Apple ஒரே போடு.. நேரடியாக ரூ.12,000 ரேட் கட்.. OLED டிஸ்பிளே.. 48MP கேமரா.. 128GB ஸ்டோரேஜ்.. எந்த மாடல்?
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல்கள் களமிறங்கும்போது, அதற்கு முந்தைய மாடல்களுக்கு விலை குறைப்பு செய்யப்படுவது வழக்கம்தான். இருப்பினும், இதில் பேங்க் டிஸ்கவுண்ட் சேர்த்து கொள்ளப்படும். ஆனால், ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) மாடலுக்கு நேரடியாக ரூ.12,000 விலை குறைப்பு கிடைக்கிறது. ஆகவே, எந்த கார்டு பரிவர்த்தனையும் இல்லாமல், அதிக லாபத்துடன் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த ஐபோன் 16 ப்ரோ மாடலுக்கு கிடைக்கும் பீச்சர்கள், தள்ளுபடி விவரங்கள் இதோ.
ஐபோன் 16 ப்ரோ புது விலை (iPhone 16 Pro New Price)
ஐபோன் 17 ப்ரோ மாடலானது, நாளை வெளியாக இருக்கிறது. இதனால், முந்தை மாடலான ஐபோன் 16 ப்ரோவுக்கு ரூ.12,000 நேரடி விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.1,19,900ஆக இருந்தது. இப்போது, அமேசான் விற்பனையில் (Amazon Sale) ரூ.1,07,900 பட்ஜெட்டில் வாங்க கிடைக்கிறது.

இந்த விலைக்கு கிரெடிட் கார்டு அல்லது டெபிட் பரிவர்த்தனை செய்ய வேண்டியது கிடையாது. நேரடியாக ரூ.1,07,900 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இதுபோக குறிப்பிட்ட பேங்க் கார்டுகளுக்கு கூடுதலாக டிஸ்கவுண்ட் பெற்று கொள்ளலாம். ஒயிட் டைட்டானியம் (White Titanium), நேச்சுரல் டைட்டானிம் (Natural Titanium) உள்ளிட்ட கலர்களில் கிடைக்கிறது.
ஐபோன் 16 ப்ரோ அம்சங்கள் (iPhone 16 Pro Specifications)
6.3 இன்ச் (2622 x 1206 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. இந்த சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் (Super Retina XDR) டிஸ்பிளே மாடலில் ப்ரோமோஷன் (ProMotion) டெக்னாலஜி கிடைக்கிறது. வழக்கமான ட்ரூ டோன் வருகிறது.
அதேபோல ஆல்வேஸ்-ஆன், டைனாமிக் ஐலேண்ட் மற்றும் எச்டிஆர் போன்ற பீச்சர்களும் கிடைக்கிறது. ஒட்டுமொத்தமாக செராமிக் ஷீல்டு (Ceramic Shield) பாதுகாப்பு கிடைக்கிறது. இந்த பாதுகாப்பு மட்டுமல்லாமல், IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது. ஐஓஎஸ் 18 (iOS 18) கொண்ட மாடலாக இருக்கிறது.
6 கோர் ஜிபியு கிராபிக்ஸ் கொண்ட சிக்ஸ் கோர் ஏ18 ப்ரோ 3என்எம் (Six Core A18 Pro 3nm) சிப்செட் கிடைக்கிறது. இந்த ஐபோன் 16 ப்ரோ மாடலில் ஆப்பிள் இன்டலிஜன்ஸ் (Apple Intelligence) வருகிறது. 128 ஜிபி ஸ்டோரேஜ் மட்டுமல்லாமல், 256 ஜிபி ஸ்டோரேஜ், 512 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 1 டிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்களும் கிடைக்கின்றன.
48 எம்பி மெயின் கேமரா + 12 டெலிபோட்டோ கேமரா + 48 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 12 எம்பி டெலிபோட்டோ கேமரா கொடுக்கிறது. 10X ஆப்டிகல் ஜூமிங், 25X டிஜிட்டல் ஜூமிங், 4K ரெக்கார்டிங் உள்ளது. 25W மேக்சேப் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 30W அடாப்டர் கிடைக்கிறது. கியூஐ2 மற்றும் கியூஐ சராஜிங் சப்போர்ட் கிடைக்கிறது.
செப்டம்பர் 9ஆம் தேதி ஐபோன் 17 சீரிஸ் (iPhone 17 Series) வெளியாகின்றன. இதில் ஐபோன் 17 (iPhone 17), ஐபோன் 17 ஏர் (iPhone 17 Air), ஐபோன் 17 ப்ரோ (iPhone 17 Pro) மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (iPhone 17 Pro Max) மாடல்கள் மட்டுமல்லாமல், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 (Apple Watch Series 11), ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3 (Apple Watch Ultra 3) உள்ளிட்ட பல்வேறு மாடல்கள் வர இருக்கின்றன.


Click it and Unblock the Notifications