஆட்டோ போகஸ் (Auto Focus), 13 எம்எம் போகல் லென்த் மற்றும் போகஸ் பிக்சல் கிடைக்கிறது. மேக்ரோ போட்டோகிராபி (Macro Photography), சினிமாடிக் மோட் போன்ற பீச்சர்களும் கிடைக்கிறது. இந்த ஐபோன் 16 போனில் 12 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இதிலும் ஆட்டோ போகஸ், பிக்சல் போகஸ் போன்ற சப்போர்ட் கிடைக்கிறது.
காம்பாக்ட் டிசைனில் 6.1 இன்ச் (2556 x 1179 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. 2000 பீக் பிரைட்னஸ் மற்றும் 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி உள்ளது. செராமிக் ஷீல்டு பாதுகாப்பும் வருகிறது. சிக்ஸ் கோர் ஏ18 3என்எம் (Six Core A18 3nm) சிப்செட் உள்ளது. ஐஓஎஸ் 18 (iOS 18) வருகிறது. ஈசிம் சப்போர்ட் உள்ளது. 25W சார்ஜிங், லித்தியம் அயன் பேட்டரி உள்ளது.


Click it and Unblock the Notifications








