Home
Mobile

iPhone 16 Pro-வை Cheap ஆக விற்பதில் போட்டி.. பிளிப்கார்ட் VS விஜய் சேல்ஸ் Vs ரிலையன்ஸ்.. வென்றது யார்?

2025 தீபாவளி பண்டிகை கால "வைப்ஸ்" (2025 Diwali Vibes) தொடங்கி பல நாட்கள் ஆகிறது. எப்போது தீபாவளி பெயரை சொல்லி சிறப்பு விற்பனைகள் தொடங்கினவோ அப்போதில் இருந்தே தீபாவளி "வைப்ஸ்" தொடங்கி விட்டது. தீபாவளி சேல்ஸ் அந்த ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் மிகப்பெரிய பண்டிகை கால ஷாப்பிங் சீசன்களாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக புதிய ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிடுபவர்களுக்கு!

அப்படியாக உங்களுடைய குறி - ஐபோன் 16 ப்ரோ மாடல் மீது இருந்தால் - பிளிப்கார்ட், குரோமா, விஜய் சேல்ஸ் மற்றும் பல இ-காமர்ஸ் தளங்கள் ஆனது போட்டி போட்டுக்கொண்டு ஆப்பிளின் ஐபோன் 16 ப்ரோ மாடலை ஆபர் விலையில் விற்கின்றன. கடந்த 2025 செப்டம்பரில் புதிய ஐபோன் 17 சீரீஸ் தொடர் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகும் கூட ஐபோன் 16 ப்ரோ மீதான மவுசு குறையவே இல்லை; இன்னும் சொல்லப்போனால் அதிகரித்துள்ளது.

iPhone 16 Pro-வை Cheap ஆக விற்பதில் போட்டி!

சரி - பிளிப்கார்ட் VS குரோமா VS விஜய் சேல்ஸ் VS ரிலையன்ஸ் டிஜிட்டல் VS பிக்பாஸ்கெட். இந்த 5 தளங்களில் எது ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) மாடலை நல்ல ஆபர் / டிஸ்கவுண்ட் விலையில் விற்பனை செய்கிறது என்று பார்க்கலாம்:

1. பிளிப்கார்ட்: 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் ஐபோன் 16 ப்ரோ மடலை ரூ.1,04,999 க்கு விற்பனை செய்கிறது. முன்னர் இது ரூ.1,19,900 ஆக இருந்தது. பிளிப்கார்ட் ஆக்சிஸ் கிரெடிட் கார்டு பயனர்கள் கூடுதலாக ரூ.4,000 சேமிக்கலாம். உங்கள் பழைய ஸ்மார்ட்போனின் நிலையைப் பொறுத்து ரூ.61,900 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கிடைக்கும்

2. குரோமா: 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் உடன் வரும் ஐபோன் 16 ப்ரோ மாடலை ரூ.1,13,490 க்கு விற்பனை செய்கிறது.
3. விஜய் சேல்ஸ்: 256ஜிபி மாடலை ரூ.1,14,900 க்கு பட்டியலிட்டு உள்ளது. இஎம்ஐ இல்லாமல் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் ரூ.5,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

4. ரிலையன்ஸ் டிஜிட்டல்: ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ மாடலின் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜின் விலை ரூ.1,19,900 க்கு வாங்க கிடைக்கிறது
5. பிக்பாஸ்கெட்: சுவாரஸ்யமாக பிக்பாஸ்கெட் தளத்தில் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் ஐபோன் 16 ப்ரோ ரூ.99,990 க்கு வாங்க கிடைக்கிறது.

புதிய ஆப்பிள் ஐபோன் 17 மாடலின் விலை நிர்ணயம்: இந்தியாவில், ஐபோன் 17 மாடலின் ஆரம்ப விலை ரூ.82,900 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது (பிளிப்கார்ட் வலைத்தளத்திலும் இதே விலை தான் பிரதிபலிக்கிறது). இது லாவெண்டர், மிஸ்ட் ப்ளூ, சேஜ், ஒயிட் மற்றும் பிளாக் ஆகிய கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும்.

ஐபோன் 17 மாடலின் முக்கிய அம்சங்கள்:
- ஐஓஎஸ் 26 (iOS 26)
- டூயல் சிம் (நானோ + இசிம்) ஆதரவு
- 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்
- 3000 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ்
- மேம்படுத்தப்பட்ட செராமிக் ஷீல்ட் 2 பாதுகாப்பு
- ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே
- 6.3-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்பி

- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- எப் /1.6 அபெர்க்ஷர் மற்றும் சென்சார்-ஷிப்ட் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடனான 48 மெகாபிக்சல் ஃப்யூஷன் பிரைமரி கேமரா
- எப்/2.2 அபெர்க்ஷர் மற்றும் மேக்ரோ திறன்களை கொண்ட 48 மெகாபிக்சல் ஃப்யூஷன் அல்ட்ரா-வைட் கேமரா
- ஏ19 சிப்செட்
- ஐபோன் 16 உடன் ஒப்பிடும்போது எட்டு மணிநேரம் வரை கூடுதல் பேட்டரி லைப்பை வழங்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone 16 Pro Offer Flipkart VS Croma Vs Vijay Sales Vs Reliance Digital Vs BigBasket
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X