Home
Mobile

திடீர்னு டிமாண்ட் ஆகும் iPhone.. ரூ.14,000 நேரடி விலை குறைப்பு.. பேங்க் ஆபர், எக்ஸ்சேன்ஜ் போனஸ் சேர்க்காமல்!

ஐபோன் 17 சீரீஸ் (iPhone 17 Series) அறிமுகத்திற்கு முன்னதாக, கடந்த ஆண்டு வெளியான ஐபோன் 16 சீரீஸ் மாடல்கள் அதிக தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. ஏற்கனவே பல தளங்களில் வெண்ணிலா ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் மாடல்கள் கவர்ச்சிகரமான ஆபர் விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

ஒருவேளை நீங்கள் ப்ரோ எக்ஸ்பீரியன்ஸை தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் உடனே செல்ல வேண்டிய இடம் விஜய் சேல்ஸ் (Vijay Sales) தான். ஏனென்றால் விஜய் சேல்ஸ் ஆனது ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) மாடலை நல்ல ஆபர் விலையில் விற்பனை செய்கிறது.

திடீர்னு டிமாண்ட் ஆகும் iPhone.. ரூ.14,000 நேரடி விலை குறைப்பு!

விஜய் சேல்ஸ் இல் ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ மாடல் ஆனது தற்போது ரூ.1,05,900 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இது குறிப்பிட்ட மாடலின் அசல் வெளியீட்டு விலையான ரூ.1,19,900 இலிருந்து குறிப்பிடத்தக்க தள்ளுபடியை குறிக்கிறது. அதாவது கூடுதல் சலுகைகள் எதையும் பயன்படுத்தாமலேயே நீங்கள் நிறைய சேமிக்கலாம்

ஆனால் இந்த டீல் ஒயிட் டைட்டானியம் பினிஷ் கொண்ட 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் மீது மட்டுமே கிடைக்கிறது. நேரடி விலை குறைப்பிற்கு கூடுதலாக, விஜய் சேல்ஸ் ஆனது ஐபோன் 16 ப்ரோ மீதான இந்த டீலை இன்னும் இனிமையாக்க பல வங்கி சலுகைகளையும் வழங்குகிறது. ஐசிஐசிஐ வங்கி மற்றும் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கூடுதலாக ரூ.3,000 தள்ளுபடியை பெறலாம்.

அதே நேரத்தில் எச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளர்கள் இஎம்ஐ விருப்பத்தை தேர்வு செய்தால் ரூ.4,500 வரை தள்ளுபடி பெறலாம். கூடுதலாக, உங்களிடம் இருக்கும் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்தால் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கிடைக்கும். இப்படியாக உங்களால் எவ்வளவு முடியுமோ ஐபோன் 16 ப்ரோவின் விலையை அவ்வளவு குறைக்க முடியும்.

ஐபோன் 17 சீரீஸ் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? சமீபத்தில் ஜெஃப்பெரிஸ் ஆய்வாளர் ஆன எடிசன் லீ (Jefferies analyst Edison Lee) வழியாக அனைத்து ஐபோன் 17 சீரிஸ் மாடல்களின் விலை நிர்ணயமும் ஆன்லைனில் லீக் ஆகி இருந்தன. அதன்படி ஆப்பிள் நிறுவனம் அதன் அடுத்த ஐபோன் சீரீஸிற்கான விலை உயர்வுகளை பரிசீலித்து வருகிறது.

அதாவது அதிகரித்து வரும் காம்போனென்ட் செலவுகள் (Component costs ) மற்றும் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே நடந்து வரும் கட்டணப் போர் (Tariff war between the US and China) ஆகியவைகளின் விளைவாக ஐபோன் 17 சீரிஸ் ஆனது அதிக விலைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று பரிந்துரைக்கிறது. எடிசன் லீயின் கூற்றுப்படி, ஐபோன் 16 சீரிஸ் உடன் ஒப்பிடும் போது (வெண்ணிலா மாடல் தவிர்த்து) ஐபோன் 17 சீரீஸ்-க்கான விலையை சுமார் $50 (தோராயமாக ரூ.4,000) உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.

இவருடைய கணிப்பு துல்லியமாக இருந்தால், ஐபோன் 17 ப்ரோ (iPhone 17 Pro Price) மாடலின் விலை $1,049 (தோராயமாக ரூ.91,000) க்கு தொடங்கலாம், இது ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) மாடலின் வெளியீட்டு விலையான $999 (தோராயமாக ரூ.87,000) விட அதிகமாகும். நினைவூட்டும் வண்ணம் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) $1,199 (தோராயமாக ரூ.1,00,700) க்கு அறிமுகமானது.

இதனுடன் ஒப்பிடும்போது ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (iPhone 17 Pro Max Price) மாடலின் விலை $1,249 (தோராயமாக ரூ.1,09,000) ஆக இருக்கலாம். புதிய ஐபோன் 17 ஏர் (iPhone 17 Air Price) மாடலின் ஆரம்ப விலை $949 (தோராயமாக ரூ.83,000) ஆக இருக்கலாம். நினைவூட்டும் வண்ணம் ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus) மாடல் ஆனது $899 (தோராயமாக ரூ.75,500) க்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone 16 Pro Price Drops in Vijay Sales Ahead iPhone 17 Series Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X