Home
Mobile

திடீர் டிமாண்ட்டில் லேட்டஸ்ட் iPhone.. ரூ.7000 விலை குறைப்பு, ரூ.4000 டிஸ்கவுண்ட்.. மொத்தம் ரூ.11,000!

பிளிப்கார்ட் ஒருபக்கமிருக்க விஜய் சேல்ஸ் (Vijay Sales) ஆனது தனது அனைத்து விற்பனை நிலையங்கள் மற்றும் ஆன்லைன் ஸ்டோரிலும் மெகா ஃப்ரீடம் சேல்-ஐ (Mega Freedom Sale) நடத்தி வருகிறது. ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விற்பனையில் ஆப்பிள் ஐபோன்கள் மீது "அடேங்கப்பா" என்று கூறும்படியான ஆபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சற்றே பழைய ஐபோன் 14 (iPhone 14) மாடலை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிக குறைந்த விலையில் விற்பனை செய்யும் விஜய் சேல்ஸ் ஆனது ஐபோன் 17 சீரீஸ் (iPhone 17 Series) வருகையை முன்னிட்டு குறிப்பாக ஐபோன் 16 (iPhone 16) மீதும் ஆபர்களை அறிவித்துள்ளது.

லேட்டஸ்ட் iPhone.. ரூ.7000 விலை குறைப்பு, ரூ.4000 டிஸ்கவுண்ட்!

ஐபோன் 16 மாடலின் பேஸிக் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் அசல் அறிமுக விலை (Launch Price) ரூ.79,900 ஆகும். இருப்பினும் விஜய் சேல்ஸில் இது ரூ.72,900 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதாவது நேரடியாகவே ரூ.7000 விலை குறைப்பின் (Rs 7000 Price Cut) கீழ் விற்கிறது. போதாக்குறைக்கு ரூ.4,000 பேங்க் கார்டு டிஸ்கவுண்ட்டையும் (Bank Card Discount) வழங்குகிறது. ஆக ஐபோன் 16 மாடலின் விலை ரூ.68,900 ஆக குறைக்க முடியும்.

கூடுதலாக ஐபோன் 16 மீது எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியும் (Exchange Offer) வழங்கப்படுகிறது. இதன் கீழ் நீங்கள் பரிமாற்றம் செய்யும் ஸ்மார்ட்போனின் நிலையைப் பொறுத்து எக்ஸ்சேன்ஜ் போனஸ் (Exchange Bonus) கிடைக்கும். இதன்கீழ் அதிகட்சம் ஐபோன் 16 மாடலின் பைனல் ஆபர் ப்ரைஸ்-ஐ ரூ.60,000 க்கு அருகில் கொண்டுவர முடியும்.

ஐபோன் 16 மாடலின் முக்கிய அம்சங்கள் (iPhone 16 Features):
- காம்பாக்ட் ஆன 6.1-இன்ச் AMOLED டிஸ்பிளே
- ஆப்பிள் ஏ18 பயோனிக் சிப்செட்
- 48எம்பி ப்ரைமரி சென்சார் மற்றும் 12எம்பி அல்ட்ராவைடு சென்சார்
- 12எம்பி செல்பீ கேமரா
- 3561mAh பேட்டரி

ஐபோன் 14 மீதான ஆபர்கள்: தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளை பயன்படுத்தி ஆப்பிள் ஐபோன் 14 மாடலை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.3,500 வரை டிஸ்கவுண்ட் கிடைக்கும் என்று என்று விஜய் சேல்ஸ் அறிவித்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடிகள் மற்றும் இஎம்ஐ சலுகைகளும் கிடைக்கிறது

விஜய் சேல்ஸ் தற்போது, ஐபோன் 14 மாடலின் பேஸிக் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனை ரூ.51,900 க்கு பட்டியலிட்டுள்ளது. இது ரூ.59,900 இலிருந்து ஏற்கனவே ரூ.8000 விலை குறைப்பை பெற்றுள்ளது. ஐபோன் 14 மாடலின் 256 ஜிபி மற்றும் 512 ஜிபி ஆப்ஷன்கள் முறையே ரூ.54,900 மற்றும் ரூ.64,900 க்கு கிடைக்கின்றன.

ஐசிஐசிஐ வங்கி அட்டைகள் அல்லது எஸ்பிஐ கார்டு கிரெடிட் கார்டுகள் மற்றும் இஎம் பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தி ஐபோன் 14 மடலை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு விஜய் சேல்ஸ் ஆனது ரூ.1,000 தள்ளுபடியை வழங்குகிறது. இது ஐபோன் 14 மாடலின் தொடக்க விலையை ரூ.49,900 ஆக குறைக்கும். இருப்பினும் எச்டிஎப்சி வங்கி அட்டை மூலம் வாங்குபவர்கள் ஃபுல் ஸ்வைப் மற்றும் இஎம்ஐ பரிவர்த்தனைகளில் ரூ.3,500 வரை உடனடி தள்ளுபடியை பெறலாம்.

ஐபோன் 14 மாடலின் முக்கிய அம்சங்கள் (iPhone 14 Features):
- 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்பிளே
- ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்
- 12 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா
- 12 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 26 மணிநேரம் வரை வீடியோ பிளேபேக் டைம்

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone 16 Selling At Good Discount Price in Vijay Sales Mega Freedom Sale Which Ends Aug 17
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X