Home
Mobile

Apple அலப்பறை.. iPhone 16-ஐ தொடர்ந்து iPhone 16 Pro-விலும் முக்கிய மாற்றம்.. இதுக்காகவே வாங்குவாங்களே!

"என்னாப்பா.. பேக்-டூ-பேக் இன்ப அதிர்ச்சிகளா இருக்கு!" என்று கேட்கும்படியாக ஆப்பிளின் அடுத்த ஜெனரேஷன் ஐபோன் மாடல்களான ஐபோன் 16 சீரிஸில் (iPhone 16 Series) கொண்டு வரப்படவுள்ள மேலுமொரு முக்கியமான மாற்றம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதென்ன மாற்றம்? ஐபோன் 16 சீரீஸில் வேறு என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன? ஐபோன் 16 சீரீஸ் சரியாக எப்போது அறிமுகமாகும்? இந்த 2024 ஆம் ஆண்டு ஐபோன் 16 சீரிஸின் கீழ் மொத்தம் எத்தனை மாடல்கள் அறிமுகமாகும்? இதோ விவரங்கள்:

கடந்த பல ஆண்டுகளாக தனது ஐபோன் மாடல்களில் பெரிய அளவிலான மாற்றங்களை கொண்டுவராத ஆப்பிள் நிறுவனமானது, இந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகமாகும் ஐபோன் 16 சீரீஸ் வழியாக "நினைத்து பார்க்காத அளவிற்கு" சில முக்கிய மாற்றங்களை கொண்டுவரவுள்ளது போல் தெரிகிறது.

iPhone 16-ஐ தொடர்ந்து iPhone 16 Pro-விலும் முக்கிய மாற்றம்!

நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான செட்சுனா டிஜிட்டல் (Setsuna Digital) வழியாக கிடைத்த தகவலின்படி, ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 16 சீரீஸில் குறிப்பிடத்தக்க டிஸ்பிளே மேம்பாடுகளை கொண்டுவரும். அதாவது ஐபோன் 15 சீரீஸ் உடன் ஒப்பிடும்போது ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) ஆகியவை மாடல்கள் மெல்லிய பெசல்களுடன் வரும்.

இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் டிஸ்பிளேவில் உள்ள பெசல்கள் வெறும் 1.15 மிமீ மட்டுமே இருக்கும். இது ஐபோன் 15 ப்ரோவில் காணப்படும் பெசல்களை விட குறைவான அளவாகும். இப்படியாக ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய இரண்டும் முறையே 6.3-இன்ச் மற்றும் 6.9-இன்ச் டிஸ்பிளேக்களை பேக் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஐபோன் 16 ப்ரோ மாடல் ஆனது 1.2 மிமீ பெசல்களை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது, அதே நேரத்தில் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸின் பெசல்கள் வெறும் 1.15 மிமீ அளவை கொண்டிருக்கும். ஒப்பிடுகையில், ஐபோன் 14 ப்ரோவின் பெசல்கள் 2.15 மிமீ அளவையும், ஐபோன் 15 ப்ரோ 1.71 மிமீ பெசல்களையும் கொண்டுள்ளது.

மற்றொரு நம்பகமான டிப்ஸ்டர் ஆன ஐஸ் யுனிவர்ஸும் (Ice Universe) இந்த தகவலை உறுதிப்படுத்துகிறார். எக்ஸ் தளம் வழியாக அவர் பகிர்ந்த தகவலின்படி ஐபோன் 16 ப்ரோ மாடல் சாம்சங் கேலக்ஸி எஸ்24 (Samsug Galaxy S24) மாடலை விஞ்சி "உலகின் குறுகிய பெசல் கொண்ட மொபைல் போன்" ஆக மாறும் என்று பதிவிட்டுளார்.

முன்னதாக ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 16 சீரீஸின் கேமரா வடிவமைப்பிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை கொண்டு வரவுள்ளதாக தகவல் வெளியானது. இதற்காக ஆப்பிள் நிறுவனம் அதன் வழக்கமான டயகனல் கேமரா செட்டப்பை தவிர்த்துவிட்டு வெர்டிகல் கேமரா லேஅவுட்டை மீண்டும் கொண்டு வரும் என்று கூறப்படுகிறது,

இந்த மாற்றம் வெறுமே அழகியலுக்கான ஒரு வேலைப்பாடாக மட்டுமில்லாமல் ஸ்பேஷியல் வீடியோ பதிவை (Spatial Video Record) ஐபோன் 16 சீரீஸிற்கு கொண்டுவரவும் உதவும். நினைவூட்டும் வண்ணம் ​​ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய 2 மாடல்களும் ஸ்பேஷியல் வீடியோ ரெக்கார்ட் செய்யும் திறனை கொண்டுள்ளன. இந்த அம்சத்திற்கு செங்குத்தாக வடிவமைக்கப்பட்ட கேமராக்கள் தேவை.

ஐபோன் 15 சீரீஸின் ப்ரோ மாடல்கள் ஆனது ட்ரிபிள்-கேமரா செட்டப்பை கொண்டுள்ளன. ஆனால் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்களில் அவ்வாறு இல்லை. எனவே அடுத்துவரும் பேஸிக் ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் மாடல்களில் செங்குத்தான கேமரா செட்டப்பை கொண்டு வருவதன் மூலம், ஆப்பிள் நிறுவனம் அதன் ஸ்பேஷியல் வீடியோ ரெக்கார்டிங் அம்சத்தின் கிடைக்கும் தன்மையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது போல் தெரிகிறது.

ஐபோன் 16 சீரிஸின் கீழ் என்னென்ன மாடல்கள் அறிமுகமாகும்? ஐபோன் 16 சீரீஸோடு ஆப்பிள் நிறுவனம் அதன் பிளஸ் மாடல்களுக்கு முடிவு கட்டும் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது இந்த ஆண்டு வெளியாகும் ஐபோன் 16 சீரிஸ் அறிமுகத்திற்குப் பிறகு, ஆப்பிள் நிறுவனம் பிளஸ் மாடல்களை அகற்ற திட்டமிட்டுள்ளது போல் தெரிகிறது.

அதாவது ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus) மாடலுக்கு பின்னர் ஐபோன் 17 பிளஸ் (iPhone 17 Plus) மாடல் அறிமுகம் செய்யப்படாது. இதற்கு பதிலாக ஐபோன் 17 சீரீஸில் - ஐபோன் 17 ஸ்லிம் (iPhone 17 Slim) என்கிற மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆக இந்த மாற்றம் ஐபோன் 17 சீரீஸில் தான் வரும். ஐபோன் 16 சீரிஸில் வழக்கம் போல - ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் அறிமுகமாகும். Source: Setsuna Digital, Ice Universe (@UniverseIce)

More from GizBot

Best Mobiles in India

English summary
Phone 16 Pro Models To Get Most Thinnest Screen Bezels Become World Narrowest Bezel Mobile Phone
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X