ரூ.5,000 + ரூ.20,000 ஆபர்.. iPhone 16 மாடல்களை அசல் விலையை விட கம்மி விலைக்கு வாங்குவது எப்படி?
iPhone 16 Sale Offer: கடந்த செப்.9 ஆம் தேதியன்று நடந்த ஆப்பிளின் "இட்ஸ் க்ளோடைம்" நிகழ்வில் வெளியிடப்பட்ட அனைத்து ஐபோன் 16 சீரிஸ் மாடல்களுமே கடந்த செப்.13 ஆம் தேதி முதல் (ஆன்லைன் ஆப்பிள் ஸ்டோர் மற்றும் பிற முக்கிய இ-டெய்லர்களில் வழியாக) முன்பதிவு செய்ய கிடைக்கின்றன. மற்ற எல்லா புதிய ஸ்மார்ட்போன்களை போலவும், ஆப்பிளின் புதிய ஐபோன்களும் மீதும் அறிமுக சலுகைகள் (Launch Offers) அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் புதிய ஐபோன் 16 மாடல்களை சற்றே மலிவான விலைக்கு எப்படி வாங்குவது? எங்கே வாங்குவது? இதோ விவரங்கள்:
இந்தியாஐஸ்டோர் (IndiaiStore) இணையதளத்தில் கிடைக்கும் சலுகைகள்: இந்தியாஐஸ்டோர் அல்லது ஐஸ்டோர் (iStore) இணையதளம் வழியாக ஐபோன் 16 சீரிஸை ப்ரீ-ஆர்டர் செய்வோருக்கு 2 சலுகைகள் அணுக கிடைக்கும். 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்ட ஐபோன் 16-ன் பேஸிக் மாடலின் அசல் விலை ரூ.79,900 ஆகும்.

இந்த விலையை ரூ.74,900 ஆக குறைக்க முடியும். ஐசிஐசிஐ வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் எஸ்பிஐ வங்கியின் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால் ரூ.5,000 கேஷ்பேக் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே சலுகை ஐசிஐசிஐ பிங்கி டெபிட் கார்டுகளை பயன்படுத்தும்போதும் கூட கிடைக்கும்.
கூடுதலாக "நல்ல நிலையில் உள்ள" பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்யும் போது ரூ.20,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கும் என்றும் ஆப்பிள் இணையதளம் கூறுகிறது. உங்களிடம் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்ட, நல்ல நிலையில் உள்ள ஐபோன் 13 மாடல் இருந்தால் ,
அதை எக்ஸ்சேன்ஜ் செய்வதன் மூலம் முழு வர்த்தக மதிப்பையும் பெற முடியும்.
ஆப்பிளின் ஐபோன் 16 பிளஸ் மாடலை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கும் கூட இதே சலுகைகள் கிடைக்கும். கடைசியாக உள்ள ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல்களை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.4000 கேஷ்பேக் மற்றும் மேற்குறிப்பிட்ட அதே எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் அணுக கிடைக்கும்.
ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ் மாடல்களின் இந்திய விலை நிர்ணயம் மற்றும் கலர் ஆப்ஷன்கள்: இந்தியாவில் ஐபோன் 16 மாடலின் பேஸிக் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.79,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே மாடலின் 256ஜிபி மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் முறையே ரூ.89,900 மற்றும் ரூ.1,09,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அடுத்ததாக உள்ள ஐபோன் 16 பிளஸ் மாடலின் பேஸிக் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.89,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே மாடலின் 256ஜிபி மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் முறையே ரூ.99,900 மற்றும் ரூ.1,19,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரை ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் ஆகிய இரண்டுமே பிளாக், பிங்க், டீல், அல்ட்ராமரைன் மற்றும் ஒயிட் கலர்களில் வாங்க கிடைக்கும்.
ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல்களின் விலை நிர்ணயம் மற்றும் கலர் ஆப்ஷன்கள்: இந்தியாவில் ஐபோன் 16 ப்ரோ மாடலின் பேஸிக் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,19,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே மாடலின் 256ஜிபி, 512ஜிபி மற்றும் 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் முறையே ரூ.1,29,900, ரூ.1,49,900 மற்றும் ரூ.1,69,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கடைசியாக உள்ள ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடலின் பேஸிக் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,44,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே மாடலின் 512ஜிபி மற்றும் 1டிபிஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் முறையே ரூ.1,64,900 மற்றும் ரூ.1,84,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரை ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய இரண்டுமே பிளாக் டைட்டானியம், டெஸெர்ட் டைட்டானியம்,நேச்சுரல் டைட்டானியம் மற்றும் ஒயிட் டைட்டானியம் கலர்களில் வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications