Home
Mobile

ஒட்டு மொத்த உலகமே உற்று நோக்கும் செப்டம்பர் 9.. iPhone 16 சீரிஸ்.. 48MP கேமரா.. பெரிய டிஸ்பிளே.. Apple அதிரடி!

உலகம் முழுவதும் அதிக மக்கள் எதிர்பார்த்த புதிய ஐபோன்கள் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெற உள்ள நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் (iPhone 16 series) ஆனது செப்டம்பர் 9-ம் தேதி இரவு 10.30-க்கு நடைபெற உள்ள ஆப்பிள் க்ளோடைம் (Apple Glowtime) நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும். ஆப்பிள் ரசிகர்கள் இந்த நிகழ்வை ஆப்பிள் இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அல்லது Apple TV ஆப்ஸ் வழியாக நேரடியாகப் பார்க்கலாம்.

குறிப்பாக ஐபோன் 16 சீரிஸ் ஆனது நான்கு மாடல்களில் வெளிவரும். அதன்படி ஐபோன் 16 (iPhone 16), ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus), ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro), ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) நான்கு மாடல்களில் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த போன்கள் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே சில முக்கியமான விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ஒட்டு மொத்த உலகமே உற்று நோக்கும் செப்டம்பர் 9.. Apple அதிரடி!

ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள் ஐஓஎஸ் 18 (iOS 18) மூலம் இயங்கும். எனவே இந்த போன்களை வாங்க விரும்பும் பயனர்கள் சமீபத்திய மென்பொருள் அப்டேட் செய்வதற்கான அவசியம் இருக்காது. குறிப்பாக இந்த ஓஎஸ் பல அசத்தலான புதிய அம்சங்களை வழங்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த போன்களின் மென்பொருள் வசதி மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஆப்பிள் நிறுவனம்.

புதிய ஏ18 ப்ரோ சிப்செட் (A18 Pro chipset) உடன் ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த புதிய சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். இதுதவிர மேம்பட்ட ஏஐ அம்சங்களுடன் புதிய ஐபோன் 16 சீரிஸ் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

செங்குத்தாக அடுக்கப்பட்ட லென்ஸ்கள், கேப்சூல் வடிவ கேமரா உடன் இந்த புதிய ஐபோன்கள் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக பழைய ஐபோன்களில் உள்ள கேமரா அமைப்பு தான் இந்த புதிய போன்களிலும் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் பல மேம்பட்ட அம்சங்கள் ஐபோன் 16 சீரிஸ் கேமராக்களில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மற்ற போன்களை விட ஐபோன் 16 பிளஸ் உங்கள் கண்களைக் கவரும். அதாவது தனித்துவமான அம்சங்கள் மற்றும் தனித்துவமான வடிவமைப்புடன் இந்த ஐபோன் 16 பிளஸ் மாடல் வெளிவரும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த மாடல் பெரிய டிஸ்பிளேவை கொண்டுள்ளது. எனவே பயணத்தின்போது ஸ்ட்ரீம் அல்லது கேம்களை விரும்புவோருக்கு இது மிகவும் ஏற்றது.

அதேசமயம் ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. அதுவும் இவற்றின் அல்ட்ரா வைடு கேமரா ஒரு பெரிய மேம்படுத்தலைப் பெறுகிறது. அதாவது 48எம்பி அல்ட்ரா வைடு கேமரா உடன் வெளிவரும். எனவே இந்த போன்களின் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும் என்பதை நினைவில் கொள்ள. மேலும் இந்த அல்ட்ரா வைடு கேமரா 2X ஆப்டிகல் ஜூம் வழங்கும் என்று கூறப்படுகிறது.

ஒட்டு மொத்த உலகமே உற்று நோக்கும் செப்டம்பர் 9.. Apple அதிரடி!

மேலும் புதிய ஐபோன்களின் பேட்டரி பேக்கப் வசதியில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் சார்பில் கூறப்படுகிறது. எனவே இந்த போன்களை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. குறிப்பாக அனைத்து சிறப்பான வசதிகளுடன் இந்த புதிய ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள் வெளிவரும் என்பதால் நல்ல வரவேற்பு இருக்கும்.

குறிப்பாக ஆப்பிள் க்ளோடைம் நிகழ்வில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 (Apple Watch Series 10), ஏர்பாட்ஸ் 4 (AirPods 4) மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய ஐபோன்கள், ஆப்பிள் வாட்ச் போன்ற சாதனங்கள் சற்று உயர்வான விலையில் வெளிவரும். ஆனால் விலைக்குத் தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த சாதனங்களில் உள்ளன.

photo credit: gsmarena.com, npstatic.com

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone 16 series to debut at Apple Glowtime event on September 9: How to watch the event
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X